SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மழைவளம் காப்போம்

2020-09-25@ 00:04:58

உலக அளவில் மழை வளம் குறைந்து வருவதற்கு, கோடிக்கணக்கான  மரங்கள் வெட்டி அழிக்கப்படுவதும், காட்டுத்தீயுமே முக்கிய காரணமென ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மரங்களால் மழையா, மழையால் மரங்களா... என்று கேள்வி எழலாம். இரண்டுமே மண்ணுக்கும், மனித வாழ்க்கை கட்டமைப்புக்கும், மிகவும் அவசியம் என்பதை உணர வேண்டும். ஐகோர்ட் மதுரை கிளையில், விசாரணைக்கு வந்த ஒரு வழக்கில், ‘‘கன்னியாகுமரி முதல் வாரணாசி வரையிலான நெடுஞ்சாலை விரிவாக்கத்தின் போது சாலைகளின் இருபுறமும் இருந்த சுமார் 1.78 லட்சம் மரங்கள் தேசிய நெடுஞ்சாலைத்துறையினரால் வெட்டப்பட்டன. இதற்காக சுமார் 10 லட்சம் மரக்கன்றுகளை நட்டு பராமரித்திருக்க வேண்டும்.

வெட்டிய மரங்களுக்கு ஈடாக புதிய மரக்கன்றுகளை நடவில்லை’’ என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது நீதிபதிகள், ‘‘சுற்றுச்சூழல் பாதிப்பால் பருவமழை தவறுகிறது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, சாலை விரிவாக்கத்தின்போது ஒரு மரம் வெட்டப்பட்டால், அதற்கு ஈடாக 10 மரக்கன்றுகள் நட்டு பராமரிக்க வேண்டும். அப்படி செய்ய முடியாவிட்டால், மரங்களை ஏன் வெட்ட வேண்டும்? சென்னை - மதுரை இடையே சாலை விரிவாக்கத்திற்காக வெட்டப்பட்ட மரங்களுக்கு பதிலாக எத்தனை மரக்கன்றுகள் நடப்பட்டு வளர்க்கப்படுகின்றன?’’ என கேள்வி எழுப்பி, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

மரங்கள், காடுகளின் அவசியத்தை வலியுறுத்தவே ஆண்டுதோறும் உலக வன தினம் கடைபிடிக்கப்படுகிறது. பல கோடி உயிரினங்களின் அடிப்படை ஆதாரமாகக் காடுகள் விளங்குகின்றன. உலகளவில் 160 கோடி பேர் தினசரி வாழ்க்கைக்கு காடுகளையே நம்பியுள்ளனர். காடுகளை அழிப்பதன் மூலம் மழை வளத்தை மட்டுமல்ல... மனித இனத்தையும் சேர்த்தே நாம் அழிக்கிறோம். ஒரு நாட்டின் பரப்பளவில் 33 சதவீதம் காடுகள் இருக்க வேண்டும் என்பது விதி. ஆனால், நகர், சாலை விரிவாக்கம் உட்பட பல காரணங்களால், நாம் வனப்பரப்பை, மரங்களை அழித்து வருகிறோம். உலகளவில் ஒரு ஆண்டுக்கு 1.3 கோடி ஹெக்டேர் பரப்பளவு காடுகள், நகரமயமாக்கலால் அழிக்கப்பட்டு வருவதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.

உலகின் மிகப்பெரிய மழைக்காடுகளான, அமேசான் காடுகள் காட்டுத்தீயால் அழிந்து வருவது கவலைக்குரிய விஷயம். அமேசான் காடுகளில் 60 சதவீதம் பிரேசிலில் உள்ளன. செயற்கைக்கோள் ஆய்வின்படி, 2020ம் ஆண்டின் முதல் 7 மாதத்தில் 13,000 சதுர கிலோமீட்டர் அமேசான் மழைக்காடுகள் எரிந்து சாம்பலாகியுள்ளன. இது எங்கேயோ ஓரிடத்தில் நிகழும் சம்பவம்தானே என அலட்சியம் காட்டக்கூடாது. மழைக்காடுகள் அதிகளவு அழியும்போது, பூமியில்  ஈரத்தன்மை மிகவும் குறையும். இதனால் மழை வளம் பாதித்து, காற்று மண்டலம் வெப்பமடையும். சுற்றுச்சூழல் மாசுபடும்.

தேனி மாவட்ட மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள மேகமலையில் அதிகளவு மரங்கள் வெட்டி கடத்தப்பட்டன. இதனால் தென்மாவட்ட அளவில் மழையளவு குறைந்து வருகிறது. ஒரு நாட்டிற்கு வளர்ச்சி என்பது முக்கியமானது தான். ஆனால், அதற்காக இயற்கை வளங்களை பறி கொடுக்கக்கூடாது. தூய்மையான ஆக்சிஜன் தரும் ‘இயற்கை வென்டிலேட்டர்’ எனப்படும் மரங்களை பறிகொடுத்ததால் தான், இன்று நாம் செயற்கை வென்டிலேட்டரை தேடி அலைகிறோம். இனியாவது, மரம் வளர்ப்போம்... மழை பெறுவோம் என்ற எண்ணத்தை மனதில் விதைப்போம்.. மண்ணில் பசுமை விதைகளை தூவுவோம்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News Advertisement
Like Us on Facebook Dinkaran Daily News
 • carbomb28

  ஆப்கானிஸ்தானில் இருவேறு இடங்களில் நடந்த கார் வெடிகுண்டு தாக்குதல்: போலீசார், அப்பாவி பொதுமக்கள் உட்பட 8 பேர் உயிரிழப்பு..!!

 • molave28

  வியட்நாமில் கோரத்தாண்டவம் ஆடிய molave புயல்!: 13 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம்..!!

 • haryana28

  மதம் மாற மறுத்த இளம்பெண்..பட்டப்பகலில் துப்பாக்கியால் சுட்டு கொலை!: குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி பல இடங்களில் ஆர்ப்பாட்டம்..!!

 • water28

  தென் அமெரிக்காவில் 2,000 ஆண்டுக்களுக்கு முந்தைய மக்களான மயன் நாகரிகத்தினர் பயன்படுத்திய நீர் சுத்திகரிப்பு மையம் கண்டுபிடிப்பு: ஆச்சர்யத்தில் ஆய்வாளர்கள்..!!

 • biharele28

  கொரோனா பாதிப்புகளுக்கு இடையே பீகார் சட்டசபை தேர்தல் 2020: முதல் கட்டமாக 71 தொகுதிகளில் வாக்கு பதிவு தொடக்கம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்