SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விசாரணைக்கு அழைத்து சென்று சித்ரவதை இன்ஸ்பெக்டர் உட்பட 4 பேருக்கு ரூ.1.75 லட்சம் அபராதம்: மனித உரிமை ஆணையம் உத்தரவு

2020-09-25@ 00:03:19

சென்னை: சென்னை கே.கே.நகரை சேர்ந்த அபுல்ஹசன், மாநில மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
கடந்த 2013ம் ஆண்டு குடும்ப பிரச்னை காரணமாக எனக்கு எதிராக அளிக்கப்பட்ட புகாரை அசோக்நகர் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் பசுபதி, ஏட்டு மீராபாய் மற்றும் வரலட்சுமி ஆகியோர் விசாரணை நடத்தினர்.
அதன்பிறகு எதிர்தரப்பிடம் இருந்து ரூ.1 லட்சத்தை பெற்றுக்கொண்டு என் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும், விசாரணை என்ற பெயரில் 8 நாட்கள் என்னை காவல்நிலையத்தில் அடைத்து வைத்து துன்புறுத்தி சித்ரவதை செய்தனர். எனவே இன்ஸ்பெக்டர் உள்ளிட்டோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

மனுவை விசாரித்த ஆணையத்தின் உறுப்பினர் சித்தரஞ்சன் மோகன்தாஸ், சாட்சியம் மற்றும் ஆவணங்களை வைத்து பார்க்கும்போது மனித உரிமை மீறல் நடந்திருப்பது தெரியவந்துள்ளது. எனவே தமிழக அரசு மனுதாரருக்கு இழப்பீடாக ரூ.1 லட்சத்து 75 ஆயிரம் 2 மாதத்துக்குள் வழங்க வேண்டும். இந்த தொகையை இன்ஸ்பெக்டர் லட்சுமியிடம் இருந்து ரூ.1 லட்சமும், மற்ற 3 பேரிடம் இருந்து தலா ரூ.25 ஆயிரமும் வசூலித்துக் கொள்ளலாம். இவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • twins22

    தலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே!: அறுவை சிகிச்சைக்கு பின் சந்தோஷமாக நாடு திரும்பினர்..!!

  • mumbaitrain22

    7 மாதத்திற்கு பிறகு மும்பை மின்சார ரயிலில் பெண்கள் உற்சாக பயணம்!: 4 மகளிர் சிறப்பு ரயில்களும் இயக்கம்..!!

  • dinosauregg22

    பெரம்பலூரில் தோண்ட தோண்ட கிடைத்த ‘டைனோசர்’ முட்டைகள்!: ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. ‘மிரள’ வைத்த எண்ணிக்கை..வியப்பில் பொதுமக்கள்..!!

  • locusts22

    எத்தியோப்பியாவில் வெட்டுக்கிளிகள் அட்டகாசம்!: 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உணவு பயிர்கள் நாசம்..விவசாயிகள் வேதனை..!!

  • rainbowtree22

    உலக பொறியாளர்களின் கவனத்தை ஈர்த்த பிலிப்பைன்ஸ் ரெயின்போ ட்ரீ டவர்!: கண்கவரும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்