SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சில்லி பாயின்ட்...

2020-09-16@ 03:51:41

* இந்திய டெஸ்ட் அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் சதாசிவ் பாட்டீல் (86), மகாராஷ்டிரா மாநிலம் கோலாபூரில் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு பிசிசிஐ இரங்கல் தெரிவித்துள்ளது. 1955ல் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமான இவருக்கு பின்னர் இந்திய அணிக்காக விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. எனினும் மும்பை, மகாராஷ்டிரா அணிகளுக்காக ரஞ்சி உள்ளிட்ட 36 முதல்தர போட்டிகளில் விளையாடி 866 ரன், 83விக்கெட் எடுத்துள்ளார். மகாராஷ்டிரா அணியின் கேப்டனாகவும் பணியாற்றி உள்ளார்.
*  தமிழ்நாடு கேலோ மாஸ்டர்ஸ் சங்கம் சார்பில் தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு விளையாட்டு வீராங்கனைகள் அனிதா பால்ராஜ் (கூடைப்பந்து), கிறிஸ்டி எலனா (மாஸ்டர்ஸ் ஹாக்கி), ஆடம் ஆன்டனி (ஹாக்கி) ஆகியோருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
*  ஐபிஎல் டி20 தொடரின் 13வது சீசனில் ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் பங்கேற்பது குறித்து உறுதியாக எதுவும் சொல்ல முடியாது என்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தலைமை பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்டு தெரிவித்துள்ளார்.
*  போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள, உலகில் அதிகம் சம்பாதிக்கும் கால்பந்து வீரர்கள் பட்டியலில் அர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்ஸி முதல் இடமும், போர்ச்சுகல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ 2வது இடமும் பிடித்துள்ளனர். பிரேசில் நட்சத்திரம் நெய்மர் 3வது இடத்தில் உள்ளார்.
* சுரேஷ் ரெய்னா இல்லாதது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மிகப் பெரிய பின்னடைவாக இருக்கும் என்று தென் ஆப்ரிக்க அணி முன்னாள் ஆல் ரவுண்டர் அல்பி மார்கெல் தெரிவித்துள்ளார்.
* பிரெஞ்ச் ஓபனில் ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதற்கு நட்சத்திர வீரர் ரபேல் நடால் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • dmk28

  புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து தி.மு.க தலைமையில் தோழமைக் கட்சிகள் தமிழகம் முழுவதும் போராட்டம்: காஞ்சியில் ஸ்டாலின் பங்கேற்பு..!!

 • india-jappan28

  வடக்கு அரபிக் கடற்பகுதியில் இந்திய - ஜப்பானிய கடற்படையினர் கூட்டாகப் போர் பயிற்சி!: புகைப்படங்கள்

 • soldier28

  தென் கொரியா உடனான போரில் உயிர் தியாகம் செய்த 117 சீன வீரர்களின் அஸ்தி சீனாவிடம் ஒப்படைப்பு!: புகைப்படங்கள்

 • balaji28

  திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவம் நிறைவு!: பால், தயிர், தேன் கொண்டு சக்கரத்தாழ்வாருக்கு தீர்த்தவாரி..!!

 • ukraine28

  உக்ரைனில் கோர விபத்து: ராணுவ விமானம் தரையில் விழுந்து தீப்பிடித்ததில் 25 பேர் உடல் கருகி பலி..புகைப்படங்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்