SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அரியலூரில் 12 கற்சிலைகள் திருடிய விவகாரம் 18 ஆண்டுகளுக்கு பிறகு வழக்கு பதிவு

2020-09-17@ 00:30:55

சென்னை: பாலாம்பிகை சமேத கைலாசநாதர் கோயிலில் 12 கற்சிலைகள் திருடுபோன விவகாரத்தில் 18 ஆண்டுகளுக்கு பிறகு சிலை திருட்டு தடுப்பு பிரிவு தற்போது வழக்கு பதிவு செய்துள்ளது. அரியலூர் மாவட்டம் கள்ளங்குடியில் பாலாம்பிகை சமேத கைலாசநாதர் கோயில் உள்ளது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தொன்மையான இக்கோயிலில் கடந்த 2002ம் ஆண்டுக்கு முன்பு இரவு நேரத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், அர்த்தநாரீஸ்வரர், துர்க்கை அம்மன், சந்திரன், சண்டீகேஸ்வரி, பாலாம்பிகை, அப்பர்,மகாவிஷ்ணு, கஜலெட்சுமி, பைரவர் என 12 கற்சிலைகள் யாரோ திருடி சென்றுவிட்டார்கள் என பொறுப்பு செயல் அலுவலர் ரமேஷ் என்பவர் சிலை திருட்டு தடுப்பு பிரிவு, துணை கண்காணிப்பாளருக்கு புகார் அளித்துள்ளார். ஆனால் களவுபோன சிலைகள் குறித்து அப்போதிருந்த செயல் அலுவலரோ அல்லது அறங்காவலரோ புகார் அளிக்காத காரணத்தால் தற்போது 18 ஆண்டுகளுக்கு பிறகு சிலை திருட்டு தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபி அபய் குமார் சிங், ஐஜி அன்பு, கண்காணிப்பாளர் சக்திவேல் ஆகியோர் உத்தரவுப்படி ஐபிசி 457(2),380(2)ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை துணை கண்காணிப்பாளர் கதிரவன் புலன் விசாரணை நடத்தி வருகிறார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • dmk28

    புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து தி.மு.க தலைமையில் தோழமைக் கட்சிகள் தமிழகம் முழுவதும் போராட்டம்: காஞ்சியில் ஸ்டாலின் பங்கேற்பு..!!

  • india-jappan28

    வடக்கு அரபிக் கடற்பகுதியில் இந்திய - ஜப்பானிய கடற்படையினர் கூட்டாகப் போர் பயிற்சி!: புகைப்படங்கள்

  • soldier28

    தென் கொரியா உடனான போரில் உயிர் தியாகம் செய்த 117 சீன வீரர்களின் அஸ்தி சீனாவிடம் ஒப்படைப்பு!: புகைப்படங்கள்

  • balaji28

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவம் நிறைவு!: பால், தயிர், தேன் கொண்டு சக்கரத்தாழ்வாருக்கு தீர்த்தவாரி..!!

  • ukraine28

    உக்ரைனில் கோர விபத்து: ராணுவ விமானம் தரையில் விழுந்து தீப்பிடித்ததில் 25 பேர் உடல் கருகி பலி..புகைப்படங்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்