SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஐ.என்.எஸ். புதிய தலைவராக ஆதிமூலம் தேர்வு

2020-09-26@ 00:07:58

பெங்களூரு: ஐ.என்.எஸ்., என்றழைக்கப்படும், ‘இந்திய பத்திரிகைகள் சங்கத்தின்’ புதிய தலைவராக, ஆதிமூலம் லட்சுமிபதி, ஒருமனதாக நேற்று தேர்வு செய்யப்பட்டார். அவருடன் புதிய நிர்வாகிகளும் தேர்வு செய்யப்பட்டனர்.அகில இந்திய அளவில், 800 பத்திரிகைகளை உறுப்பினர்களாகக் கொண்ட அமைப்புதான் ஐ.என்.எஸ். என, அழைக்கப்படும், இந்திய பத்திரிகைகள் சங்கம். இதன் 81வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் பெங்களூருவில் நேற்று காலை 11 மணிக்கு நடந்தது. இதில் தினமலர் கோவை பதிப்பு வெளியீட்டாளர் ஆதிமூலம் லட்சுமிபதி, இந்திய பத்திரிகைகள் சங்கத்தின் தலைவராக ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார். 25 ஆண்டுகளுக்குப்பின், தற்போதுதான் தமிழகத்தைச் சேர்ந்தவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.

நேற்று நடந்த ஆண்டு பொதுக்குழுக்கூட்டத்தில், துணை தலைவராக டி.டி.பூர்கயஸ்தா, உதவித்தலைவராக மோஹித் ஜெயின், கவுரவ பொருளாளராக ராகேஷ் சர்மா தேர்வு செய்யப்பட்டனர். தவிர, நிர்வாகக்குழு உறுப்பினர்களாக ‘தினகரன்’ நிர்வாக இயக்குனர் ஆர்.எம்.ஆர்.ரமேஷ், டாக்டர் ஆர்.லட்சுமிபதி, பாலசுப்ரமணிய ஆதித்தன் உள்பட 36 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • twins22

    தலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே!: அறுவை சிகிச்சைக்கு பின் சந்தோஷமாக நாடு திரும்பினர்..!!

  • mumbaitrain22

    7 மாதத்திற்கு பிறகு மும்பை மின்சார ரயிலில் பெண்கள் உற்சாக பயணம்!: 4 மகளிர் சிறப்பு ரயில்களும் இயக்கம்..!!

  • dinosauregg22

    பெரம்பலூரில் தோண்ட தோண்ட கிடைத்த ‘டைனோசர்’ முட்டைகள்!: ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. ‘மிரள’ வைத்த எண்ணிக்கை..வியப்பில் பொதுமக்கள்..!!

  • locusts22

    எத்தியோப்பியாவில் வெட்டுக்கிளிகள் அட்டகாசம்!: 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உணவு பயிர்கள் நாசம்..விவசாயிகள் வேதனை..!!

  • rainbowtree22

    உலக பொறியாளர்களின் கவனத்தை ஈர்த்த பிலிப்பைன்ஸ் ரெயின்போ ட்ரீ டவர்!: கண்கவரும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்