SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மேலிட நடவடிக்கையால் கொந்தளித்த தொண்டர்களின் முகம் நீலநிறத்துக்கு மாறிய கதையை சொல்கிறார் : wiki யானந்தா

2020-09-16@ 03:57:01

‘‘இரண்டு டிரிப் லாரியை ஓட்டினா... சிவங்கையில எல்லோரும் லட்சாதிபதிகளாகிடலாம்ன்னு சொல்றாங்க... அப்டியா...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘சிவகங்கை மாவட்டத்துல முன்பு அரசு குவாரியில, லாரிகளில் மண் எடுத்து வந்தாங்க... அப்புறமா அதை மூடிட்டு, அதிகாரிகள் ஒத்துழைப்புடன் இலை தரப்பு ‘அன்லிமிட்டா’ அள்ளி மணலை லட்சாதிபதியாக மாறிட்டாங்கனு கட்டுமான தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் சொல்றாங்க. நீதிமன்றத்தின் உத்தரவால் இப்போதைக்கு மணல் அள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதை காரணமாக வைத்து தற்போது திருச்சியில் இருந்து கொண்டு வரப்படும் மணல் மட்டுமே, சிவங்கையின் கட்டுமான தேவைக்கு உதவுதாம். குவாரி இருந்தபோது  ஒரு யூனிட் மணல் 10 ஆயிரம் என்று இருந்ததாம். ஊரடங்கு தளர்த்தியதால் கட்டுமான பணிகள் வேகமெடுத்து இருப்பதால் திருச்சியை காரணம் காட்டி 5 யூனிட் மணல் லாரி ₹50 ஆயிரத்திற்கு விற்கிறாங்களாம். இரண்டு டிரிப் ஓட்டினால் லாரி ஓனர்கள் லட்சம் ரூபாய் சம்பாதித்து விடுகிறார்களாம். இந்த விலை உயர்வால் சிவகங்கை மாவட்டத்துல வீடு, கட்டிடப்பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாம். இலை கட்சியினர் தலையீடு இல்லாமல், அரசே மணல் குவாரிகளை முறைப்படுத்தி நடத்தணும்... மணல் கொள்ளையை தடுக்கணும்னு மாவட்டம் முழுவதும் மக்களின் குரல் ஓங்கி ஒலிக்குதாம். ரொம்ப சீக்கிரமாகவே லாரி ஓனர்களின் லட்சாதிபதி கனவை தடுக்க பல்வேறு சமூக அமைப்பினர் மக்களைத் திரட்டி போராட்டத்திற்கு தயாராகி வர்றாங்க...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘தாமரை நிர்வாகிகள் போட்டு கொடுத்ததால் கிரிவலம் மாவட்ட அதிகாரிகளும்... வெயில் ஊர் மாவட்ட அதிகாரிகளும் கலங்கிப்போய் இருக்காங்களாமே, அப்டியா..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘சிறு, குறு விவசாயிகளுக்கான பிரதமரின் கிசான் திட்டத்தில் பல மாவட்டங்களில் கோடிக்கணக்கான ரூபாய் மோசடி தொடர்பாக சிபிசிஐடி மற்றும் உள்ளூர் போலீசார் விசாரணை நடத்தி வந்தாலும், இவ்விவகாரம் இப்போது உள்ளூர் தாமரை தரப்பினரால் மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு போனாங்களாம். இதனால் இவ்விவகாரத்தில் மத்திய அரசு நேரடியாக தலையிட்டு வேளாண் துறை அதிகாரிகளுக்கு குட்டு விழும் சூழலை ஏற்படுத்தி இருக்காங்களாம்.
அதேபோல் சிபிசிஐடி விசாரணை பூதாகரமாகி வருவதால் இந்த மோசடியில் வேளாண் இணை இயக்குனர் அலுவலகம், உதவி இயக்குனர் அலுவலகங்கள், கலெக்டர் அலுவலகத்தில் உள்ள வேளாண் பிரிவு அலுவலகங்களில் அதிகாரிகள் தலை தப்பினால் தம்பிரான் புண்ணியம் என்று தினந்தோறும் ஒருவரை ஒருவர் சிபிசிஐடி நம்மளிடம் விசாரணைக்கு வர்றாங்களா என்று கிள்ளி பார்த்து கொள்கிறார்களாம். குறிப்பாக, இந்த பயனாளிகள் பட்டியல் தயாரிப்பு பொறுப்பில் இருந்த கீழ்நிலை அதிகாரிகளை, ேவலூர், திருவண்ணாமலை மாவட்ட வேளாண்துறையின் உயர் பொறுப்பில் உள்ள அதிகாரிகளை அழைத்து, இந்த விவகாரம் குறித்து மறைமுகமாக விசாரித்து வருகிறார்களாம். காரணம், இந்த விவகாரத்தில் மோசடியில் ஈடுபட்டவர்கள் கடைசியில் நம்மை சிக்க வைத்துவிட்டால் என்ன செய்வது? என்ற பீதியில் உறைந்துள்ளார்களாம் உயர் பதவியில் உள்ள அதிகாரிகள்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘நீலமான மாவட்டத்துல இலை கட்சியில கோஷ்டி பூசல் உச்சக்கட்டத்தை எட்டியிருக்காமே, அப்படியா...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘நீலகிரி மாவட்ட இலை கட்சியில் பல ஆண்டுகளாக ராஜ்யசபா எம்.பி.யாக இருந்தவரிடம் இருந்து மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட்டு, பிரைன் மூனிடம் கொடுக்கப்பட்டது. இதனால் நீலகிரி மாவட்ட இலை கட்சியில்  இரு கோஷ்டி உருவானது. இதற்கிடையில், குன்னூர் தொகுதி மக்கள் பிரதிநிதி தலைமையில் மூன்றாவது கோஷ்டியும் உதயமானது... இந்நிலையில், வினோதமானவரை மாவட்ட செயலாளராக நியமிக்க கட்சி மேலிடம் முடிவுசெய்தது. ஆனால், அவரோ கட்சி பணிகளை மறந்து, ஆங்காங்கே கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வந்தார். ஆனாலும், கட்சியின் ேமலிடம் பதவி வழங்கி, அறிவிப்பு ெவளியிட்டது. புதிய நிர்வாகிகள் பெயர் பட்டியலும் வெளியானது. முக்கிய திருப்பமாக, கிப்ட் கட்சிக்கு சென்றுவிட்டு மீண்டும் இலை கட்சிக்கு திரும்பிய இரு நபர்களுக்கு, ஐந்தே நாளில் ஒன்றிய செயலாளர், நகர செயலாளர் என்ற உயர் பதவி வழங்கப்பட்டதாம். ஆறு ஆண்டுகளுக்கு முன்பு செத்துபோன ஒருவருக்கும் பதவி வழங்கப்பட்டது. கட்சியின் மேலிட நடவடிக்கையால், நீலகிரி இலை தொண்டர்கள் ஜில் கால நிலையிலும் கொதித்து போய் அவங்க முகமெல்லாம் சிவப்பதற்கு பதிலாக நீலமாக மாறிப்போச்சாம்.. கேட்டால் உச்சகட்ட கொதிப்பு தான் எங்கள் முகம் நீலமானதற்கு காரணம் என்று இலை நிர்வாகிகள் வாய்ஸ் கொடுக்கிறாங்க. கட்சிக்கு உண்மையாக உழைத்த எங்களுக்கு பதவி இல்லையா என தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். கட்சிக்கு எதிராக ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத கட்சியின் தலைமையை கண்டித்து இன்னும் பெரிய அளவில் போராட்ட களத்தில் குதிக்கவும் திட்டமிட்டுள்ளனர். இது, தலைமைக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது...
இதற்கிடையில், மேலிட உத்தரவுப்படி, நீலகிரி மாவட்ட இலை கட்சி தொண்டர்களின் எதிர்ப்பு அரசியலை உளவுப்பிரிவு போலீசார் ரகசியமாக கண்காணித்து வருகின்றனர்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘சிறைப்பறவை வெளியில் வருவதால்... அல்வா மாவட்டத்தில் கிப்ட் கட்சி ஆட்கள் சந்தோஷத்தில் இருக்காங்களாம்...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘கொரோனா பரவல் இருந்தாலும் வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில் சட்டசபை தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் சிறைப்பறவை ரிலீஸ் குறித்த செய்தி வந்தது தான் ஹாட் டாபிக். ஜனவரி 27ம் தேதி சிறையில் இருந்து வெளியே வருகிறார் என்பதால் கிப்ட் தரப்பில்  புதிய உற்சாகம் கரைபுரண்டு ஓடுதாம். கிப்ட்காரர் கட்சி தொடங்கிய போது நெல்லையில் அவருக்கு ஒரு பெரிய ஆதரவு வட்டம் இருந்தது. நாளடைவில் அவர்களில் முக்கிய நிர்வாகிகள் இலையில் ஐக்கியமாகி விட்டனர். எனினும் நெல்லையை கிப்ட் கட்சி  முக்கியமானதாக நினைக்கிறதாம். இந்நிலையில் நெல்லையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்க வந்த கட்சித்தொண்டர்கள் சிறைப்பறவையை முன்னிறுத்தியே கோஷமிட்டுள்ளனர். இது குறித்து உளவுத்துறையினர் மேலிடத்திற்கு ரிப்போர்ட் போட்டு இருக்காங்களாம்...’’ என்றார் விக்கியானந்தா      


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • pakisthan21

  ஆப்கானிஸ்தானில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள் உள்பட 15 பேர் பலி!: புகைப்படங்கள்

 • kasirangaa21

  கொரோனா தொற்றால் மூடப்பட்டிருந்த அசாம் காசிரங்கா தேசியப்பூங்கா, உயிரியல் பூங்காக்கள் சுற்றுலாப் பயணிகள் பார்வைக்காக மீண்டும் திறப்பு!: புகைப்படங்கள்

 • kamaladance21

  அமெரிக்க தேர்தல் 2020: அனல் பறக்கும் பிரச்சாரத்திற்கு இடையே குடையுடன் கூல் நடனமாடிய கமலா ஹாரிஸ்.. வைரலாகும் புகைப்படங்கள்

 • thirupati21

  திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா: கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி..!!

 • police21

  காவலர் வீர வணக்க நாள்: நாட்டைப் பாதுகாப்பதற்காக, வீரதீர செயல்களில் ஈடுபட்டு உயிர் தியாகம் செய்த காவலர்களின் நினைவு சின்னத்தில் உயரதிகாரிகள் மலர்த்தூவி மரியாதை..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்