SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அரசு உத்தரவை மீறி ஆன்லைன் வகுப்பு நடத்தினால் கடும் நடவடிக்கை : அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை

2020-09-22@ 12:55:51

கோபி: ‘‘அரசு உத்தரவை மீறி ஆன்லைன் வகுப்பு நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.ஈரோடு மாவட்டம் கோபியில் நடமாடும் நியாய விலை கடை வாகனங்களை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று துவக்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

'இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும் தான் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. தற்போது நடந்து முடிந்த நீட் தேர்வில் 180 கேள்விகள் தமிழக பாட திட்டத்தில் இருந்து தான் கேட்கப்பட்டுள்ளது. மத்திய அரசு கொண்டு வரும் எந்த தேர்வாக இருந்தாலும் தமிழக மாணவர்கள் எதிர்கொள்வார்கள்.தனியார் பள்ளிகள் கட்டண வசூல் குறித்து கண்காணிக்கப்படுகிறது. புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் புதிதாக 11 மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரிடம் தான் கேட்க வேண்டும்.

அரசு பள்ளிகளில் இதுவரை 15.3 லட்சம் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில், தனியார் பள்ளிகளில் இருந்து 2.5 லட்சம் மாணவர்கள் அரசு பள்ளிகளில் சேர்ந்துள்ளனர்.தமிழகத்தில் இந்த ஆண்டு 50 பள்ளிகளை தரம் உயர்த்தவும், 15 இடங்களில் புதிய தொடக்க பள்ளி, 10 இடங்களில் நடுநிலைப்பள்ளி தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தனியார் பள்ளிகளில் 5 நாட்களுக்கு ஆன்லைன் வகுப்பு நடத்த கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு உத்தரவை மீறி ஆன்லைன் வகுப்பு நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
தூய்மை பணியாளர்களின் குழந்தைகளுக்கு கடந்த ஆண்டு வரை கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பள்ளிகள் திறப்பதற்கான சாத்தியக்கூறு தற்போது இல்லை. இவ்வாறு செங்கோட்டையன் கூறினார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mumbaitrain22

    7 மாதத்திற்கு பிறகு மும்பை மின்சார ரயிலில் பெண்கள் உற்சாக பயணம்!: 4 மகளிர் சிறப்பு ரயில்களும் இயக்கம்..!!

  • dinosauregg22

    பெரம்பலூரில் தோண்ட தோண்ட கிடைத்த ‘டைனோசர்’ முட்டைகள்!: ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. ‘மிரள’ வைத்த எண்ணிக்கை..வியப்பில் பொதுமக்கள்..!!

  • locusts22

    எத்தியோப்பியாவில் வெட்டுக்கிளிகள் அட்டகாசம்!: 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உணவு பயிர்கள் நாசம்..விவசாயிகள் வேதனை..!!

  • rainbowtree22

    உலக பொறியாளர்களின் கவனத்தை ஈர்த்த பிலிப்பைன்ஸ் ரெயின்போ ட்ரீ டவர்!: கண்கவரும் புகைப்படங்கள்

  • vietnam22

    வியட்நாமை துவம்சம் செய்த கனமழை!: வெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கைபேரிடர்களில் சிக்கி 111 பேர் பலி.. பலர் மாயம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்