SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நம்ம சென்னை செயலி மூலம் மருத்துவமனை குறைபாடுகள் தொடர்பாக புகார் அளிக்கலாம்: 3 நாட்களில் தீர்வு என மாநகராட்சி தகவல்

2020-09-25@ 00:03:05

சென்னை: மாநகராட்சி மருத்துவமனைகளின் குறைபாடுகள் தொடர்பாக நம்ம சென்னை செயலியில் புகார் அளிக்கலாம் என்றும், இதன் மீது 3 நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் மன்றத்துறை, வருவாய் மற்றும் நிதி, கல்வி, சுகாதாரம், பொதுத்துறை, நிலம் மற்றும் உடமைத்துறை, இந்திய பொறியியல், மின்சாரம், திடக்கழிவு மேலாண்மை, கட்டிடம், சுகாதாரம், மழைநீர் வடிகால், சிறப்பு திட்டங்கள், பேருந்து சாலைகள், பாலங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த துறைகளின் மூலம் பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது.

இவற்றில் உள்ள குறைபாடுகள் தொடர்பாக பொதுமக்கள் 1913 என்ற எண்ணில் புகார் அளிக்கும் வசதி ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வந்தது. இதனை தொடர்ந்து ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பொதுமக்கள் புகார் அளிக்க நம்ம சென்னை செயலி கடந்த 2018ம் ஆண்டு தொடங்கப்பட்டது. மாநகராட்சி பகுதிகளில் குப்பை தேங்குவது, மழைநீர் வடிகால், தெருவிளக்கு உள்ளிட்ட தினசரி பிரச்னை தொடர்பாக பொதுமக்கள் இந்த செயலியில் புகார் அளித்து வந்தனர். தற்போது பல பிரிவுகள் இந்த செயலியில் சேர்க்கப்பட்டுள்ளன. குறிப்பாக மாநகராட்சி மருத்துவமனைகளில் உள்ள குறைபாடுகள் தொடர்பாக புகார் அளிக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மாநகராட்சி தொற்று நோய் மருத்துவமனை தொடர்பாகவும் புகார் அளிக்கலாம். இந்த புகார்கள் மீது 3 நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பிரிவிலும் பிரச்னை தொடர்பாக புகார் அளிக்கலாம். இந்த புகார் மீது எத்தனை நாட்களில் தீர்வு காணப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி கட்டிட அனுமதி தொடர்பான புகார்கள் 7 நாட்களிலும், பூங்கா மற்றும் விளையாட்டு மைதானம் தொடர்பான புகார்கள் 1 முதல் 3 நாட்களிலும், திடக்கழிவு மேலாண்மை தொடர்பான புகார்கள் 1 முதல் 7 நாட்களிலும், பொது சுகாதாரம் தொடர்பான புகார்கள் 1 முதல் 7 நாட்களிலும், தெரு விளக்கு
தொடர்பான புகார்கள் 1 முதல் 7 நாட்களிலும், வரி தொடர்பான புகார்கள் 7 நாட்களிலும், வாக்காளர் சேவை தொடர்பான புகார்கள் 3 முதல் 7 நாட்களிலும், நடைபாதை தொடர்பான புகார்கள் 3 முதல் 7 நாட்களிலும், பொதுவான புகார்கள் 1 முதல் 7 நாட்களிலும் தீர்வு காணப்படும்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mumbaitrain22

    7 மாதத்திற்கு பிறகு மும்பை மின்சார ரயிலில் பெண்கள் உற்சாக பயணம்!: 4 மகளிர் சிறப்பு ரயில்களும் இயக்கம்..!!

  • dinosauregg22

    பெரம்பலூரில் தோண்ட தோண்ட கிடைத்த ‘டைனோசர்’ முட்டைகள்!: ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. ‘மிரள’ வைத்த எண்ணிக்கை..வியப்பில் பொதுமக்கள்..!!

  • locusts22

    எத்தியோப்பியாவில் வெட்டுக்கிளிகள் அட்டகாசம்!: 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உணவு பயிர்கள் நாசம்..விவசாயிகள் வேதனை..!!

  • rainbowtree22

    உலக பொறியாளர்களின் கவனத்தை ஈர்த்த பிலிப்பைன்ஸ் ரெயின்போ ட்ரீ டவர்!: கண்கவரும் புகைப்படங்கள்

  • vietnam22

    வியட்நாமை துவம்சம் செய்த கனமழை!: வெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கைபேரிடர்களில் சிக்கி 111 பேர் பலி.. பலர் மாயம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்