SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மியான்மரில் தஞ்சமடைந்த மீனவர்களில் ஒருவர் மாயம்: உறவினர்கள் அதிர்ச்சி

2020-09-25@ 00:03:22

தண்டையார்பேட்டை: காசிமேடு நாகூரார் தோட்டத்தை சேர்ந்த பாலாஜிக்கு சொந்தமான விசைப்படகில் திருவொற்றியூர் குப்பம், திருச்சினாங்குப்பம் பகுதியை சேர்ந்த பார்த்திபன், லட்சுமணன், சிவகுமார், பாபு உள்ளிட்ட 10 மீனவர்கள் கடந்த ஜூலை 23ம் தேதி ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். 7 நாட்களில் கரை திரும்ப வேண்டிய அவர்கள், 50 நாட்களுக்கு மேலாகியும் கரைக்கு திரும்பாததால் அச்சமடைந்த உறவினர்கள், மீன்வளத்துறை அலுவலகத்தில் புகார் அளித்தனர். ஆனால், எந்த நடவடிக்கையும் இல்லாததால் மறியல், முற்றுகை போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், மாயமான மீனவர்களில் 9 பேர் கடந்த 13ம் தேதி இரவு மியான்மர் கடல் பகுதியில் தத்தளித்தபோது, ரோந்து சென்ற மியான்மர் கடற்படையினர் அவர்களை மீட்டு, தமிழக மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
விசாரணையில், நாங்கள் கடலுக்கு புறப்பட்ட முதல் நாளே பிரச்னை காரணமாக ஒரு மீனவர் விசைப்படகை விட்டு இறங்கி விட்டார், எனதெரிவித்துள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் மியான்மர் நாட்டில் வானிலை மோசமானதால், கடல் சீற்றமாக இருந்தது.

இதனால், மீட்கப்பட்ட 9 மீனவர்களில் ரகு மற்றும் பாபு என்ற இருவர், தங்களது விசைப்படகை பாதுகாப்பாக நிறுத்த முயற்சித்தபோது அலையில் சிக்கி மாயமாகினர். இதில் ரகுவை அப்பகுதி மீனவர்கள் மீட்டனர். பாபு மாயமாகியுள்ளார். மியான்மர் கடற்படையினர் அவரை தேடி வருகின்றனர். இந்த செய்தி அறிந்து மாயமான பாபுவின் குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கியுள்ளனர். மியான்மரில் தஞ்சமடைந்த மீனவர்களை மீட்க மத்திய மற்றும் மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்காததால், தற்போது ஒரு மீனவர் மாயமாகி உள்ளார். எனவே, மீதமுள்ள மீனவர்களை விரைந்து தமிழகம் கொண்டு வர வேண்டும், மாயமான மீனவரை தீவிரமாக தேடி கண்டுபிடிக்க வேண்டும், என மீனவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mumbaitrain22

    7 மாதத்திற்கு பிறகு மும்பை மின்சார ரயிலில் பெண்கள் உற்சாக பயணம்!: 4 மகளிர் சிறப்பு ரயில்களும் இயக்கம்..!!

  • dinosauregg22

    பெரம்பலூரில் தோண்ட தோண்ட கிடைத்த ‘டைனோசர்’ முட்டைகள்!: ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. ‘மிரள’ வைத்த எண்ணிக்கை..வியப்பில் பொதுமக்கள்..!!

  • locusts22

    எத்தியோப்பியாவில் வெட்டுக்கிளிகள் அட்டகாசம்!: 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உணவு பயிர்கள் நாசம்..விவசாயிகள் வேதனை..!!

  • rainbowtree22

    உலக பொறியாளர்களின் கவனத்தை ஈர்த்த பிலிப்பைன்ஸ் ரெயின்போ ட்ரீ டவர்!: கண்கவரும் புகைப்படங்கள்

  • vietnam22

    வியட்நாமை துவம்சம் செய்த கனமழை!: வெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கைபேரிடர்களில் சிக்கி 111 பேர் பலி.. பலர் மாயம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்