SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முன்னெச்சரிக்கை தேவை

2020-09-27@ 00:38:38

கொரோனா ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் அக்டோபர் 1ம் தேதி முதல் 10, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. 7 மாதங்களுக்கு பிறகு மாணவர்கள் சீருடை அணிந்து பள்ளிக்கு செல்வதை இனி பார்க்க முடியும். ஆன்லைன் வகுப்பு, கல்வி தொலைக்காட்சி என்று சுயமாக பாடங்களை தயார் செய்து கொண்டு மாணவர்கள், பள்ளிக்கு சென்று ஆசிரியர்களை சந்தித்து சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்ளலாம். அதேசமயம், ஆன்லைன் வகுப்பை தொடரும் வசதியுள்ளவர்கள் அதையும் தொடரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் வகுப்பை கவனிக்க ஸ்மார்ட் போன் வாங்க முடியாமல் மாணவர்கள் தங்கள் உயிரை மாய்த்துக்கொண்ட வேதனையான சம்பவங்களும் அரங்கேறிவிட்டன. இனி இதுபோன்ற சம்பவங்களுக்கு அரசு இடம் கொடுக்கக்கூடாது. 50 சதவீத ஆசிரியர்கள் பள்ளிக்கு வருவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இரண்டு நாள் வரும் ஆசிரியர் அடுத்த இரண்டு நாள் விடுப்பு எடுத்து கொள்ளலாம்.

மாணவர்களும் விரும்பினால் பள்ளிக்கு வந்து செல்லலாம் என்கிற அனைத்து சுதந்திரத்துடன் வழிகாட்டுதல் விதிகள் வகுக்கப்பட்டு கொடுத்துள்ளது. எனவே, ஆர்வம் மிகுதியால் மாணவர்கள் பள்ளிகளில் சமூக இடைவெளியின்றி கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மனதில் கொண்டு ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகம் கடைபிடிக்க வலியுறுத்தும் கட்டுப்பாடுகளை ஏற்றுக்கொண்டு முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும்.
பள்ளியில் உணவு சாப்பிடும் கட்டாயம் ஏற்பட்டால் கைகளை நன்கு கழுவிய பிறகு சாப்பிடவும், சாப்பாட்டை பகிர்ந்துகொள்வதை கொஞ்சநாள் ஒத்திவைக்கலாம். மாணவர்கள் போதிய இடைவெளி விட்டு வகுப்பில் அமர வேண்டும். ஒருவருடன் ஒருவர் பேசும் போதும், ஆசிரியருடன் பேசும் போதும் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிப்பது கொரோனாவை தடுக்கும் வழிமுறையாகும். பள்ளியில் சுடுதண்ணீர் இருந்தால் மாணவர்கள் அதை பயன்படுத்தலாம் இல்லை வீட்டில் இருந்து கொண்டு செல்லலாம்.

சத்துள்ள உணவை சாப்பிடுங்கள். பெற்றோர்கள் மாணவர்களுக்கு நெல்லிக்காய் கொடுத்தனுப்பலாம். எலுமிச்சைசாறு பருகுதல், பழச்சாறு பருகுதல் ஆகியன மாணவர்களின் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும். இளங்கன்று பயமறியாது என்று அலட்சியத்துடன் இருக்கக்கூடாது. கொரோனாவை இன்னும் முழுமையாக நாம் வெற்றி கொள்ளவில்லை. இது குறித்த விழிப்புணர்வையும் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு வழங்க வேண்டும். காலாண்டு முடிந்து அரையாண்டு நெருங்கி வரும் நிலையில் போதிய முன்னெச்சரிக்கையை கடைபிடித்து மாணவர்கள் பாடங்களில் கவனம் செலுத்த வேண்டும். ஆசிரியர்கள் அதிக வீட்டுப்பாடச்சுமை கொடுத்து மாணவர்களை மன அழுத்தத்துக்கு உள்ளாக்காமல் சுதந்திரமாக அவர்கள் கற்றுக்கொள்ள அனுமதிக்க வேண்டும். பெற்றோரும் அடிக்கடி படிப்பில் கவனம் செலுத்து என்று வற்புறுத்தாமல் கனிவாக நடந்து கொள்வது அவசியம். பொதுத்தேர்வை எதிர்கொள்ள இருக்கும் மாணவர்கள் தங்கள் உடல் நலன், மனநலன் மீது அதிக அக்கறை காட்டி சாதித்து காட்ட வேண்டிய காலமிது என்பதை மனதில் கொள்ள வேண்டும்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • twins22

  தலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே!: அறுவை சிகிச்சைக்கு பின் சந்தோஷமாக நாடு திரும்பினர்..!!

 • mumbaitrain22

  7 மாதத்திற்கு பிறகு மும்பை மின்சார ரயிலில் பெண்கள் உற்சாக பயணம்!: 4 மகளிர் சிறப்பு ரயில்களும் இயக்கம்..!!

 • dinosauregg22

  பெரம்பலூரில் தோண்ட தோண்ட கிடைத்த ‘டைனோசர்’ முட்டைகள்!: ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. ‘மிரள’ வைத்த எண்ணிக்கை..வியப்பில் பொதுமக்கள்..!!

 • locusts22

  எத்தியோப்பியாவில் வெட்டுக்கிளிகள் அட்டகாசம்!: 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உணவு பயிர்கள் நாசம்..விவசாயிகள் வேதனை..!!

 • rainbowtree22

  உலக பொறியாளர்களின் கவனத்தை ஈர்த்த பிலிப்பைன்ஸ் ரெயின்போ ட்ரீ டவர்!: கண்கவரும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்