100 நாள் வேலைத்திட்டத்தை மத்திய அரசு ஒழித்து கட்டுகிறது: விவசாயிகள் சங்கம் கண்டனம்
2020-09-17@ 00:31:14

சென்னை: 100 நாள் வேலை திட்டத்தை ஒழித்துக்கட்டும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கை: கிராமப்புற மக்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித் தர வேண்டுமென்ற நோக்கத்துடன் மகாத்மா காந்தி ஊரக வேலை திட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த நல்ல திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் மத்திய பாஜ அரசுக்கு கடுகளவும் ஆர்வமில்லை. மாறாக, இந்த திட்டத்தை ஒழித்துகட்டும் வகையில் பல்வேறு முயற்சிகளில் அது ஈடுபட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் செப்டம்பர் 15ம் தேதி நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு கிராமப்புற மேம்பாட்டு அமைச்சர் நரேந்திரசிங் தோமர் அளித்துள்ள பதிலில், ஜூன் மாதம் தவிர மீதி நான்கு மாதங்களும் தேசிய சராசரியை விட தமிழ்நாட்டில் குறைவாகவே வேலை வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக முதலமைச்சர் மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய கடமை உள்ளது. அது மட்டுமல்லாமல், 200 நாட்களாக உயர்த்தும் திட்டம் எதுவும் அரசிடம் இல்லையென்று மத்திய அமைச்சர் கைவிரித்துவிட்டார். கிராமப்புற மக்களைப்பற்றி ஆட்சியாளர்களுக்கு அக்கறையில்லை என்பதையே அமைச்சரின் பதில் வெளிப்படுத்துகிறது. மத்திய அரசின் இந்த போக்கை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. அறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
Tags:
100 Day Program Federal Government Abolition Builds: Farmers Association Condemnation 100 நாள் வேலைத்திட்டம் மத்திய அரசு ஒழித்து கட்டுகிறது: விவசாயிகள் சங்கம் கண்டனம்மேலும் செய்திகள்
10ம் வகுப்பு மற்றும் ப்ளஸ் 2 மாணவர்களின்பெயர் பட்டியல் தயாரிக்க அரசு அனுமதி
கூட்டுறவு அங்காடிகளில் திடீர் ரெய்டு கணக்கில் வராத 2 லட்சம் பறிமுதல்
செங்கல்பட்டு அருகே பரபரப்பு: சாலையோர பள்ளத்தில் ஆக்சிஜன் டேங்கர் லாரி கவிழ்ந்தது: பெரும் விபத்து தவிர்ப்பு
சாலை பாதுகாப்பு மாதம் எமன் வேடம் அணிந்து நூதன விழிப்புணர்வு பிரசாரம்
ஊரக வளர்ச்சிதுறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
வருமானம் இன்றி குடும்பம் நடத்த முடியாமல் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை: ஊரடங்கை தளர்த்தியும் தொடரும் சோகம்
22-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்!: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..!!
அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன், சாதனை படைத்த துணை அதிபர் கமலா ஹாரிஸ் பதவியேற்பு!: புகைப்படங்கள்
21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!