SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கிசான் ஊழலை தொடர்ந்து ஸ்கூட்டர் ஊழலும் பூதாகரமாகி வருவதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2020-09-20@ 03:12:35

‘‘வரியே சரியாக கட்டாதவர்கள்... வீடு கட்டும் செங்கற்களை எப்படி தரமாக தயாரித்து இருப்பார்கள் என்று ஜிஎஸ்டி அதிகாரிகள் யோசிக்கிறாங்களாமே, அப்படியா...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘கோவை தடாகம் பகுதியில் 200க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் இயங்கி வருது. சூளை உரிமையாளர்கள் செங்கல் விற்பனையில் ஜி.எஸ்.டி. தொடர்பாக பல கோடி ரூபாய் அளவுக்கு வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வந்த ரகசிய புகாரின் அடிப்படையில் ஜி.எஸ்.டி. அதிகாரிகள் 25க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகளில் ரெய்டு நடத்தி பல ஆவணங்களை கைப்பற்றினார்களாம். அந்த ஆவணங்களில் பல முக்கிய அரசுத்துறை அதிகாரிகள் பெயரும் இருக்கு..

இதுல விசேஷமே, அந்த அதிகாரிகள் தங்கள் தொழிலை, வருமானத்தை கண்டுகொள்ளாமல் இருக்க அவர்களுக்கு அன்பளிப்பு வழங்கியதையும் விவரமா மறக்காம எழுதி வச்சிருக்காங்களாம். தடாகம் பகுதியில் சுற்றுச்சூழல் பாதிப்புக்கு காரணம் செங்கல் சூளைகளும், அதற்கு ஒத்துபோகும் அதிகாரிகளும்தான் என மக்கள் வெளிப்படையாக சொல்லிட்டு இருக்காங்க. இப்போ ஆவணங்கள் சிக்கி இருப்பதால் சூளை அதிபர்களும்... அதிகாரிங்களை சிக்கவிடும் அன்பளிப்புகளை பெற்றவர்களை பீதியில வைச்சு இருக்காம்...’’ என்றார் விக்கியானந்தா.  ‘‘கரை வேட்டிக்கு ஆதரவா செயல்பட்டு இன்ஸ்பெக்டர் தூக்கியடிக்கப்பட்ட விஷயத்தை சொல்லுங்களேன்...’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘சாத்தான்குளம் லாக்கப் கொலை நடந்த அதே சரகத்திற்குள் மற்றொரு கொலையும் அரங்கேறி இருக்கிறதாம். இப்போது சாத்தான்குளம் அடுத்த தட்டார்மடம் காக்கி அதிகாரி மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. சொத்து பிரச்னையில் இலை கட்சி பிரமுகருக்கு ஆதரவாக காக்கி அதிகாரி களமிறங்கி சிக்கியிருக்காராம். ஒரு போலீஸ் சப் டிவிஷனில் அடுத்தடுத்து போலீஸ் அதிகாரிகள் மீது கொலை வழக்குகளால் போலீசார் நமக்கு பாதுகாப்பானவர்களா என்ற கேள்வி அந்த பகுதி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. 2 மாதத்திற்குள் 2 இன்ஸ்பெக்டர்கள் கொலை வழக்கில் சிக்கியுள்ளது போலீஸ் அதிகாரிகளுக்கும் தலைவலியாக மாறியுள்ளதால் சப்டிவிஷனில் உள்ள போலீசாரை கூண்டோடு மாற்றலாமா என்று மேலிட காக்கி அதிகாரிகள் யோசிக்கிறாங்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘கவர்மென்ட் மானியம் வழங்கும் ஸ்கூட்டர்ல எப்படி ஊழல் நடந்துதாம்...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘விழுப்புரம் மாவட்டத்தில் அம்மா ஸ்கூட்டர்லயும் பெரும் ஊழல் நடந்திருப்பதாக புகார் எழுந்துள்ளது. வேலைக்கு செல்லும் பெண்கள், மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கு ₹25 ஆயிரம் மானியத்தில் வழங்கவேண்டிய ஸ்கூட்டருக்கு, 5 முதல் 10 ஆயிரம் வரை கமிஷன் வாங்கிட்டு அதிகாரிகள் வசூல் வேட்டையில ஈடுபட்டு இருக்காங்க... வண்டிக்கான மொத்த பணமும் செலுத்தி வாங்கிட்டா, லைசன்ஸ், வங்கி புத்தகம், ஆதார் கார்டு கொடுத்தால் 25 ஆயிரம் மானியம், வழங்கப்படுகிறதாம். இதற்கும், இடைத்தரகர்களை வைத்து அதிகாரிகள் இந்த வசூல்ல ஈடுபட்டு வருவது பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறதாம்’’

என்றார் விக்கியானந்தா. ‘‘ஆபாச படமெடுத்து மிரட்டியவரை காப்பாற்றும் முயற்சி நடக்குதாமே...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘வேலூர் மத்திய சிறையில் காவலராக பிரபல ’பீடி’யின் பெயரை கொண்டவர் இருந்தாரு. இவருக்கு பேஸ்புக் மூலம் சென்னை இளம்பெண் அறிமுகமாகி அந்தரங்கமாக பழகும் அளவுக்கு கொண்டு சென்றுவிட்டார். இதையடுத் அப்பெண்ணை தனது சிறைக்காவலர் குடியிருப்புக்கு அழைத்து வந்து, குளிர்பானத்தில் போதை மாத்திரையை கலந்து கொடுத்து, பெண்ணிடம் உல்லாசமாக இருந்துள்ளார். அடிக்கடி தேவைப்படுமே என்று அதை வீடியோவும் எடுத்து வைத்து கொண்டாராம். இதையறிந்த அப்பெண் தன்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தினாராம்.

அதை சமாளிக்க ஆபாச வீடியோ அந்த பெண்ணுக்கே அனுப்பி திருமண பேச்சே கூடாது ‘கப்சிப்’பாக இருக்க வேண்டும் என்று மிரட்டினாராம். இது சரிப்பட்டு வராது என்று நினைத்த பெண், போலீசாரிடம் புகார் அளிக்க... சிறையில் காவல் பணியில் இருக்கும் எனக்கே சிறையா... என்று கூறிவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டார். இதற்குள் உள்ளூர் போலீஸ் ைக கொடுக்க... சிறை துறை பாதுகாத்து வருகிறதாம். இதற்கிடையில் போலீசாரால் தேடப்பட்டு வந்த சிறைக்காவலரை காப்பாற்றும் வகையில் வேறு கிளைச்சிறைக்கு பணியிட மாறுதல் வழங்கியதோடு, சிறை நிர்வாகம் தலைமறைவாக இருக்கவும் அறிவுரை வழங்கியதாக கூறப்படுகிறது...

ஆனால் ஆடிய காலும் பாடி வாயும் சும்மா இருக்குமா... ஆபாச வீடியோ வெளியாக... சிறை காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்... ஆனால் உள்ளூர் போலீசார் அவரை கைது செய்யாமல் முன்ஜாமீன் எடுக்கும் வரை காத்திருப்பதாக தகவல்கள் ஓடிக் கொண்டிருக்கிறது...’’ என்றார் விக்கியானந்தா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • pakisthan21

  ஆப்கானிஸ்தானில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள் உள்பட 15 பேர் பலி!: புகைப்படங்கள்

 • kasirangaa21

  கொரோனா தொற்றால் மூடப்பட்டிருந்த அசாம் காசிரங்கா தேசியப்பூங்கா, உயிரியல் பூங்காக்கள் சுற்றுலாப் பயணிகள் பார்வைக்காக மீண்டும் திறப்பு!: புகைப்படங்கள்

 • kamaladance21

  அமெரிக்க தேர்தல் 2020: அனல் பறக்கும் பிரச்சாரத்திற்கு இடையே குடையுடன் கூல் நடனமாடிய கமலா ஹாரிஸ்.. வைரலாகும் புகைப்படங்கள்

 • thirupati21

  திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா: கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி..!!

 • police21

  காவலர் வீர வணக்க நாள்: நாட்டைப் பாதுகாப்பதற்காக, வீரதீர செயல்களில் ஈடுபட்டு உயிர் தியாகம் செய்த காவலர்களின் நினைவு சின்னத்தில் உயரதிகாரிகள் மலர்த்தூவி மரியாதை..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்