SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்: மருத்துவ நிர்வாகம் அறிக்கை.!!!

2020-09-24@ 18:53:25

சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவ நிர்வாகம் தெரிவித்துள்ளது. 74 வயதுடைய பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் கடந்த மாதம் ஆகஸ்ட் 5-ம் தேதி கொரோனா தொற்று காரணமாக சென்னையில் உள்ள எம்.ஜி.எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து, அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். சிகிச்சைக்கு நல்லபடியாக ஒத்துழைத்து வந்த அவருடைய உடல் நிலை கடந்த ஆகஸ்ட் 14-ம் தேதி மோசமடைந்தது. தினமும் அவருடைய உடல்நிலை குறித்து மகன் எஸ்.பி.சரண் வீடியோவாக வெளியிட்டு வருகிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன் எஸ்.பி. சரண் வெளியிட்டுள்ள பதிவில், “அப்பா நலம் பெறுவதற்கான நிலையான முன்னேற்றத்தைத் தொடர்கிறார். எக்மோ / வென்டிலேட்டர், (ICU) பிசியோதெரபி வாய்வழி திரவங்களுடன் தொடர்கிறது. அவர் விரைவில் மருத்துவமனையை விட்டு வெளியேற ஆர்வமாக உள்ளார் என்று பதிவிட்டு இருந்தார்.

இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவ நிர்வாகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது. தொடர்ந்து, எக்மோ கருவி மூலம் சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவக் குழுவினரின் தொடர் கண்காணிப்பில் எஸ்.பி.பி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் உடல்நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டது. உயிர் காக்கும் கருவிகள் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது என்று மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • twins22

    தலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே!: அறுவை சிகிச்சைக்கு பின் சந்தோஷமாக நாடு திரும்பினர்..!!

  • mumbaitrain22

    7 மாதத்திற்கு பிறகு மும்பை மின்சார ரயிலில் பெண்கள் உற்சாக பயணம்!: 4 மகளிர் சிறப்பு ரயில்களும் இயக்கம்..!!

  • dinosauregg22

    பெரம்பலூரில் தோண்ட தோண்ட கிடைத்த ‘டைனோசர்’ முட்டைகள்!: ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. ‘மிரள’ வைத்த எண்ணிக்கை..வியப்பில் பொதுமக்கள்..!!

  • locusts22

    எத்தியோப்பியாவில் வெட்டுக்கிளிகள் அட்டகாசம்!: 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உணவு பயிர்கள் நாசம்..விவசாயிகள் வேதனை..!!

  • rainbowtree22

    உலக பொறியாளர்களின் கவனத்தை ஈர்த்த பிலிப்பைன்ஸ் ரெயின்போ ட்ரீ டவர்!: கண்கவரும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்