SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கொரோனாவை அலட்சியம் செய்யும் கலெக்டர் அலுவலக அதிகாரிகள் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2020-09-22@ 00:13:26

‘‘தங்களுக்கு கீழ் பணியாற்றும் ஊழியர்களின் உயிர்களை மாங்கனி மாவட்ட அதிகாரிகள் கொஞ்சம் கூட மதிப்பதே இல்லையாமே, உண்மையா...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘ம்.. அப்படித்தான் பேசிக்கிறாங்க... விஷயத்தை சொல்றேன் கேளு... மாங்கனி மாவட்டத்துல கொரோனா நோய் தாக்கம் இன்னும் கொறஞ்ச மாதிரி தெரியல. குறிப்பா, ஏராளமான டிபார்ட்மென்ட் இருக்குற கலெக்டர் ஆபிசுல நாள்தோறும் தொற்று எண்ணிக்கை இருந்துட்டு இருக்கு. காரணம் கட்சிக்காரங்க, ெபாதுமக்கள், மற்ற இடங்களில் உள்ள அதிகாரிகள், ஊழியர்கள் பலரும் கலெக்டர் ஆபிசுக்கு தான் வர்றாங்க.
இதனால கொரோனா ஏற்படுமோ என்ற பீதியில் ஊழியருங்க இருக்காங்க... ஆனால் உயரதிகாரிகள் யாரும் கொரோனாவா... அதுக்கு சோப்பு போட்டு கை கழுவினால் சரியாகிடும்... அதை போய் பெரிசா பேசற... என்று அசால்ட்டாக பதில் சொல்லிட்டு வேலையை வாங்குவதில் தான் ஆர்வமாக இருக்காங்களாம். சமீபத்துல ரூரல் டெவலப்மென்ட் டிபார்ட்மென்ட் ஆபிஸ்ல, அடுத்தடுத்து 4 பேருக்கு கொரோனா உறுதியாச்சு. இதனால பயந்துபோன அங்குள்ள பணியாளர்கள், ஆபிச மூடிட்டு எல்லோருக்கும் கொரோனா டெஸ்ட் எடுப்பாங்கனு நெனச்சாங்க. ஆனா, இத கொஞ்சமும் கண்டுக்காத அங்க இருக்குற அதிகாரிங்க... கிருமி நாசினி மட்டும் தெளிச்சிட்டு, வேலைய பார்க்க சொல்லிட்டாங்க... அது மட்டுமில்லாம சோப்பு போட்டு கை கழுவுங்கனு அட்வைஸ் வேறயாம். அப்புறம் இதுக்ெகல்லாம் எல்லாருக்கும் டெஸ்ட் எடுக்க முடியாது, அறிகுறி இருக்குற சந்தேகம் இருந்தா, சளி, இருமல் இருந்தா மட்டும் டெஸ்ட் எடுத்துக்கங்கனு பேருக்கு சொல்லிட்டாங்களாம். இதனால அந்த டிபார்ட்மென்ட் ஆபிசருங்க மேல ஊழியருங்க பயங்கர கடுப்புல இருக்காங்க... எங்கள் உயிரை பற்றி கவலையில்லையான்னு கொந்தளிப்பில் இருக்காங்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘கட்டப்பஞ்சாயத்துல உயர் அதிகாரி பிஸியா இருக்காராமே...’’ என்று சிரித்தபடி கேட்டார் பீட்டர் மாமா.
‘ஆமா.. கீழக்கரையில் உள்ள போலீஸ் உயரதிகாரி ஒருவர், இப்பகுதியில் கஞ்சா, சட்டவிரோத மது விற்பனை உள்ளிட்ட பிரச்னைகளை கண்டு கொள்வதில்லைனு சமூக ஆர்வலர்கள் சொல்றாங்க.  இப்பகுதியில் சமீப காலமாக திருட்டுகளும் அதிகரித்துள்ளதாம்.. குற்றச்செயல்களில் இருப்போரில் பலரும், இந்த அதிகாரியோடு ‘நெருக்கமாக’ இருப்பதாகவும் மக்கள் மத்தியில் பேச்சு அதிகமிருக்காம்... எப்ஐஆர் போடாமல் ‘கட்ட பஞ்சாயத்து’ பேசி முடித்து, உயரதிகாரி இரு தரப்பிலும் பலன் பெறுகிறாராம்... போலீஸ் - மக்கள் இடையே பிரச்னையை பேசி முடிக்கவும், இங்கு ‘புரோக்கர்கள்’ எண்ணிக்கை அதிகரித்து விட்டதாம். கிரிமினல்கள் உள்பட பலரும் காக்கி உடை அணிந்த கீழ்நிலை அதிகாரிகளை கண்டுகொள்வதே இல்லையாம். அதே சமயம் பிரச்னைனு வந்தா புரோக்கரை ராஜ மரியாதையுடன் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து கட்டபஞ்சாயத்து பேசி முடிச்சுடுறாங்களாம்... இந்த உயரதிகாரி குறித்து, மாவட்ட எஸ்பிக்கும் பலர் மனுக்கள் அனுப்பியும், நடவடிக்கை இல்லையாம். உயரதிகாரியின் நடவடிக்கையால் மாவட்டத்தில், போலீசார் மீதான மரியாதையை குறைவதாக அவர்களே புலம்பறாங்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘கொழிக்கும் நகரில் என்ன மேட்டர் இருக்கு...’’ என்றார் பீட்டர்மாமா.
‘‘கோவை மாநகரில், தெற்கு, வடக்கு, சென்ட்ரல், மேற்கு ஆகிய நான்கு வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் உள்ளன. இதில், சென்ட்ரல் ஆபீஸ் ரொம்பவே பிஸி. டிரைவிங் லைசன்ஸ் புதிதாக எடுப்பது, புதுப்பிப்பது, புதிய வாகனங்கள் பதிவு, வரி செலுத்துதல், ஆம்னி பஸ் பெர்மிட், புதிய பஸ் வழித்தடத்திற்கு பெர்மிட், புதிய ஆட்டோக்களுக்கு லைசென்ஸ் கொடுப்பது என அன்றாடம் நூற்றுக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் இந்த அலுவலகத்தில் குவிகின்றன.
மேற்கண்ட பணிகளை எளிதாக செய்து கொடுக்கிறோம் எனக்கூறிக்கொண்டு, இந்த அலுவலகத்தில் புரோக்கர்கள் நடமாட்டம் அதிகளவில் உள்ளது. 50க்கும் மேற்பட்ட புரோக்கர்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர்.
இவர்களுக்கு, இங்குள்ள ஆர்.டி.ஓ அதிகளவில் இடமளிக்கிறார் என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது. இதேபோல், பிரேக் இன்ஸ்பெக்டர்களும் பச்சை கம்பளம் விரித்து வரவேற்கின்றனர். காரணம், வசூல் மழைதான்... பொதுமக்கள் போனா இன்று போய் நாளை வான்னு அனுப்புறாங்களாம்... புரோக்கர் போனா.. இருந்து இன்றே வாங்கிட்டு போன்னு சொல்றாங்களாம்...
இந்த அலுவலகத்தில் இருந்து ஒரு கி.மீ தூரத்துக்கு வெளியே கரன்சி கைமாறும் படலம் நடக்கிறது. நேரடியாக சம்திங் வாங்கினால், விஜிலென்ஸ் வசம் சிக்கிவிடுவோம் என்ற பயத்தில் இங்குள்ள அதிகாரிகள் புரோக்கர்கள் வசம் அந்த பொறுப்பை ஒப்படைத்து விட்டு நழுவிவிடுகின்றனர்.
அதனால், கரன்சி மழைக்கு பஞ்சமில்லையாம். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இதே அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு ேபாலீசார் ரெய்டு நடத்தியபோது, அதிர்ச்சியில் ஒரு பிரேக் இன்ஸ்பெக்டருக்கு மாரடைப்பு ஏற்பட்டு, பலியாகிவிட்டார். அதனால், இங்குள்ள அதிகாரிகள் ரொம்பவே உஷார். அதேநேரத்தில் வசூலில் கறார். ஆர்.டி.ஓ அலுவலக பணிகள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு விட்டாலும், இங்கு வசூலுக்கு எப்போதும் குறைவில்லை... பணம் வாங்குவதில் பயமும் இல்லையாம்...’’ என்றார் விக்கியானந்தா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • pakisthan21

  ஆப்கானிஸ்தானில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள் உள்பட 15 பேர் பலி!: புகைப்படங்கள்

 • kasirangaa21

  கொரோனா தொற்றால் மூடப்பட்டிருந்த அசாம் காசிரங்கா தேசியப்பூங்கா, உயிரியல் பூங்காக்கள் சுற்றுலாப் பயணிகள் பார்வைக்காக மீண்டும் திறப்பு!: புகைப்படங்கள்

 • kamaladance21

  அமெரிக்க தேர்தல் 2020: அனல் பறக்கும் பிரச்சாரத்திற்கு இடையே குடையுடன் கூல் நடனமாடிய கமலா ஹாரிஸ்.. வைரலாகும் புகைப்படங்கள்

 • thirupati21

  திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா: கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி..!!

 • police21

  காவலர் வீர வணக்க நாள்: நாட்டைப் பாதுகாப்பதற்காக, வீரதீர செயல்களில் ஈடுபட்டு உயிர் தியாகம் செய்த காவலர்களின் நினைவு சின்னத்தில் உயரதிகாரிகள் மலர்த்தூவி மரியாதை..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்