கொரோனாவால் பாதிக்கப்பட்ட திருப்பதி தொகுதி எம்பி துர்கா பிரசாத் ராவ் சென்னையில் மரணம்; பிரதமர் மோடி இரங்கல்
2020-09-16@ 20:43:56

சென்னை: திருப்பதி எம்.பி.துர்காபிரசாத்(63) கொரோனாவால் உயிரிழந்தார். சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த துர்காபிரசாத் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திருப்பதி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.பி. துர்கா பிரசாத் ராவ், கடந்த சில தினங்களுக்கு முன் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து மருத்துவ பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து கடந்த மாதம் 14ஆம் தேதி சென்னை தனியார் மருத்துவமனையில் துர்கா பிரசாத் ராவ் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட நிலையில், மூச்சுத் திணறல் காரணமாக இன்று துர்கா பிரசாத் ராவ் உயிரிழந்தார். இவரது மறைவு ஆந்திர மாநில அரசியல் வட்டாரங்களில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த துர்கா பிரசாத் ராவ் குடும்பத்தினருக்கு ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி இரங்கல் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி இரங்கல்
கொரோனாவால் உயிரிழந்த திருப்பதி நாடாளுமன்ற உறுப்பினர் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். ஆந்திரப்பிரதேச வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியவர் துர்காபிரசாத் ராவ் என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார்.
மேலும் செய்திகள்
10ம் வகுப்பு மற்றும் ப்ளஸ் 2 மாணவர்களின்பெயர் பட்டியல் தயாரிக்க அரசு அனுமதி
கூட்டுறவு அங்காடிகளில் திடீர் ரெய்டு கணக்கில் வராத 2 லட்சம் பறிமுதல்
செங்கல்பட்டு அருகே பரபரப்பு: சாலையோர பள்ளத்தில் ஆக்சிஜன் டேங்கர் லாரி கவிழ்ந்தது: பெரும் விபத்து தவிர்ப்பு
சாலை பாதுகாப்பு மாதம் எமன் வேடம் அணிந்து நூதன விழிப்புணர்வு பிரசாரம்
ஊரக வளர்ச்சிதுறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
வருமானம் இன்றி குடும்பம் நடத்த முடியாமல் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை: ஊரடங்கை தளர்த்தியும் தொடரும் சோகம்
22-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்!: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..!!
அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன், சாதனை படைத்த துணை அதிபர் கமலா ஹாரிஸ் பதவியேற்பு!: புகைப்படங்கள்
21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!