SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ராஜதந்திரம் தேவை

2020-09-22@ 00:08:09

இந்திய - சீன எல்லையான கிழக்கு லடாக்கில் கடந்த மே முதல் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. கொரோனா பாதிப்பை பயன்படுத்தி இந்திய எல்லைகளை ஆக்கிரமிக்க முயலும் சீனாவுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. இதன்  மூலம் அடாவடி, ஆக்கிரமிப்புக்கு பெயர் போன சீனாவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.அமெரிக்காவுடன் நெருங்கிய நட்பு நாடாக விளங்கும் இந்தியாவுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில், லடாக் எல்லை பிரச்னையை சீனா கையில் எடுத்தது. இவ்விஷயத்தில் முதலில் சீனா தோல்வியை சந்தித்தது. இதனால் கோபமடைந்து,  எல்லையில் படைகளை குவித்து வருகிறது. எல்லையில் படைகளை குவித்தும் வெற்றி பெற முடியாத சூழல் உள்ளதால், வழக்கம்போல் போரிடாமல் அச்சுறுத்தி வெற்றி பெறும் முயற்சியில் சீனா இறங்கலாம். அதற்காக பல தந்திரங்களை  சீனா கையாளும் என்பதால், இவ்விஷயத்தில் மிகுந்த கவனத்துடனும், ராஜதந்திர முறையிலும் செயல்பட வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு உள்ளது.

எல்லையில் பதிலடி கொடுப்பது போல், பொருளாதார ரீதியாக சீனாவை வீழ்த்துவதற்கான முயற்சியில் மத்திய அரசு இறங்க வேண்டும். நாம் அன்றாடம் பயன்படுத்தும் பல பொருட்கள் சீன தயாரிப்புகளாகவே உள்ளன. முக்கியமாக,  மருத்துவம், கணினி, செல்போன், அறிவியல் சார்ந்த தொழில்நுட்பம் உள்ளிட்டவற்றில் சீனாவின் ஆதிக்கம் உள்ளது. பொருளாதாரரீதியாக சீனாவை தடுமாறச் செய்யவேண்டும் என்றால், குக்கிராமங்கள் வரை சென்றுள்ள சீன பொருட்களுக்கு மாற்றுப்பொருளை உருவாக்க வேண்டும். பெரும்பாலான பொருட்களை உள்நாட்டில் உற்பத்தி செய்வதற்கான முயற்சியை அதிகப்படுத்த வேண்டியது அரசின் கடமை.

இந்திய - சீன எல்லை விவகாரத்தை உலக நாடுகள் உன்னிப்பாக கண்காணித்து வருகின்றன. இந்திய ராணுவ வீரர்கள் அசாத்திய திறமை பெற்றவர்கள் என்பதை மீண்டும் உலகிற்கு நிரூபித்துள்ளோம். எல்லையில் தந்திரங்கள் பலிக்காத  நிலையில், தொழில்நுட்பம் உள்ளிட்ட வேறு வகையில் சீனா சதித்திட்டம் தீட்டலாம். எனவே இந்தியாவில் சீன பொருட்கள் நுழைவதை தடுக்கும் முயற்சியில் இறங்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.

எல்லையில் என்ன நடக்கிறது என்பதை மக் களுக்கு சொல்ல வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது. உலகின் மிக உயரமான சியாச்சின் போர்க்கள அனுபவத்தை பெற்றுள்ள இந்திய ராணுவ வீரர்கள் முன்பு, சீன வீரர்கள் தாக்குப் பிடிக்க முடியாது என்பதை உலகம் அறியும். எல்லையில்  இருந்து சீன படைகள் பின்வாங்கினால், அது நமக்கு கிடைக்கும் ராஜதந்திர வெற்றி. இதன் மூலம் சீனாவுக்கு சர்வதேச அளவில் பெரும் பின்னடைவு ஏற்படும். எனவே, இந்நேரத்தில் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள நாடுகள் மற்றும் சுற்றியுள்ள  நாடுகளை, சீனாவுக்கு எதிராக திசை திருப்பும் ராஜதந்திர முயற்சியை இந்தியா மேற்கொள்ள வேண்டும்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • twins22

  தலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே!: அறுவை சிகிச்சைக்கு பின் சந்தோஷமாக நாடு திரும்பினர்..!!

 • mumbaitrain22

  7 மாதத்திற்கு பிறகு மும்பை மின்சார ரயிலில் பெண்கள் உற்சாக பயணம்!: 4 மகளிர் சிறப்பு ரயில்களும் இயக்கம்..!!

 • dinosauregg22

  பெரம்பலூரில் தோண்ட தோண்ட கிடைத்த ‘டைனோசர்’ முட்டைகள்!: ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. ‘மிரள’ வைத்த எண்ணிக்கை..வியப்பில் பொதுமக்கள்..!!

 • locusts22

  எத்தியோப்பியாவில் வெட்டுக்கிளிகள் அட்டகாசம்!: 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உணவு பயிர்கள் நாசம்..விவசாயிகள் வேதனை..!!

 • rainbowtree22

  உலக பொறியாளர்களின் கவனத்தை ஈர்த்த பிலிப்பைன்ஸ் ரெயின்போ ட்ரீ டவர்!: கண்கவரும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்