SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பயிற்சி பெற ஏங்கியதற்கு வெட்கப்படுகிறேன்... சுனில் செட்ரி உருக்கம்

2020-09-17@ 00:29:48

புதுடெல்லி: கொரோனா பீதி காரணமாக மக்கள் உயிர் வாழ போராடிக் கொண்டிருக்கும்போது, நான் பயிற்சி பெற முடியவில்லையே என ஏங்கியதற்காக வெட்கப்படுகிறேன் என்று இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேட்ரி தெரிவித்துள்ளார். இந்திய கால்பந்து அணி மற்றும் ஐஎஸ்எல் தொடரில் பெங்களூர் எப்சி அணியின் கேப்டன் சுனில் செட்ரி, ஊரடங்கு கால அனுபவங்களை ஊடகம் ஒன்றில் பகிர்ந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது: ஊரடங்கு ஆரம்பிக்கப்பட்டபோது அது ஓரிரு மாதங்கள் மட்டுமே நீடிக்கும் என்று நினைத்தேன். தொடர்ந்து விளையாடிக் கொண்டிருக்கும்போது ஓய்வுக்காக ஏங்குவோம். ஆனால், இப்போது கிடைத்த ஓய்வு எதிர்பார்க்காதது மட்டுமல்ல விரும்பாத ஓய்வு. இவ்வளவு நாட்கள் கால்பந்து விளையாடாமல் இருப்பதை ஒருபோதும் விரும்பமாட்டேன்.

ஊரடங்கு காலத்தில் கொஞ்சம் உணர்ச்சியற்றவனாகவும்,  சுயநலவாதியாகவும் இருந்தேன். பயிற்சி செய்ய முடியவில்லையே என்று என்னைப் பற்றி மட்டுமே யோசித்தேன். ஏப்ரல் மாத இறுதியில் பயிற்சிக்காக வெளியில் செல்வதை விட வீட்டில் இருப்பது நல்லது என்பதை உணர்ந்தேன். அதுமட்டுமல்ல மக்கள் தங்கள் உயிரை காக்கவும், அடுத்த வேலை உணவுக்காகவும், தங்குமிடத்திற்காகவும் பேராடிக்கொண்டிருந்தது  என்னை உலுக்கியது. அப்போதுதான் மக்கள் உயிருக்காக போராடும்போது நாம் பயிற்சி பெற முடியவில்லையே என்று அழுததை அவமானமாக உணர்ந்தேன்.

அந்த நேரத்தில் என் மனைவி சோனம் மற்றும் நண்பர்கள் நிவாரண உதவிகள் செய்யும் பணியில் ஈடுபட்டனர். நமக்கு தேவையானதை விட நிறைய இருக்கிறது. அதனை இல்லாதவர்களுக்கு கொடுப்பது சரியானது. அதற்கான வாழ்க்கை எனக்கு அமைந்ததற்கு நன்றி சொல்கிறேன். அதுமட்டுமல்ல, தொடையில் ஏற்பட்டிருந்த காயத்திற்கு ஊரடங்கு நேரத்தில் சிகிச்சை எடுத்துக் கொண்டேன். சுமார் ஒன்றரை மாதம் ஓய்வெடுக்க அறிவுறுத்தி இருந்தனர். அதற்கு ஊரடங்கு கால ஓய்வு உதவியது. கூடவே வீட்டில் இருந்த  பொருட்களை எல்லாம் பயன்படுத்தி பயிற்சி பெற ஆரம்பித்தேன். ஆனால் அது போதுமானதாக இல்லை. ஊரடங்கு தளர்வுக்கு பிறகு பெல்லாரியில் உள்ள இன்ஸ்பயர் இன்ஸ்ட்டியூட் ஆப் ஸ்போர்ட்சில் 2வாரம் பயிற்சி பெற்றதும் பயன் உள்ளதாக இருக்கிறது. தற்போது மீண்டும் ஓய்வில் இருக்கிறேன். இவ்வாறு சுனில் கூறினார்.

* ரொனால்டோ ஒரு அரக்கன்...
இந்தியாவுக்காக சுனில் 72 கோல் அடித்துள்ளார். கிறிஸ்டியோனா ரொனால்டோ (போர்ச்சுகல்) தன் நாட்டுக்காக 101 கோல் அடித்துள்ளார். அவர் சாதனையை நீங்கள் முறியடிப்பீர்களா என்று சுனிலிடம் கேட்டதற்கு, ‘நாங்கள் இருவரும் 2002ம் ஆண்டில்தான் சர்வதேச போட்டிகளில் விளையாடத் தொடங்கினோம். அவர் அதிவேக வீரர். அதிலும் கோல் அடிக்க முனையும் போது அவர் அரக்கனாக மாறி விடுகிறார். கோல் ஏரியாவில் அவர் காட்டும் வேகமும், முனைப்பும் பிரமிக்க வைக்கிறது. தான் ஆடும் அணிக்கு ஏற்ப தன் விளையாட்டை மாற்றும் விதமும் அசாதாரணமானது. இன்னும் தான் ஆடும் அணியின் முக்கிய வீரராக திகழ்கிறார். உலக கோப்பையை தவிர அவர் எல்லாவற்றையும் வென்றுள்ளார். இப்போது கிடைக்கும் அனுபவமும், அறிவும் 17வயதிலேயே ஒரு வீரருக்கு கிடைத்தால் இலக்குகளை எளிதில் அடைய முடியும். எல்லாம் கிடைக்கும் போது வயதாகி விடுகிறது’ என்றார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 25-09-2020

  25-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 24-09-2020

  24-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • mumbairain23

  விடாத கனமழையால் தண்ணீரில் மிதக்கும் மும்பை மாநகரம்!: சாலையில் தேங்கிய மழைநீரால் போக்குவரத்து பாதிப்பு..!!

 • ele23

  தென் ஆப்பிரிக்காவின் போட்ஸ்வானாவில் நஞ்சு உருவான நீரைப் பருகிய 300க்கு மேற்பட்ட யானைகள் திடீர் பலி!: ஆய்வாளர்கள் அதிர்ச்சி..!!

 • ast23

  ஆஸ்திரேலியாவின் டாஸ்மானியா கடற்கரையில் கொத்து கொத்தாய் கரை ஒதுங்கிய திமிங்கலங்கள்!: மணலில் சிக்கி உயிருக்கு போராட்டம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்