SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கும்மிடிப்பூண்டி அதிமுக எம்எல்ஏ விஜயகுமாருக்கு கொரோனா

2020-09-25@ 00:05:18

சென்னை: கும்மிடிப்பூண்டி தொகுதி அதிமுக எம்எல்ஏ விஜயகுமாருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.  திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கும்மிடிப்பூண்டி தொகுதி அதிமுக எம்எல்ஏவாக  இருப்பவர் கே.எஸ்.விஜயகுமார் (50). இவர், பெரியபாளையம் அருகே மஞ்சங்காரணை கிராமத்தில் உள்ள வீட்டில் குடும்பத்துடன்  வசித்து வருகிறார். இவர், கடந்த ஏப்ரல் மாதம் முதல் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் மட்டுமல்லாமல், கட்சி வழங்கிய நலத்திட்ட உதவிகளையும் வழங்கி வருகிறார்.

கும்மிடிப்பூண்டி பகுதியில் வேகமாக கொரோனா தொற்று பரவி வரும் நிலையில் விஜயகுமார் எம்எல்ஏ, இதுவரை 8 முறை கொரோனா பரிசோதனை செய்துள்ளார். அதில், அவருக்கு தொற்று இல்லை என தெரியவந்தது. சட்டசபை கூட்டத்தொடருக்கு சென்றபோதும் கொரோனா தொற்று இல்லை.
இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு 9வது முறையாக கொரோனா பரிசோதனை செய்ததில், விஜயகுமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவருக்கு லேசான சளித்தொல்லை மட்டுமே இருப்பதால் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mumbaitrain22

    7 மாதத்திற்கு பிறகு மும்பை மின்சார ரயிலில் பெண்கள் உற்சாக பயணம்!: 4 மகளிர் சிறப்பு ரயில்களும் இயக்கம்..!!

  • dinosauregg22

    பெரம்பலூரில் தோண்ட தோண்ட கிடைத்த ‘டைனோசர்’ முட்டைகள்!: ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. ‘மிரள’ வைத்த எண்ணிக்கை..வியப்பில் பொதுமக்கள்..!!

  • locusts22

    எத்தியோப்பியாவில் வெட்டுக்கிளிகள் அட்டகாசம்!: 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உணவு பயிர்கள் நாசம்..விவசாயிகள் வேதனை..!!

  • rainbowtree22

    உலக பொறியாளர்களின் கவனத்தை ஈர்த்த பிலிப்பைன்ஸ் ரெயின்போ ட்ரீ டவர்!: கண்கவரும் புகைப்படங்கள்

  • vietnam22

    வியட்நாமை துவம்சம் செய்த கனமழை!: வெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கைபேரிடர்களில் சிக்கி 111 பேர் பலி.. பலர் மாயம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்