கலிஃபோர்னியாவுக்கு கமலா ஹாரிஸ் திடீர் பயணம்..!! - காட்டு தீயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரில் சென்று ஆறுதல்!!!
2020-09-16@ 18:37:31

வாஷின்டன்: அமெரிக்க துணை அதிபர் வேட்பாளரான கமலா ஹாரிஸ் கலிஃபோர்னியா மாநிலத்தில் காட்டு தீயால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். ஆகஸ்ட் மாதம் மத்தியில் சிறிய அளவில் ஏற்பட்ட காட்டு தீ படிப்படியாக அதிகரித்து கலிஃபோர்னியா போன்ற 3 மாநிலங்களை புரட்டி போட்டிருக்கிறது. தொடர்ந்து மோசமான வானிலையால் அதிகரித்த காட்டு தீ ஒரு மாதத்தில் வனப்பகுதியில் இருந்த விவசாய நிலங்கள், பண்ணை வீடுகள் என அனைத்தையும் சாம்பலாக்கி விட்டது. தடுப்பு பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்களுக்கும் படுகாயம் ஏற்பட்டன. 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரம் வேகமெடுத்து வரும் நிலையில், ஜனநாயக கட்சியின் துணை அதிபர் வேட்பாளரான கமலா ஹாரீஸ் கலிஃபோர்னியாவில் பிரச்சாரம் மேற்கொண்டார். வெளி மாநிலங்களில் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த கமலா ஹாரீஸ், தற்போது சொந்த மாநிலமான கலிஃபோர்னியாவுக்கு வந்துள்ளார். இதையடுத்து கலிஃபோர்னியாவுக்கு வந்த கமலா ஹாரிஸ் வன தீயால் வாழ்வாதாரத்தை இழந்து வாடிய மக்களை நேரில் கண்டு ஆறுதல் கூறினார். பின்னர், பேசிய அவர், உலக வெப்பமயமாதல் குறித்த உலகளாவிய கருத்துக்களுடன், தற்போதைய அதிபர் டொனால்ட் ட்ரம்ப் முரண்படுவதாக குற்றம் சாட்டினார். மேலும், ஜனநாயக கட்சி வெற்றி பெற்றால், உலக நாடுகளுடன் இணைந்து புவி வெப்பமயமாதலைக் குறைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் உறுதியளித்தார்.
மேலும் செய்திகள்
அமெரிக்க கேபிடல் கலவர விவகாரத்தில் டிரம்பை முடக்கி வைத்த இந்திய வம்சாவளி பெண்: சர்வதேச பத்திரிகைகள் பாராட்டு
ஐஸ்கிரீம்களில் கொரோனா வைரஸ் ... புது குண்டை தூக்கிப்போடும் சீனா : சாப்பிட்டவர்களை தேடும் அதிகாரிகள்
ஒவ்வொரு அமெரிக்கருக்கும் சுமார் ரூ.1 லட்சம் நிதியுதவி :அமெரிக்காவின் புதிய அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு!!
இந்தியாவின் மெகா தடுப்பூசித் திட்டம்: வாழ்த்திய இலங்கை பிரதமர் ராஜபக்ச; நன்றி கூறிய பிரதமர் மோடி
அமெரிக்காவில் மட்டும் 4 லட்சம் பேர் பலி.. உலகளவில் கொரோனா பலி எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியது... திணறும் உலக நாடுகள்
இலங்கையில் நடந்த போர் குற்றம் பற்றி விசாரிக்க சுதந்திரமான தனி அமைப்பு: ஐநா.வுக்கு தமிழ் கட்சிகள் கடிதம்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்