இளைஞர் செல்வன் கொலை தொடர்பாக ஆய்வாளர், திருமணவேல் உள்பட 6 பேர் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளது சிபிசிஐடி
2020-09-23@ 16:50:55

தூத்துக்குடி: தூத்தக்குடி மாவட்டம் தட்டார்மடத்தைச் சேர்ந்த இளைஞர் செல்வன் கொலை தொடர்பாக ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன், திருமணவேல் உள்பட 6 பேர் மீது சிபிசிஐடி கொலை வழக்குப் பதிவு செய்துள்ளது. கடந்த 17ம் தேதி இளைஞர் செல்வன் கடத்தி கொலை செய்யப்பட்டார். நெல்லையில் இளைஞர் செல்வன் கொலை வழக்கில் இன்று காலை சி.பி.சி.ஐ.டி. விசாரணை தொடங்கியது. இந்த கொலை வழக்கில் 6 குழுக்களாக பிரிந்து விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் திட்டமிட்டிருந்தனர். தூத்துக்குடி அருகே தட்டார்மடத்தில் நிலத்தகராறு காரணமாக கடந்த 17ஆம் தேதி செல்வன் கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக டிஜிபி உத்தரவிட்டிருந்தார்.
இந்த வழக்கில் அதிமுக பிரமுகர் திருமணவேல் உட்பட இருவர் சரண் அடைந்தனர். இதுகுறித்து திசையன்விளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், தட்டார்மடம் அருகே உசரத்துகுடியிருப்பைச் சேர்ந்த அ.தி.மு.க. தெற்கு மாவட்ட வர்த்தகர் அணி தலைவரான திருமணவேலுக்கும், செல்வனுக்கும் இடையே சொத்து பிரச்சினை இருந்ததும், இதனால் செல்வன் கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது.
மேலும் செய்திகள்
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நாளை தைத் தேரோட்டம்
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக டிராக்டரில் ஊர்வலமாக வந்த மணமக்கள்
அவன் இவன் பட வழக்கு: அம்பை கோர்ட்டில் டைரக்டர் பாலா ஆஜர்
அரசு பள்ளி மாணவர்கள் 3 பேருக்கு கொரோனா: திருப்பூர் மருத்துவமனையில் அனுமதி
திருவாரூர் நகரில் தெருவிளக்குகள் சரிவர எரியாததால் மக்கள் தவிப்பு-வழிப்பறி சம்பவங்களால் அச்சம், பீதி
தமிழகம் முழுவதும் தடையை மீறி விவசாயிகள் டிராக்டர் பேரணி..போலீசார்- விவசாயிகள் இடையே மோதல்,, போலீசார் தடியடி, வழக்குப்பதிவு!!
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!
அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, சாகசங்கள், பாரம்பரிய நடனங்களோடு குடியரசு தின விழா கோலாகலம் : விழாக்கோலம் பூண்டது மெரினா!!
26-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
அற்புதங்களை கண்டு ரசிக்க 2 கண்கள் போதாது!: விஞ்ஞானிகளால் கூட நம்ப முடியாத சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்..!!