SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ரூ.12.78 கோடி மதிப்பில் முதலமைச்சரின் உதவி மையம்: முதல்வர் அறிவிப்பு

2020-09-16@ 00:06:18

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் பேரவை விதி 110ன் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி படித்த அறிக்கை: தமிழ்நாடு அரசு துறைகளின் கீழ் செயல்படும் எல்லா குறைதீர்ப்பு அமைப்புகளையும் ஒருங்கிணைத்து, குறைகள் விரைந்து களையப்படுவதை கண்காணிக்க ஒரு சிறப்பான அமைப்பு முறை தேவைப்படுகிறது. பொதுமக்களின் குறைகளை உடனுக்குடன் பதிவு செய்து, அவற்றிற்கு தீர்வு காண, ஒரு குறைதீர்ப்பு மேலாண்மை திட்டம் அமைப்பதன் அவசியத்தை உணர்ந்து, `முதலமைச்சரின் உதவி மையம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீர்ப்பு மேலாண்மை திட்டம்’’ ஒன்றை அரசு செயல்படுத்த உள்ளது. இந்த திட்டம் முதற்கட்டமாக தகவல் தொழில் நுட்பத் துறையின் மூலம் ரூ.12.78 கோடி செலவில் நடைமுறைப்படுத்தப்படும். குறைதீர்க்கும் முகாம்களிலோ இணைய தளத்திலோ அல்லது அரசு அலுவலர்களோ குறை தீர்க்கும் மனுக்களை பெறும்போது வேலைவாய்ப்பு கோரி பெறப்படும் மனுக்களே அதிகமாக உள்ளன. மனுக்கள் சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் உடனுக்குடன் பரிசீலிக்கப்பட்டு, தேவைப்படின் மனுதாரர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சியும் உரிய வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • dmk28

    புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து தி.மு.க தலைமையில் தோழமைக் கட்சிகள் தமிழகம் முழுவதும் போராட்டம்: காஞ்சியில் ஸ்டாலின் பங்கேற்பு..!!

  • india-jappan28

    வடக்கு அரபிக் கடற்பகுதியில் இந்திய - ஜப்பானிய கடற்படையினர் கூட்டாகப் போர் பயிற்சி!: புகைப்படங்கள்

  • soldier28

    தென் கொரியா உடனான போரில் உயிர் தியாகம் செய்த 117 சீன வீரர்களின் அஸ்தி சீனாவிடம் ஒப்படைப்பு!: புகைப்படங்கள்

  • balaji28

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவம் நிறைவு!: பால், தயிர், தேன் கொண்டு சக்கரத்தாழ்வாருக்கு தீர்த்தவாரி..!!

  • ukraine28

    உக்ரைனில் கோர விபத்து: ராணுவ விமானம் தரையில் விழுந்து தீப்பிடித்ததில் 25 பேர் உடல் கருகி பலி..புகைப்படங்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்