SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தாமரை கட்சிக்குள் தேர்தல் கலகம் குமரியில் தொடங்க போகும் ரகசியத்தை சொல்கிறார்: wiki யானந்தா

2020-09-21@ 00:56:36

‘‘இந்த கையில காசு... அந்த கையில தோசைனு சொல்றாங்களே... அது கோவைக்கு பொருந்தும் போல...’’ என்றார் பீட்டர் மாமா.‘‘செய்து முடித்த வேலைக்கு எப்பதான் பணத்தை தருவீங்க. கடனுக்கு வேலை செய்ய முடியாது என கோவை மாநகராட்சியில் டெண்டர் எடுத்த கம்பெனிகள் கறாராக பேசி வருகிறது. 24 மணி நேர குடிநீர் திட்டத்தில் 85 கோடி ரூபாய் நிலுவை.. திடக்கழிவு திட்டத்தில் 56 கோடி ரூபாய் தர வேண்டும்... இதர ஒப்பந்த பணிகளில் சுமார் 100 கோடி ரூபாய் தராமல் இழுத்தடிக்கும் கோவை மாநகராட்சி இப்போது ‘கடன்கார மாநகராட்சி’யாக மாறிவிட்டதாக பேசிக்கிறாங்க. ஏற்கனவே செய்த வேலைக்கு பணம் வந்தால் கான்டிராக்ட் எடுப்போம்..

இல்லை என்றால் கான்ட்ராக்ட் வேணாம், எல்லாத்தையும் ரத்து செஞ்சுக்கலாம்’’ என கம்பெனிகள் எகிறியதால் மாநகராட்சி நிர்வாகம் அதிர்ச்சியாகிவிட்டது. மாநில அளவில் வேறு எந்த மாநகராட்சியிலும் இப்படி ஒரு அவலம் கிடையாது. கஜானாவை காலி செய்து விட்டார்கள். மத்திய அரசு நிதியை வாங்கி வாங்கி உடனே செலவு செய்து விடுகிறார்கள். வரி வசூலும் மந்தம்தான். ஸ்மார்ட் சிட்டி, தெரு விளக்கு, குளம் சீரமைப்பு பணிக்கு நிதியை வாரி கொடுத்து விட்டார்கள். மற்ற திட்டங்கள் குறிப்பாக குடிநீர், குப்பை திட்டங்கள் வீணாக கிடக்கிறது. மாநகராட்சி கமிஷனரை மாற்றியும் நிர்வாக ரீதியில் எந்த மாற்றமும் நடக்கவில்லை, வேலையும் நடக்கவில்லை.

தினமும் பல முறை மீட்டிங் போட்டு பேசுறாங்க. என்ன தான் முடிவு செய்யறாங்க. எந்த வேலையும் உருப்படியா நடக்கல என மாநகராட்சியில் உள்ள கீழ்நிலை ஊழியர்களே பேசும் நிலைக்கு வந்துட்டாங்க... கான்டிராக்டர்கள் சொந்த காசை போட்டு வேலை செய்யறவங்க... அவங்க பேச மாட்டாங்களா...’’ என்றார் விக்கியானந்தா. ‘‘தாமரையை குமரி குழப்பத்தில் சுற்ற வைத்து... கலகத்தை பற்ற வைத்துவிடும் போலிருக்கே... அப்டியா...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘தாமரை கட்சியின் தலைவராக பொறுப்பேற்ற பின், முதல் முறையாக குமரி மாவட்டத்துக்கு இன்று வருகிறார் அதன் மாநில தலைவர்... கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கு,

நவம்பரில் இடைத்தேர்தல் வரலாம் என்ற நிலையில், தாமரை தலைவரின் இந்த திடீர் வரவு கட்சி நிர்வாகிகள்  மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளதாம். இங்கே தான் கலகத்தின் திரி இருக்காம்... யார் பற்ற வைக்கப் போகிறார்கள்... அது எப்போது வெடிக்க துவங்கும் என்பது தான் தாமரையில் பேச்சாக இருக்காம்... காரணம் குமரியில் மூத்த தலைவர்கள் இருப்பதால் அவர்களை கையாள்வதில் மாநில தலைவருக்கு பெரும் சிக்கல் ஏற்படுமாம். அதுவே கலகம் வெடிக்க காரணமாக இருக்கும்னு பேசிக்கிறாங்க அந்த மாவட்ட நிர்வாகிகள்... நாடாளுமன்ற தேர்தலில் யாரை வேட்பாளராக நிறுத்தலாம் என்பது பற்றியும் முக்கிய நிர்வாகிகளுடன் தாமரை தலைவர் ரகசிய ஆலோசனை நடத்த உள்ளாராம்.
இந்த ஆலோசனையில் முன்னாள் மத்திய அமைச்சரும், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவிய ‘கோல்டும்’ பங்கேற்க உள்ளாராம். நான் ஏற்கனவே தோற்றதால் எனக்கே வாய்ப்பு தரணும்னு அவர் வலியுறுத்துவார்னு சொல்றாங்க.. அதற்கு முன்னோட்டமாக சில வாரங்களுக்கு முன்னாடி அவர் ஒரு டிரெய்லர் வெளியிட்டார். அதுல... கட்சி தலைமை அனுமதித்தால், கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுவேன் என்று சொல்லி சீட் வாங்க கர்சீப் போட்டு வைத்துவிட்டார். அதேபோல இலை கட்சியில் இருந்து தாமரையில் ஐக்கியமான முன்னாள் அமைச்சரும் பங்கேற்கிறார்.

ஏற்கனவே டெல்லி விவிஐபியின் நண்பர் தான் கன்னியாகுமரி நாடாளுமன்ற வேட்பாளர் என்ற ரீதியில் ஒரு முன்னாள் அதிகாரியை முன்னிறுத்தப்பட்டுள்ளராம். அவர் சமீபத்தில் தான் மத்திய அரசு பதவியை துறந்துவிட்டு தாமரையில் ஐக்கியமானவர். இந்த தகவலும் காட்டு தீயாய் பரவி, குமரியில் தாமரை தரப்பினர் யாரை ஆதரிப்பது என்ற கலக்கத்தில் இருக்காங்களாம்... இந்நிலையில் தாமரை தலைவரின் இந்த திடீர் வருகை கட்சியினர் மத்தியில் மேலும் பதற்றத்தை உண்டாக்கி கலகம் எப்போது வெடிக்கப்போகிறதோ... ரகசிய கூட்டத்தில் என்ன பேச போறாங்களோ என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்காம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘ கொரோனாவுக்கு ஒதுக்கிய நிதி தங்க சங்கலி, நிலங்களாக மாறிச்சாமே..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘தூங்கா நகர மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநராக பெண் அதிகாரி ஒருவர் கடந்த ஜனவரியில் நியமிக்கப்பட்டார். அவர் ஏற்கனவே தூங்கா நகர மாநகராட்சியில் உதவி சுகாதார அதிகாரியாக வேலைபார்த்தவர். இதனால், மாவட்டத்தின் அனைத்து விவகாரங்களும் அவருக்கு அத்துபடி. துணை இயக்குநராக பதவி ஏற்ற கொஞ்ச நாளில் கொரோனா விவகாரம் ஆரம்பமானது. பேரிடர் கால செலவுகள் என்பதால் மருந்து, உணவு, உடைகள், மாஸ்க் என்று கோடிக்கணக்கில் கொட்டி கொடுத்தது அரசு... ஆனால் சில லட்சங்களை சுருட்டியவர் கொரோனா பணத்தில் கொலுசு...

தங்க சங்கலி நிலம் வாங்கி நிதியை மடை மாற்றிக் கொண்டதாக பரபரப்பான தகவல் ஓடிக் கொண்டு இருக்கிறது. இந்த விஷயம் வெளியே வந்தது எப்படின்னா... நிதியை தன் சகாக்களுக்கு தராமல்  தானே எடுத்துக் கொண்டதால் சில அதிகாரிகள் கடுப்பில் விஷயத்தை லீக் செய்தனர். இதற்கிடையே, கொரோனா நிதி மற்றும் அதில் நடந்த பணிகள் குறித்து சுகாதாரத்துறை செயலாளர் சமீபத்தில், மதுரையில் ஆய்வு மேற்கொண்டார். அதில், ரூ.60 லட்சம் வரை கணக்கில் இடித்துள்ளது. விசாரித்ததில், யாருக்கும் எதுவும் விட்டு வைக்காமல் அவ்வளவையும் அவரே அமுக்கிய விஷயம் வெளிச்சத்துக்கு வந்ததாம். கடும் கோபமடைந்த உயரதிகாரிகள், உடனே அந்த பெண் அதிகாரியை கடற்கரை மாவட்டத்திற்கு தூக்கி அடித்து விட்டார்களாம். தூங்காநகர அதிகாரிகளிம் இப்போ இதுதான் ஹாட் டாபிக்...’’ என்றார் விக்கியானந்தா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • pakisthan21

  ஆப்கானிஸ்தானில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள் உள்பட 15 பேர் பலி!: புகைப்படங்கள்

 • kasirangaa21

  கொரோனா தொற்றால் மூடப்பட்டிருந்த அசாம் காசிரங்கா தேசியப்பூங்கா, உயிரியல் பூங்காக்கள் சுற்றுலாப் பயணிகள் பார்வைக்காக மீண்டும் திறப்பு!: புகைப்படங்கள்

 • kamaladance21

  அமெரிக்க தேர்தல் 2020: அனல் பறக்கும் பிரச்சாரத்திற்கு இடையே குடையுடன் கூல் நடனமாடிய கமலா ஹாரிஸ்.. வைரலாகும் புகைப்படங்கள்

 • thirupati21

  திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா: கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி..!!

 • police21

  காவலர் வீர வணக்க நாள்: நாட்டைப் பாதுகாப்பதற்காக, வீரதீர செயல்களில் ஈடுபட்டு உயிர் தியாகம் செய்த காவலர்களின் நினைவு சின்னத்தில் உயரதிகாரிகள் மலர்த்தூவி மரியாதை..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்