SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பெண் அதிகாரியின் அதிகாரத்தை பார்த்து அலறும் போலீசாரை பற்றி சொல்கிறார் : wiki யானந்தா

2020-09-18@ 00:07:44

‘‘ஹனி பீ கலெக்டர் திருதிருனு முழிக்கிறாராமே...ஏன்...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘ஹனி பீ மாவட்ட மேற்குதொடர்ச்சி மலையடிவாரத்தில் மேகமலை வனச்சரணாலயம் வரப்போதாம். . இந்த பகுதியில் சுமார் 80 ஆண்டுகளுக்கும் மேலாக வருசநாடு உள்ளிட்ட மலைக்கிராமங்களை சேர்ந்த மக்கள் குடியிருந்து வர்றாங்களாம்... வனச்சரணாலயம் அமைவதால் மக்களை அப்பகுதியில் இருந்து வெளியேற்ற, வனத்துறை தீவிர முயற்சிகளை செய்து வருகிறதாம்.. இதனால் வனத்துறைக்கும், மலைக்கிராம மக்களுக்கும் ஏழாம் பொருத்தமாகவே இருந்து வருகிறதாம்... இதன் ஒரு பகுதியாக போடிமெட்டு மலை அடிவாரத்தில் குடியிருக்கும் முதுவான்குடி கிராம மக்கள் செல்வதற்கான சாலையை வனத்துறை மூடி விட்டதாம்...
இதனால் முதுவான்குடி கிராம மக்களும், விவசாயிகளும் வனத்துறை மீது செம கோபத்துல இருக்காங்க... அதேசமயம் வருசநாடு மலைப்பகுதியில் தனியார் சிலருக்கு மட்டும் வனத்துறை கரிசனம் காட்டுவதாக கிராம மக்கள் வனத்துறை மீது கடும் அதிருப்தியில இருக்காங்களாம்... இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு, வனத்துறைக்கும், பொதுமக்களுக்கும் இடையே கைகலப்பு வரை சென்றதாம்... இதுதொடர்பாக போலீசாரிடம், வனத்துறையினர் புகார் செஞ்சிருக்காங்க... இதன்பேரில் நடவடிக்கை எடுக்க போலீஸ் தரப்பு யோசிக்கிறதாம்... இதனால் வனத்துறையினர், கலெக்டர் அலுவலகத்தில் போலீசார் மீது அதிருப்தி தெரிவித்து, மனு அளித்தார்களாம்... ஏற்கனவே இடத்தை காலி செய்ற பிரச்னையில கொந்தளிக்கும் மக்களை சமாளிக்கிறதா? இல்லை... வனத்துறையினர் புகார் மீது நடவடிக்கை எடுப்பதா? போலீசை சமாளிப்பதா என தெரியாமல், கலெக்டர் திணறி வருகிறாராம்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘ ெபண் காக்கி அதிகாரியால் அலறுகிறார்களாமே போலீசார்...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘மலைக்கோட்டை மாநகரில் மணிகூண்டு பகுதியில் உள்ள காவல் நிலைய உயரதிகாரி மணியானவர்  கொரோனாவால் பாதிக்கப்பட்டு நீண்ட மருத்துவ விடுப்பில் உள்ளாராம். காரணம் அந்த போலீஸ் ஸ்டேஷன் வாஸ்துபடி ராசியானது இல்லையாம். இதனால் வேறு ஸ்டேஷனுக்கு போகும் வரை விடுப்பில் இருக்கவே விரும்புகிறாராம். அதனால மணியானவரின் பொறுப்பை...  அதே காவல் நிலையத்தில் குற்றப்பிரிவில் உள்ள பெண் உயரதிகாரிக்கு கூடுதலாக பொறுப்பாக கொடுத்தாங்களாம்.  ஏற்கனவே இவர் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் எக்கசக்க திருட்டு சம்பவங்கள் நடந்து வருதாம். புகார்கள் எல்லாம் விசாரணை இல்லாமல் கிணற்றில் போட்ட கல் போல் உள்ளதாம். இதனால் அந்த பகுதியில் உள்ள திருடர்கள், கொள்ளையர்கள் ஜாலியாக சுற்றி வர்றாங்களாம். சந்தோஷத்தில் இருக்காங்களாம்.
கூடுதலாக சட்டம் ஒழுங்கு பொறுப்பு கொடுத்த பின், பெண் உயரதிகாரியின் ஆட்டம் நாளுக்கு நாள் அதிகமாக ஸ்ேடஷனில் உள்ள சக காக்கிகளுக்கு இம்மி அளவும் மரியாதை கொடுக்காமல் வா, போ என ஏகவசனத்தில் பேசுகிறாராம்.  வழக்கு விசாரணையில் ஏதேனும் சம்பளத்தை தவிர எக்ஸ்டிரா ஏதாவது கிடைத்தால் மனுதாரருக்கு சாதகமாக பேசுவாராம்... இல்லையெனில் கத்தி கூச்சல் போட்டு விரட்டி விடுவாராம்.. கூலித்தொழிலாளர்கள் அதிகம் உள்ள பகுதி என்பதால் இரவில் டாஸ்மாக் சரக்கு விற்பனையை கண்டு கொள்ளாமல் இருப்பதற்காக மாமூல் வேட்டையிலும் படுகில்லாடியான பெண் உயரதிகாரி  கல்லா கட்டுகிறாராம். குற்றப்பிரிவில் கணிசமாக கல்லா கட்டிய நிலையில், தற்போது சட்டம் மற்றும் ஒழுங்கு கூடுதலாக பார்ப்பதால் அவரது காட்டில் அடை மழைதான்... எப்படியோ சம்பாதித்து போகட்டும்... நம்மை திட்டுகிறாரா என்று ஆண் காக்கிகள் புலம்பி தள்ளுகின்றனர்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘புதுசா கட்சியில் சேர்ந்தவர்கள் முக்கிய விழா கூட தெரியாமல் இருக்கிறார்களாமே..’’
‘‘அண்ணாவின் பிறந்தநாள் விழாவை இலை தரப்பு திண்டுக்கல் மாவட்டம் முழுக்கவே கொண்டாடினர். ஆனால், மாவட்டத்தின் முக்கிய நகரான ஒட்டன்சத்திரம் பகுதியில் மட்டும் அண்ணா பிறந்தநாளை இலை தரப்பு மறந்துடுச்சாம். சகலருக்கும் சங்கடத்தை ஏற்படுத்தி இருக்கிறதாம். இப்பகுதி இலை நிர்வாகிகள் அண்ணா பிறந்தநாளன்று அண்ணாவின் படத்தை வைத்தோ, மாலை அணிவித்தோ எந்தவித மரியாதையும் செய்யவில்லையாம்... மத்தியில் ஆள்கிற கட்சியின் ஆதரவிற்கு அதீத கவனம் காட்டுகிற இவர்கள், அண்ணாவின் பெயரை வைத்து இயக்கம் நடத்தும் நிலையிலும், அவரது பிறந்தநாளை எவ்வகையிலும் கொண்டாடாமல் மறந்தது அத்தனை தரப்பினருக்கும் அதிர்ச்சியைத் தந்திருக்கிறது... என்னதான் காரணமென விசாரித்தால், ஒட்டன்சத்திரம் பகுதியில் புதிய நிர்வாகிகளை ‘கட்சியின் வளர்ச்சிக்காக’ எனக் காரணம் காட்டி மாவட்ட பொறுப்பாளர்கள் நியமித்திருக்கின்றனராம். புதியவர்கள் அனைவருமே அண்ணாவின் பிறந்தநாளில், அவரது படத்திற்கு மாலை போட்டு மரியாதை செய்வதே நம் பாரம்பரியமான செயல்பாடு என்பதைக் கூட மறந்து விட்டார்களாம். இந்த அடிப்படை கூட தெரியாத இவர்கள் எப்படி, கட்சியை பலப்படுத்தி தேர்தலை சந்திக்கப் போகிறார்கள் என்று கட்சியின் மூத்தவர்கள் குமுறி வருகிறார்களாம்...’’ விக்கியானந்தா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • pakisthan21

  ஆப்கானிஸ்தானில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள் உள்பட 15 பேர் பலி!: புகைப்படங்கள்

 • kasirangaa21

  கொரோனா தொற்றால் மூடப்பட்டிருந்த அசாம் காசிரங்கா தேசியப்பூங்கா, உயிரியல் பூங்காக்கள் சுற்றுலாப் பயணிகள் பார்வைக்காக மீண்டும் திறப்பு!: புகைப்படங்கள்

 • kamaladance21

  அமெரிக்க தேர்தல் 2020: அனல் பறக்கும் பிரச்சாரத்திற்கு இடையே குடையுடன் கூல் நடனமாடிய கமலா ஹாரிஸ்.. வைரலாகும் புகைப்படங்கள்

 • thirupati21

  திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா: கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி..!!

 • police21

  காவலர் வீர வணக்க நாள்: நாட்டைப் பாதுகாப்பதற்காக, வீரதீர செயல்களில் ஈடுபட்டு உயிர் தியாகம் செய்த காவலர்களின் நினைவு சின்னத்தில் உயரதிகாரிகள் மலர்த்தூவி மரியாதை..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்