SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காக்கிகளிடம் கடுப்பான முதல்வரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2020-09-17@ 00:30:14

‘‘தமிழக விவிஐயியிடம் நல்ல பெயர் வாங்க... மாங்கனி மாவட்டத்தில் காக்கிகள் பண்ற அட்டகாசம் தாங்க முடியலையாமே... முந்திரி கொட்டை மாதிரி ஏன் இப்படி செய்தீங்கனு டோஸ் வாங்குறது அங்க காக்கிகளுக்கு வழக்கமான ஒன்றாக மாறிப்போச்சாமே...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘விளைநிலங்களில் பெட்ரோலியம் குழாய் பதிக்கும் ஐடிபிஎல் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிச்சு, தமிழகத்தில் 6 மாவட்டங்களில் விவசாயிகள் தொடர்காத்திருப்பு போராட்டம் நடத்தினாங்க. இது ஐந்து மாவட்டங்களை சேர்ந்த பல்துறையை சேர்ந்த அதிகாரிகள்... வராத திட்டத்துக்கு ஏன் போராட்டம்... முறைப்படி அறிவிப்பு வந்தா செய்யுங்கனு கேட்டாங்களாம்... அதற்கு விவசாயிகள் பெட்ரோலியம் பதிக்கும் திட்டத்தை மறு உத்தரவு வரும் வரை செயல்படுத்த மாட்டோம்னு எழுத்து பூர்வமாக எழுதி கொடுத்தாங்க...

இதனால அந்த ஐந்துமாவட்டத்துல விவசாயிகள் கலைந்து போயி... அவங்க வேலையை பார்க்க போயிட்டாங்க.. ஆனால்... தமிழக விவிஐபியிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும். மாவட்டத்தில் போராட்டத்தை ஒடுக்கிவிட்டோம். போராட்டம் பரவல என்று தமிழக மேலிடத்துக்கு சொல்லி நல்ல பெயர் வாங்க நினைச்சாங்க... அது அதான் மாங்கனி காக்கிகளுக்கு வில்லங்கமா போச்சாம்... காரணம் மற்ற மாவட்டங்களில் விவசாயிகளை கலைக்க எடுத்த தந்திரத்தை நீங்கள் ஏன் செய்யல... எலக்‌ஷன் டைம்ல போராட்டத்துக்கு வந்தவங்களை சமாதானப் படுத்தி அனுப்புவதை விட்டுவிட்டு கைது செய்து இருக்கீங்க... மற்ற மாவட்டங்களில் பிரச்னையை சுமூகமாக முடிச்சுட்டாங்க... நம்ம மாவட்டத்துல வில்லங்கத்தை ஏற்படுத்திட்டீங்க.. இனிமேல் கைது நடவடிக்கைக்கு முன்பு சமாதானம் பேசி கலைந்துபோக் செய்யுங்கனு டோஸ் விழுந்ததாம்.. நாம என்ன செய்தாலும் அது நம்மையே ரிவர்ஸ்ல தாக்குதேனு காக்கிகள் புலம்புறாங்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘முதல்வர் பெயரை டேமேஜ் செய்யும் காக்கிகள் பற்றி சொல்லுங்களேன்...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘புதுச்சேரியில் ஆட்சிக்கும் நிர்வாகத்துக்கு ஏழாம் பொருத்தம். இந்நிலையில் மாஸ்க், சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்களுக்கு அபராதம் விதிக்க புதுச்சேரி போலீசுக்கு டார்கெட் பிக்ஸ் பண்ணி இருக்காங்களாம். யாரும் கிடைக்காவிட்டால் சாலையில் போவோரை பிடித்து ரூ.100 செலானை கிழித்து கையில் கொடுத்து இந்த அபராதம்னு கொடுக்கிறாங்களாம்... இது குறித்து முதல்வரிடம் சொல்கிறேன் என்று பொதுமக்களே, நிர்வாகிகளோ சொன்னால்... காக்கிகள் சிரித்து கொண்டே.. அபராதம் போடச்சொன்னதே முதல்வர்தான் என போலீசார் கூறி கறக்கிறார்களாம்.

இது தொடர்பாக புகார் வந்தாலும், கண்டு கொள்ளாமல் இருந்தாராம். ஆனால் எல்லைமீறிப்போய், போலீசார் எல்லோரும் ஒரே கோரசாக முதல்வர்தான் அபராதம் வசூலிக்க உத்தரவு போட்டிருப்பதாக எல்லோரிடமும் கூறி வந்தனர். இதனால் பொதுமக்களின் கோபம் முதல்வர் மீது திரும்பியுள்ளதாம்... அது ஆட்சிக்கு கெட்ட பெயரை ஏற்படுத்த நடக்கும் முயற்சியாகவே முதல்வர் பார்க்கிறாராம். இதனால காக்கிகள் மீது பெரும் கோபத்துக்கு உள்ளானா முதல்வர், என் மீது போலீசார் வீண்பழி போடுகிறார். தனிப்பட்ட உத்தரவை நான் போடவில்லை. என் பெயருக்கு போலீசார் களங்கம் விளைவிப்பதாக பகிரங்கமாகவே குற்றம் சாட்டினார். இதனை தொடர்ந்து காவல்துறை உயரதிகாரிகளை அழைத்து முதல்வர் கூட்டம் நடத்தினார். அரசின் முடிவை, முதல்வர் முடிவுனு யாராவது பொதுமக்களிடம் சொன்னால்... துறை ரீதியிலான நடவடிக்கை பாயும் என்று எச்சரித்தாராம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘கண்ணை துடைச்சுட்டே... கரன்சிகளை குவித்த கோவையை பற்றி சொல்லுங்களேன்...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘கோவை மாநகரில் 180 டாஸ்மாக் கடை, புறநகர் பகுதியில் 168 டாஸ்மாக் கடைகள் இயங்குகின்றன. இவற்றில் பார் இருக்கு. ஒவ்வொரு ஆண்டும் ‘பார்’’ ஏலம் நடக்கும்போது, ஏலம் எடுக்கும் நபர், அதற்குரிய தொகையை அரசுக்கு செலுத்தவேண்டும். ஆனால், கோவை புறநகர் பகுதியில் பெரும்பாலான ‘பார்’களுக்கு பணம் செலுத்துவது இல்லை. இதனால், அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. மதுவும் அதிக விலை வைத்து விற்கிறார்களாம்...  இதனால ஒரு நாளைக்கு, ஒரு கடைக்கு ரூ.40 ஆயிரம் வீதம் கல்லா கட்டுறாங்களாம்.

மாதம் பல கோடி ரூபாய் கள்ளச்சந்தையில் புரள்கிறது. கொரோனா காலத்தில், ஒரு பக்கம் ஊழியர்களுக்கு வேலையிழப்பு, மறுபக்கம் அரசுக்கு வருவாய் இழப்பு என அடிமேல் அடி விழுகிறது. ஆனால், டாஸ்மாக்கில் கரன்சி மழை கொட்டுகிறது. அதிகாரிகள் ஆய்வு என்ற பெயரில், கண்துடைப்பாக நடவடிக்கை எடுத்ததாக கணக்கு காட்டுகிறார்கள். ஆனால், அதிகாரிகள், ஊழியர்கள், பார் ஏலம் எடுத்தவர்கள், ஆளும்கட்சி முக்கிய புள்ளிகள் என கூட்டு பலமாக இருப்பதால், கரன்சி மழைக்கு பஞ்சமில்லை...’’ என்றார் விக்கியானந்தா.    


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • pakisthan21

  ஆப்கானிஸ்தானில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள் உள்பட 15 பேர் பலி!: புகைப்படங்கள்

 • kasirangaa21

  கொரோனா தொற்றால் மூடப்பட்டிருந்த அசாம் காசிரங்கா தேசியப்பூங்கா, உயிரியல் பூங்காக்கள் சுற்றுலாப் பயணிகள் பார்வைக்காக மீண்டும் திறப்பு!: புகைப்படங்கள்

 • kamaladance21

  அமெரிக்க தேர்தல் 2020: அனல் பறக்கும் பிரச்சாரத்திற்கு இடையே குடையுடன் கூல் நடனமாடிய கமலா ஹாரிஸ்.. வைரலாகும் புகைப்படங்கள்

 • thirupati21

  திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா: கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி..!!

 • police21

  காவலர் வீர வணக்க நாள்: நாட்டைப் பாதுகாப்பதற்காக, வீரதீர செயல்களில் ஈடுபட்டு உயிர் தியாகம் செய்த காவலர்களின் நினைவு சின்னத்தில் உயரதிகாரிகள் மலர்த்தூவி மரியாதை..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்