SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கொரோனா தொற்றால் இறந்த விஞ்ஞானி சேகர் பாசு மறைவுக்கு அணு ஆராய்ச்சி மையம் இரங்கல்

2020-09-25@ 00:03:54

சென்னை: அணுசக்தி ஆணைய முன்னாள் தலைவரும், அணு விஞ்ஞானியுமான சேகர் பாசு, கொரோனாவால் பாதிக்கப்பட்டு கொல்கத்தாவில் காலமானார். அவரது மறைவுக்கு கல்பாக்கத்தில் உள்ள இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையம் இரங்கல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது: அணு விஞ்ஞானி சேகர் பாசு, கடந்த 2015 அக்டோபர் 23 முதல் 2018 செப்டம்பர் 17ம் தேதி வரை அணுசக்தி ஆணைய தலைவராகவும், அணுசக்தி துறை செயலாளராகவும் பணிபுரிந்துள்ளார். பாபா அணு ஆராய்ச்சி மைய இயக்குநராகவும் பதவி வகித்துள்ளார். அரிஹந்த் அணுசக்தி நீர்மூழ்கி கப்பலுக்கான 80 மெகாவாட் அழுத்தநீர் அணு உலை உருவாக்கியதில் முக்கிய பங்கு வகித்தவர்களில் சேகர் பாசுவும் ஒருவர்.

மகாராஷ்டிர மாநிலம் தாராப்பூர், தமிழகத்தில் கல்பாக்கம் ஆகிய இடங்களில் அணு மறு சுழற்சி நிலையம் உருவாக்கியதிலும் மிகுந்த ஈடுபாட்டுடன் செயல்பட்டவர். இந்தியாவின் அணு சக்தி திட்டங்களின் மேம்பாட்டுக்கு இவரது பங்களிப்பு மிக ஊக்கம் அளிப்பதாக அமைந்தது. இதுபோல், மருத்துவமனைகள் கட்டுமானம் மற்றும் தர மேம்பாடு, புற்றுநோய் மருந்து உருவாக்கம் உட்பட பல்வேறு முக்கிய திட்டங்களிலும், ஆய்வுகளிலும் இவரது பங்களிப்பு அளப்பரியது. கல்பாக்கம் அருகே வாயலூரில் தடுப்பணை கட்டுமானத்துக்கான அனுமதியில் இவரது பங்களிப்பு முக்கிமானது. 8 பல்கலைக்கழகங்கள் இவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்துள்ளன. அணுசக்தி துறையில் இவரது தன்னிகரற்ற பணிக்காக 2014ம் ஆண்டில் இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது. இவரது இழப்பு அணுசக்தி துறைக்கு பேரிழப்பாகும். அணுசக்தி துறையின் சார்பில் இவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்களை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • twins22

    தலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே!: அறுவை சிகிச்சைக்கு பின் சந்தோஷமாக நாடு திரும்பினர்..!!

  • mumbaitrain22

    7 மாதத்திற்கு பிறகு மும்பை மின்சார ரயிலில் பெண்கள் உற்சாக பயணம்!: 4 மகளிர் சிறப்பு ரயில்களும் இயக்கம்..!!

  • dinosauregg22

    பெரம்பலூரில் தோண்ட தோண்ட கிடைத்த ‘டைனோசர்’ முட்டைகள்!: ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. ‘மிரள’ வைத்த எண்ணிக்கை..வியப்பில் பொதுமக்கள்..!!

  • locusts22

    எத்தியோப்பியாவில் வெட்டுக்கிளிகள் அட்டகாசம்!: 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உணவு பயிர்கள் நாசம்..விவசாயிகள் வேதனை..!!

  • rainbowtree22

    உலக பொறியாளர்களின் கவனத்தை ஈர்த்த பிலிப்பைன்ஸ் ரெயின்போ ட்ரீ டவர்!: கண்கவரும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்