SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழகத்தில் மேலும் 5,647 பேருக்கு கொரோனா; மாநிலத்தின் மொத்த பாதிப்பு 5.75 லட்சமாக ஆக உயர்வு...சுகாதாரத்துறை அறிக்கை.!!!

2020-09-26@ 18:24:00

சென்னை: தமிழகத்தில் மேலும் 5,647 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 5,75,017-ஆக உயர்ந்துள்ளதாக என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.  தமிழகத்தில் தினமும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தினமும், தமிழக சுகாதாரத்துறை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி, சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட  அறிக்கையில்,  

* தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 5,19,448 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 5,612 பேர் குணமடைந்துள்ளனர்.

* தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 85 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தம் பலி எண்ணிக்கை 9,233-ஆக உயர்ந்துள்ளது.

* சென்னையில் இன்று ஒரே நாளில் 1,187 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 1,62,125 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* தமிழகத்தில் இதுவரை 70,04,558 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 94,037 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

* இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 182 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 46,336
 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

* தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 3,46,918 பேர் ஆண்கள், இன்றைக்கு மட்டும் 3,448 ஆண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 2,28,069 பேர் பெண்கள், இன்றைக்கு மட்டும் 2,199 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* தமிழகத்தில் இதுவரை மொத்தம் 30 திருநங்கைக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றைய தினம் யாருக்கும் தொற்று உறுதி செய்யப்படவில்லை.

* பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வந்த ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

* வெளிமாநிலங்களில் அல்லது வெளிநாடுகளில் இருந்து வந்து கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள்:

* ஆந்திரா - 01
* கர்நாடகா - 1


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-10-2020

    19-10-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • 16-10-2020

    16-10-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • farmerprotest15

    வேளாண் சட்ட சர்ச்சை பற்றிய பேச்சுக்கு மத்திய அமைச்சர் வராததால் பஞ்சாபில் தொடரும் போராட்டம்: சட்ட நகல்களை கிழித்து வீசிய விவசாயிகள்

  • telunganarain15

    ஆந்திரா, தெலுங்கானாவில் வரலாறு காணாத மழை: கரைபுரளும் வெள்ளத்தில் சிக்கி 32 பேர் பலி..!!

  • navarathri15

    நவராத்திரி விழாவுக்காக தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் சுவாமி சிலைகள்: துப்பாக்கி ஏந்தி இரு மாநில போலீசாரும் அணிவகுப்பு மரியாதை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்