SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ரூ.2 கோடி செலவில் மேம்படுத்தப்பட்ட தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் இணையதளத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி

2020-09-20@ 13:46:21

சென்னை: தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் 2 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட https://www.tnskill.tn.gov.in/ என்ற இணைதளத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். இதன்மூலம், பயனாளர்களின் பதிவுகள், பயிற்சி வழங்கும் நிறுவனங்களின் அங்கீகாரங்கள், இணையவழி சான்றிதழ்கள், ஆதார் எண் இணையப்பெற்ற வருகை பதிவேடு பராமரித்தல், உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள இயலும். மேலும், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்துடன், தி ராம்கோ சிமெண்ட்ஸ் லிமிடெட் நிறுவனம், கட்டுமானம் மற்றும் உள்கட்டமைப்பு பிரிவில் உயர்தர திறன் மேம்பாட்டு மையம் நிறுவிடவும், கோர்ஸெரா நிறுவனம், தமிழ்நாட்டில் 50,000 வேலையற்ற நபர்களுக்கு இணைய வழியில் இலவசமாக கல்வி மற்றும் பயிற்சி அளித்திடவும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

அத்துடன், ஒருங்கிணைந்த ஒற்றைத் திறன் பதிவு தொகுதியை உருவாக்கும் நோக்கில் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கும் பிற துறைகளின் விவரங்களை உள்ளடக்கியதாக இவ்விணையதளம் மேம்படுத்தப்பட்டுள்ளது. ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகமையின் உதவியுடன் தமிழ்நாடு முதலீட்டு மேம்பாட்டுத் திட்டம் - நிலை ஐஐ-ன் ஒரு பகுதியாக, 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டுமானம் மற்றும் உள்கட்டமைப்பு பிரிவில் உயர்தர திறன் மேம்பாட்டு மையம் நிறுவிட, முதல்வர் முன்னிலையில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்திற்கும், தி ராம்கோ சிமெண்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

அமெரிக்கா நாட்டின், கலிபோர்னியாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் கோர்ஸெரா (Coursera) நிறுவனம் உலகத்தரம் வாய்ந்த முன்னணி இணையவழி கற்றல் தளமாகும். இந்நிறுவனம், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், கூகுள், ஐபிஎம் போன்ற நிறுவனங்கள் மற்றும் அரசு நிறுவனங்களுடன் சேர்ந்து இணைய வழியில் பொறியியல், இயந்திர கற்றல், கணிதம், வணிகம், கணினி அறிவியல், டிஜிட்டல் சந்தைப்படுத்தல், மருத்துவம், உயிரியல், சமூக அறிவியல் மற்றும் பிற பாடங்களில் சான்றிதழ் மற்றும் பட்டப் படிப்புகளை வழங்கி வருகிறது.

மேலும், இந்நிறுவனம் உலகெங்கிலும் உள்ள 80 நாடுகளில் திறன்களை வளர்க்கும் நோக்கில் பயிற்சி வகுப்புகளையும் நடத்தி வருகிறது. தமிழ்நாட்டில் 50,000 வேலையற்ற நபர்களுக்கு இணைய வழியில் இலவசமாக கல்வி மற்றும் பயிற்சி அளித்திடும் வகையில், முதல்வர் முன்னிலையில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்திற்கும், கோர்ஸெரா நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்மூலம், வேலையற்ற இளைஞர்கள் மற்றும் பெண்கள் இந்நிறுவனம் வழங்கும் இணையவழி பயிற்சி வகுப்புகளால் வேலைவாய்ப்பு பெற வழிவகை ஏற்படும் என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • twins22

  தலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே!: அறுவை சிகிச்சைக்கு பின் சந்தோஷமாக நாடு திரும்பினர்..!!

 • mumbaitrain22

  7 மாதத்திற்கு பிறகு மும்பை மின்சார ரயிலில் பெண்கள் உற்சாக பயணம்!: 4 மகளிர் சிறப்பு ரயில்களும் இயக்கம்..!!

 • dinosauregg22

  பெரம்பலூரில் தோண்ட தோண்ட கிடைத்த ‘டைனோசர்’ முட்டைகள்!: ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. ‘மிரள’ வைத்த எண்ணிக்கை..வியப்பில் பொதுமக்கள்..!!

 • locusts22

  எத்தியோப்பியாவில் வெட்டுக்கிளிகள் அட்டகாசம்!: 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உணவு பயிர்கள் நாசம்..விவசாயிகள் வேதனை..!!

 • rainbowtree22

  உலக பொறியாளர்களின் கவனத்தை ஈர்த்த பிலிப்பைன்ஸ் ரெயின்போ ட்ரீ டவர்!: கண்கவரும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்