SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிவாண்டியில் பயங்கர விபத்து: 3 மாடி கட்டிடம் இடிந்து 11 குழந்தைகள் உட்பட 33 பேர் பலி... மீட்புப் பணிகள் தொடர்கிறது!!

2020-09-23@ 08:05:46

தானே: தானே மாவட்டம் பிவாண்டியில் 3 மாடி கட்டிடம் இடிந்துவிழுந்த விபத்தில் 33 பேர் பலியாகியுள்ளனர். 4 வயது குழந்தை உட்பட 20 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இடிபாடுகளில் சிக்கியுள்ள மேலும பலரை மீட்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. தானே மாவட்டவம் பிவாண்டி நகரில் உள்ள ஜிலானி என்ற மூன்று மாடி குடியிருப்பு கட்டிடம் தமங்கா நாக்கா அருகில் உள்ள நர்போலி பட்டேல் கம்பவுண்டில் உள்ளது. 43 ஆண்டுகள் முன்பு கட்டப்பட்ட இந்த கட்டிடத்தில் 40 வீடுகள் உள்ளன. 150 பேர் இந்த வீடுகளில் வசித்து வந்தனர். நேற்று முன்தினம் அதிகாலை 3.40 மணிக்கு அனைவரும் தூங்கிக்கொண்டிருந்த போது கட்டிடத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. பலர் இடிபாடுகளில் சிக்கி அலறினர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் குடியிருப்பவர்கள் ஓடிவந்து இடிபாடுகளில் சிகிக்கியவர்கள் மீட்கும் பணியை மேற்கொண்டனர்.

தகவலறிந்து தேசிய பேரிடர் பராமரிப்பு படையினரும், மீட்பு குழுக்களும் விரைந்து வந்து மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இந்த விபத்தில் 33 பேர் பலியாகி விட்டனர். இதில் 15 வயதிற்கு உட்பட்ட 11 குழந்தைகள் ஆவர். பலியான ஒரு குழந்தைக்கு இரண்டு வயது என அதிகாரிகள் தெரிவித்தனர்.  இடிபாடுகளில் சிக்கியிருந்த இருந்த 20 பேர் மீட்கப்பட்டனர். மீட்கப்பட்டவர்களில் 4 வயது சிறுவன் உபேத் குரைசியும் ஒருவன். மீட்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இடிபாடுகளில் மேலும் பலர் சிக்கியிருப்பதாக கூறப்படுகிறது. அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்றது. இடிபாடுகளில் சிக்கியிருப்பவர்களை கண்டுபிடிப்பதற்காக மோப்ப நாய்களை பயன்படுத்தி வருகிறார்கள்.

ஆண்டு தோறும் மழைகாலத்துக்கு முன்பு பிவண்டி-நிஜாம்பூர் மாநகராட்சி அதிகாரிகள் மாநகராட்சி எல்லைக்குள் இருக்கும் கட்டிடங்கள் ஆய்வு செய்து பாழடைந்த கட்டிடங்களை அடையாளம் கண்டு பட்டியல் தயாரிப்பார்கள். மிகவும் பாழடைந்த கட்டிடம் எனில் அதில் குடியிருப்பவர்கள் முன்னெச்சரிகையாக வெளியேற்றப்படுவார்கள். ஆனால் இடிந்து விழுந்த ஜிலானி கட்டிடம் பாழடைந்த கட்டிடங்களின் பட்டியலில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • humanbodies23

    2,000 ஆண்டுகளுக்கு முன் எரிமலை வெடிப்பிலிருந்து தப்பிக்க முயன்ற 2 மனித உடல்கள் இத்தாலியில் கண்டுபிடிப்பு!: புகைப்படங்கள்

  • jammu23

    ஜம்மு காஷ்மீரில் நிலவும் கடுங்குளிர்!: தரை, வீடுகளின் கூரைகள், வாகனங்களின் மேற்பகுதி ஆகியவை பனி உறைந்து வெண்ணிறமாக காட்சி..!!

  • yamuna23

    இனவிருத்திக்காக யமுனை நதியில் கூட்டம் கூட்டமாக படையெடுக்கும் பறவைகள்!: சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசிப்பு..!!

  • chadpuja23

    சூரிய கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் சாத் பூஜை!: நியூ ஜெர்சியில் நூற்றுக்கணக்கான அமெரிக்க வாழ் இந்தியர்கள் வழிபாடு..!!

  • isrelviva23

    இப்படிக்கூட விவசாயம் செய்ய முடியுமா!: இஸ்ரேலில் வியக்க வைக்கும் செங்குத்து வேளாண்மை..புகைப்படங்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்