SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அறிவிப்பு வெளியிட்டு 2 வருடமாகியும் ‘ஆட்டம் காணும்’ எய்ம்ஸ் கட்டுமானம்; மந்தமாக நடைபெறுவதால் மக்கள் கடும் அதிருப்தி

2020-09-20@ 12:32:41

திருப்பரங்குன்றம்: மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை அறிவிப்பு வெளியிட்டு 2 ஆண்டுகளாகியும், சாலை, சுற்றுச்சுவர் பணியோடு கிடப்பில் போடப்பட்டுள்ளது. ஜப்பான் நிறுவனம் நிதி தந்தால் மட்டுமே பணி எப்போது தொடங்கும்? எப்போது நிறைவடையும் என கூற முடியும் என மத்திய அரசு தெரிவித்துள்ளதால் தமிழக மக்கள் ஏமாற்றத்தில் உள்ளனர். மதுரை மாவட்டம், தோப்பூரில் 224.24 ஏக்கர் பரப்பளவில் ரூ.1,264 கோடியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளதாக, கடந்த 2018, ஜூனில் அறிவிக்கப்பட்டது. இதற்காக மண் மாதிரி எடுக்கப்பட்டு நாக்பூரில் பரிசோதனை செய்யப்பட்டது. இம்முடிவு சாதகமாகவே, மத்திய அரசு மருத்துவ கட்டுமானப்பணிகள் நிறுவன அதிகாரிகள் இடத்தை பார்வையிட்டனர்.
கடந்த 2019, ஜனவரியில் பிரதமர் மோடி, மதுரையில் எய்ம்ஸ் கட்டுமான பணிக்கான அடிக்கல்லை நாட்டினார்.

இதையடுத்து தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள், மத்தியகுழு மற்றும் ஜப்பானிய நிதிக்குழுவினர் இடத்தை ஆய்வு செய்தனர். எய்ம்ஸ் அமையும் 250 ஏக்கரில் 224.24 ஏக்கர் மருத்துவமனைக்கும், 20 ஏக்கர் இந்தியன் எண்ணெய் நிறுவன குழாய் வழித்தடத்திற்கும், 5 ஏக்கர் சாலைப்பணிக்கும் என மத்திய சுகாதாரத்துறையிடம், தமிழக சுகாதாரத்துறை ஒப்படைத்தது. இதில், கூத்தியார்குண்டு விலக்கிலிருந்து கரடிக்கல் வரை மத்திய சாலை நிதித்திட்டம் மூலம் ரூ.21.20 கோடியில் 6.4 கி.மீ தூரத்திற்கு சாலை அமைக்கும் பணி தொடங்கி 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது. மருத்துவமனை அமைய உள்ள இடத்தில் ரூ.10 கோடியில் 5.5 கி.மீ சுற்றளவிற்கு சுற்றுச்சுவர் அமைக்கும் பணியும் 90 சதவீதம் முடிந்துள்ளது. தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக அரசாணை, மத்திய அரசால் கடந்த ஜூலையில் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் மதுரை வந்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர், செப்டம்பரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிடப் பணி தொடங்கும் என கூறினார். ஆனாலும், மருத்துவமனை உள்கட்டுமானப்பணிகள் துவங்கப்படவில்லை. எய்ம்ஸ் மருத்துவமனைப் பணி எப்போது தொடங்கும் என தென்காசியை சேர்ந்த ஒரு சமூக ஆர்வலர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்டிருந்தார். அதற்கு, டிசம்பரில் தொடங்கும் என பதில் தரப்பட்டது. இது குறித்து நாடாளுமன்றத்தில் கனிமொழி எம்பி கேள்வி எழுப்ப, அதற்கு மத்திய அரசு, ஜப்பானிய நிதி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்த பிறகே, அதற்கான கால நிர்ணயம் செய்ய முடியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் எய்ம்ஸ் கட்டிடப் பணி எப்போது தொடங்கும், எப்போது நிறைவடையும் என தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அரசுகள் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

திருப்பரங்குன்றம் தொகுதி எம்எல்ஏ டாக்டர் சரவணன் கூறுகையில், ‘‘கடந்த முறை நடந்த தேர்தலுக்காக மோடி தலைமையில், மதுரையில் எய்ம்ஸ்க்கு அடிக்கல் நாட்டி மக்களை ஏமாற்றினர். ஆரம்பம் முதலே இதுதொடர்பாக மாநில அமைச்சர்கள் முரண்பாடான கருத்துகளை கூறி வருகின்றனர். எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுக்கவில்லை. மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்காத முடியாத அரசாக மாநில அரசு உள்ளது. தென்மாவட்ட மக்களின் கனவுத் திட்டத்தை விரைந்து முடிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • twins22

  தலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே!: அறுவை சிகிச்சைக்கு பின் சந்தோஷமாக நாடு திரும்பினர்..!!

 • mumbaitrain22

  7 மாதத்திற்கு பிறகு மும்பை மின்சார ரயிலில் பெண்கள் உற்சாக பயணம்!: 4 மகளிர் சிறப்பு ரயில்களும் இயக்கம்..!!

 • dinosauregg22

  பெரம்பலூரில் தோண்ட தோண்ட கிடைத்த ‘டைனோசர்’ முட்டைகள்!: ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. ‘மிரள’ வைத்த எண்ணிக்கை..வியப்பில் பொதுமக்கள்..!!

 • locusts22

  எத்தியோப்பியாவில் வெட்டுக்கிளிகள் அட்டகாசம்!: 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உணவு பயிர்கள் நாசம்..விவசாயிகள் வேதனை..!!

 • rainbowtree22

  உலக பொறியாளர்களின் கவனத்தை ஈர்த்த பிலிப்பைன்ஸ் ரெயின்போ ட்ரீ டவர்!: கண்கவரும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்