டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியவர்கள் மீதான விசாரணைக்கு தடை: ஐகோர்ட் அதிரடி உத்தரவு
2020-09-27@ 00:30:52

சென்னை: டாஸ்மாக் கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியவர்கள் மீதான வழக்கு விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. திருப்பூர் மாவட்டம் ஷியாமளபுரத்தில் 2017ம் ஆண்டு டாஸ்மாக் கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை காவல்துறை டிஎஸ்பி தாக்கியது மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது மங்கலம் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதில் 9 பேர் மீது மட்டுமே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதை எதிர்த்து பிரபாகரன் உட்பட 9 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த மனுவில், டாஸ்மாக் கடை திறக்கும்போது அந்த பகுதியில் உள்ள மக்கள் எதிர்ப்பை பரிசீலிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பொய்வழக்கு போடப்பட்டுள்ளது’’ என தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இளத்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பில் வக்கீல் கே.பாலு ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக திருப்பூர் மங்கலம் காவல்துறை பதிலளிக்கும்படியும் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் செய்திகள்
ஜெயலலிதா சிலை திறப்பு விழா..! மெரினா கடற்கரையை ஒட்டியுள்ள கல்லூரி மாணவிகள் கட்டாயம் பங்கேற்க உத்தரவு
மொழிப்போர் தியாகிகள் நினைவு தினம்!: ஊர்வலமாக சென்று திமுக-வினர் அஞ்சலி..உதயநிதி, ஆர். எஸ்.பாரதி உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
சென்னையில் குடியரசு விழா கோலாகலம்!: மின்னொளியில் ஜொலிக்கும் அரசு கட்டிடங்கள்...இரவிலும் பட்டொளி வீசிப் பறந்த மூவர்ணக்கொடி..!!
குடும்பத்துடன் தற்கொலை முயற்சியில் 3 பேர் பலி உயிர் பிழைத்த பிளம்பர் தூக்கிட்டு தற்கொலை
எர்ணாவூர் சுனாமி குடியிருப்பில் சிறார் மன்ற கட்டிடம்: கமிஷனர் திறந்து வைத்தார்
ஒப்பந்த காலம் முடிந்து 2 ஆண்டாகியும் ஆமை வேகத்தில் திருவொற்றியூர் மேம்பால பணி: வாகன ஓட்டிகள் கடும் அவதி
25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
24-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
22-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்!: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..!!
அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன், சாதனை படைத்த துணை அதிபர் கமலா ஹாரிஸ் பதவியேற்பு!: புகைப்படங்கள்