எந்தவித நிபந்தனையும் இல்லாமல் வடகொரிய அதிபர் கிம் ஜாங்கை சந்திக்கத் தயார்: ஜப்பான் பிரதமர் சுகா பேச்சு
2020-09-26@ 14:30:52

ஜப்பான்: எந்தவித நிபந்தனையும் இல்லாமல் வடகொரிய அதிபர் கிம் ஜாங்கை சந்திக்கத் தயாராக இருப்பதாக ஜப்பான் பிரதமர் யோஷிஹிடே சுகா தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபையின் 75-வது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்ற ஜப்பான் பிரதமர் யோஷிஹிடே சுகா கூறுகையில், ஜப்பான் பிரதமராக எந்தவித நிபந்தனையும் இல்லாமல் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னைச் சந்திக்கத் தயாராக இருக்கிறேன். வடகொரியாவுடனான உறவை இயல்பாக்க ஜப்பான் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருக்கும்.
இந்தச் சந்திப்பு இரு நாட்டு உறவுகளுக்கு மட்டுமல்லாமல் பிராந்திய அமைதிக்கும் உதவும். இதற்கான நடவடிக்கையை நான் எடுப்பேன் என ஜப்பான் பிரதமர் கூறினார். கடந்த ஆண்டு அக்டோபர் 31 ஆம் தேதி வடகொரியா ஏவுகணைச் சோதனைகளை நடத்தியது. வடகொரியாவின் இந்த ஏவுகணைச் சோதனைகளை ஆசியாவின் ஜப்பான் உச்சி மாநாட்டில் ஜப்பான் கடுமையாக விமர்சித்தது. இதனைத் தொடர்ந்து ஜப்பானுடன் கடுமையான மோதல் போக்கை வடகொரியா கடைப்பிடித்தது. இந்நிலையில், உடல் நிலையைக் காரணம் காட்டி பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக ஷின்சோ அபே அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து ஜப்பானின் ஆளும் கட்சியான லிபரல் டெமாக்ரடிக் கட்சி, அடுத்த பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்கான பொதுக்குழுவை செப்டம்பர் 1 ஆம் தேதி கூட்டியது. இதனைத் தொடர்ந்து கட்சியின் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. இதில் ஷின்சோ அபேவின் அமைச்சரவையில் மூத்த அமைச்சராக இருக்கும் யோஷிஹிடே சுகா வெற்றி பெற்று கடந்த 15 ஆம் தேதி ஜப்பான் பிரதமராகப் பதவி ஏற்றார். பதவி ஏற்றது முதல் சர்வதேச நாடுகளுடான உறவைப் பலப்படுத்துவதில் ஆர்வம் காட்டி வருகிறார் சுகா.
Tags:
Unconditionally North Korean President Kim Jong Un ready to meet Japanese Prime Minister Suu Kyi talks நிபந்தனை இல்லாமல் வடகொரிய அதிபர் கிம் ஜாங் சந்திக்கத் தயார் ஜப்பான் பிரதமர் சுகா பேச்சுமேலும் செய்திகள்
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் வெளியுறவுத்துறை அமைச்சகம் அருகே குண்டுவெடிப்பு: 6 பேர் பலி; 10க்கும் மேற்பட்டோர் படுகாயம்..!
ஆப்கானித்தானில் பெண்கல்விக்கு தடை விதிப்பு: ஆன்லைன் கல்வி முறையை நாடும் மாணவிகள்
சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜப்பான் இளம் வீரர் ஹசேகாவா..!!
விலைவாசி உயர்வால் பிரிட்டனில் பலர் ஏழையாகிவிட்டனர்: நிதித்துறை அதிகாரி கருத்து
துனிசியாவில் இருந்து இத்தாலிக்கு கடல்வழியாக செல்ல முயன்ற அகதிகளின் படகுகள் கவிழ்ந்த விபத்து: 28 பேர் உயிரிழப்பு.! 60 பேர் மாயம்
கலிபோர்னியாவில் சீக்கியர்களின் கோயிலான குருத்வாராவில் துப்பாக்கிச் சூடு: 2 பேர் காயம்
சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜப்பான் இளம் வீரர் ஹசேகாவா..!!
அமெரிக்காவில் சாக்லெட் தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து; 7 பேர் உயிரிழப்பு..!!
வேரோடு சாய்ந்த மரங்கள், தூக்கி வீசப்பட்ட கார்கள்... அமெரிக்காவை புரட்டிப் போட்ட சக்திவாய்ந்த சூறாவளி சூறாவளி... 25 பேர் பலி..!
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்