நியாயவிலைக் கடைகளில் மண்ணெண்ணெய் விலையை உயர்த்தியது நியாயமில்லாத செயல் : திமுக தலைவர் ஸ்டாலின் கடும் கண்டனம்!!
2020-09-25@ 13:04:14

சென்னை : நியாயவிலைக் கடைகளில் மண்ணெண்ணெய் விலையை உயர்த்தியது நியாயமில்லாத செயல் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.உணவுப் பொருள் வழங்கல் துறை ஆணையாளர் சஜன்சிங் சவாண் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், 'நியாயவிலைக் கடைகளில் வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல், மண்ணெண்ணெய் ஒரு லிட்டருக்கு 1.50 ரூபாய் உயர்த்தப்படுகிறது. இதனால், 15 ரூபாய் என இருந்த ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் விலை, 16.50 ரூபாயாக உயர்த்தப்படுகிறது,' எனத் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள, செய்தியின் விவரம் பின்வருமாறு:
'பெரும்பான்மை ஏழை - எளிய மக்கள் சமையலுக்கான எரிபொருளாகப் பயன்படுத்தும் மண்ணெண்ணெய் விலையை, நியாய விலைக் கடைகளில் வரும் அக்டோபர் 1 முதல், ஒரு லிட்டருக்கு 1.50 ரூபாய் உயர்த்தி, 15 ரூபாய் என்பதை, 16.50 ரூபாய்க்கு விற்கப் போகிறார்களாம். மண்ணெண்ணெயின் இந்த விலை உயர்வு கண்டனத்திற்குரியது.
கொரோனா நோய்த் தொற்றின் விளைவாக, வாங்கும் சக்தியைப் பெருமளவுக்கு இழந்திருக்கும் எளிய மக்களின் முதுகில், அ.தி.மு.க. அரசு, விலை உயர்வின் மூலம், மேலும் சுமையை ஏற்றுவது, சிறிதும் இரக்கமில்லாத - நியாயமில்லாத செயல்!
இந்த விலை உயர்வை அரசே ஏற்றுக்கொண்டு, பழைய விலையிலேயே நியாய விலைக் கடைகளில் மண்ணெண்ணெயை வழங்க வேண்டும்,' என்று தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்
பேரறிவாளன் விவகாரத்தில் நடப்பது என்ன?.. உச்சநீதிமன்றத்தில் விளக்கம் கேட்கிறாரா தமிழக ஆளுநர்?
நன்றி கொன்ற இருவர் நடத்தும் நாடகம்: ஜெயலலிதா நினைவிடம் திறப்பு விழா குறித்து மு.க.ஸ்டாலின் அறிக்கை.!!!
தமிழகத்தில் கொரோனாவால் மேலும் 523 பேர் பாதிப்பு: 595 பேர் குணம்; 5 பேர் பலி...சுகாதாரத்துறை அறிக்கை..!
குடியரசு நாளில் விவசாயிகள் மீது தாக்குதலா? : திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி கண்டனம்
டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் காவல்துறையே கலவரத்தை உண்டாக்கத் திட்டமிட்டது : வைகோ பாய்ச்சல்
ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்ம முடிச்சுகளை அவிழ்க்காமல் அவருக்கு நினைவிடம் திறப்பது ஏமாற்று வேலை : கே.எஸ்.அழகிரி பாய்ச்சல்
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!
அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, சாகசங்கள், பாரம்பரிய நடனங்களோடு குடியரசு தின விழா கோலாகலம் : விழாக்கோலம் பூண்டது மெரினா!!
26-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
அற்புதங்களை கண்டு ரசிக்க 2 கண்கள் போதாது!: விஞ்ஞானிகளால் கூட நம்ப முடியாத சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்..!!