SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

2020-21ம் ஆண்டிற்கான துணை பட்ஜெட்டில் 12,845 கோடி ஒதுக்கீடு கொரோனா தடுப்பு பணிக்கு மட்டும் 9,027 கோடி: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்

2020-09-17@ 00:14:03

சென்னை: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று 2021ம் ஆண்டிற்கான துணை பட்ஜெட் தாக்கல் செய்தார். அதன்படி 12,845.20 கோடி நிதி ஒதுக்க பேரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதில் கொரோனா தடுப்பு பணிக்காக மட்டும் 9,027.08 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவையில் நேற்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் 2020-2021ம் ஆண்டிற்கான முதல் துணை மதிப்பீடுகளை (துணை பட்ஜெட்) தாக்கல் செய்து பேசியதாவது: 2020-2021ம் ஆண்டிற்கான முதல் துணை மதிப்பீடுகளை இந்த மன்றத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்த துணை மதிப்பீடுகள், மொத்தம் 12,845.20 கோடி நிதியை ஒதுக்குவதற்கு வழிவகை செய்கின்றன.

* கொரோனா கட்டுப்பாடு, தடுப்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக துணை மானிய கோரிக்கையில் மொத்தம் 9,027.08 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
* புது பணிகள்’ மற்றும் ‘புது துணை பணிகள்’ உள்ளிட்ட எதிர்பாரா செலவு நிதியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ள தொகையை ஈடுசெய்வதும் துணை மானிய கோரிக்கையின் நோக்கமாகும்.
* கொரோனா நோய் தொற்று காரணமாக பொது விநியோக கடைகளில் இலவச பொருட்கள் மற்றும் கூடுதல் பொருட்கள் வழங்கப்பட்டதற்காக 3,359.12 கோடி கூடுதல் தொகை துணை பட்ஜெட்டில் சேர்க்கப்பட்டுள்ளது.
* கொரோனா நோய் தொற்று நிவாரண உதவியாக, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா 1000 மற்றும் பல்வேறு நல வாரிய உறுப்பினர்களுக்கும் பண உதவி என 4,218.20 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.
* 1,109.42 கோடி கூடுதல் ஒதுக்கீடாக, கொரோனா மருந்துகள், ஆர்டிபிசிஆர் மற்றும்  சம்பந்தப்பட்ட நோய் கண்டறியும் சாதனங்கள் கொள்முதல் உள்ளிட்டவைகள் சுகாதார துறைக்கு செலவு செய்யப்பட்டுள்ளது.
* தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்திற்கு இந்திய ரிசர்வ் வங்கியின் மூலதன கோட்பாடுகளை பின்பற்றுவதற்காக கூடுதல் பங்கு மூலதன உதவியாக அரசு 437 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது.
* மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளுக்கு அரசு 987.85 கோடி மானியமாக அனுமதித்துள்ளது.
* மின் உற்பத்திக்கான நிலுவை தொகைகளை வழிவகை முன்பணமாக அரசு 170.28 கோடி அனுமதித்துள்ளது.
* வேளாண் துறைக்கு 107.40 கோடி அரசு அனுமதித்துள்ளது.
* கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையங்கள் அமைக்க 82.60 கோடி சேர்க்கப்பட்டுள்ளது.
* திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு மற்றும் தென்காசி மாவட்டங்களில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் கட்டுவதற்காகவும், பல்வேறு இடங்களில் 8 புதிய வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் 6 வருவாய் கோட்டாட்சியர் குடியிருப்புகள் கட்டுவதற்காக அரசு 645.26 கோடி அனுமதித்துள்ளது.
* அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களை நிறுவுவதற்காகவும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதற்காகவும் 580.87 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது.
*  புதிய தொழில்முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கூடுதல் மூலதன மானியமாக 100 கோடி வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார். இதையடுத்து, 2020-2021ம் ஆண்டுக்கான துணை பட்ஜெட்பேரவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • dmk28

    புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து தி.மு.க தலைமையில் தோழமைக் கட்சிகள் தமிழகம் முழுவதும் போராட்டம்: காஞ்சியில் ஸ்டாலின் பங்கேற்பு..!!

  • india-jappan28

    வடக்கு அரபிக் கடற்பகுதியில் இந்திய - ஜப்பானிய கடற்படையினர் கூட்டாகப் போர் பயிற்சி!: புகைப்படங்கள்

  • soldier28

    தென் கொரியா உடனான போரில் உயிர் தியாகம் செய்த 117 சீன வீரர்களின் அஸ்தி சீனாவிடம் ஒப்படைப்பு!: புகைப்படங்கள்

  • balaji28

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவம் நிறைவு!: பால், தயிர், தேன் கொண்டு சக்கரத்தாழ்வாருக்கு தீர்த்தவாரி..!!

  • ukraine28

    உக்ரைனில் கோர விபத்து: ராணுவ விமானம் தரையில் விழுந்து தீப்பிடித்ததில் 25 பேர் உடல் கருகி பலி..புகைப்படங்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்