SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Sputnik-V என்ற இரண்டாவது கொரோனா தடுப்பூசியை ரஷ்யா விரைவில் பதிவு செய்யும்: ரஷ்ய அதிபர் புடின் தகவல்

2020-09-24@ 14:28:44

மாஸ்கோ: கொரோனா வைரஸ் தொற்றுக்கு இதுவரை ரஷ்யா மட்டுமே தடுப்பூசி கண்டறிந்துள்ளதாக அறிவித்துள்ளது. ரஷ்யா விரைவில் இரண்டாவது கொரோனா தடுப்பூசியை பதிவு செய்யும் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உயர்சபை சட்டமன்ற உறுப்பினர்களிடம் கூறினார். ‛Sputnik-V' என பெயரிடப்பட்டுள்ள இந்த தடுப்பூசியை கடந்த ஆகஸ்டு மாதம் பதிவு செய்து தற்போது உற்பத்தியை தொடங்கியுள்ளதாகவும் அறிவித்திருந்தது. மற்ற நாடுகள் தடுப்பூசி கண்டறிவதில் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் ரஷ்யா தனது இரண்டாவது தடுப்பூசியையும் கண்டறிந்து இறுதிக்கட்ட பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.

Vector மையத்தின் கொரோனா தடுப்பூசியான ‛Epivacorona' ரஷ்யாவின் இரண்டாவது தடுப்பூசியாகும். இந்த தடுப்பூசி பதிவை அக்டோபர் 15ம் தேதிக்குள் முடிக்கப்போவதாக ரஷ்ய சுகாதார அமைச்சகம் கூறியது. ரஷ்யாவின் சுகாதார அமைப்பு இப்போது கொரோனாவை திறம்பட எதிர்கொள்ள தயாராக உள்ளது என ரஷ்ய உயர்சபை சட்டமன்ற உறுப்பினர்களிடம் புடின் கூறினார். இந்த நெருக்கடியான காலக்கட்டத்தில் மனித உயிர்களின் மதிப்பினை உணர்ந்து நாட்டின் சுகாதாரத்துறையும், கொரோனா முன்கள பணியாளர்களும் தங்களின் மகத்தான பங்களிப்பை வழங்கியுள்ளனர். இப்போது நம் நாடு கொரோனா வைரஸை எதிர்கொள்ளும் ஆற்றலுடன் உள்ளது என தெரிவித்தார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • jaipourelephant20

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கோட்டையில் மீண்டும் யானை சவாரிக்கு அனுமதி!..

  • delhiformer20

    வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா, பஞ்சாப்பில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி - கண்ணீர்புகை, தண்ணீர் பீய்ச்சி விரட்டியடிப்பு

  • nivarpondyvilupuram20

    நிவர் புயல் கரையை கடந்த நிலையில் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் சேதமடைந்த இடங்கள் ! புகைப்படங்கள்

  • nivarkadaloorcmvisit20

    நிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி!..

  • nivarthirvannamali20

    திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூரில் நிவர் புயலின் தாக்கம் !... புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்