SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழகத்தில் மாநில சுயாட்சிக்கு ஆபத்து: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

2020-09-16@ 00:06:15

சென்னை: தமிழகத்தில் மாநில சுயாட்சிக்கு ஆபத்து வந்து கொண்டிருப்பதாக சட்டப்பேரவையில் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டினார். சட்டப்பேரவையில் நேற்று கேள்வி பதில் நேரத்தின் போது எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
வங்க கடலோரத்தில் ஆறடி சந்தனப்பேழையில் உறங்கியும், உறங்காமல் உறங்கிக் கொண்டிருக்கும் அண்ணாவின் 112வது பிறந்தநாள். இதே சட்டமன்றத்தில் இருமொழி கொள்கையை, மாநில சுயாட்சியை தமிழ்நாட்டிற்கு ‘தமிழ்நாடு என்று பெயர் சூட்டிய அந்த தீர்மானங்களை கொண்டு வந்து நிறைவேற்றிய தலைவர் அறிஞர் அண்ணா. அவரால் கொண்டு வரப்பட்ட அந்த தீர்மானங்களுக்கு தற்போது ஆபத்து வந்து கொண்டிருக்கிறது. அந்த ஆபத்தை நொறுக்கும் வகையில் நாம் கிளர்ந்து எழுந்திட வேண்டும் என்ற உறுதியை அனைவரும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

தடையில்லா, சீரான மின்சாரம் பெறுவதற்கும், நேர்மை நகரின் துணை மின்நிலையத்தின் பணியை விரைந்து முடித்திடவும், கணேஷ் நகரின் துணைமின் நிலைய பணியை விரைந்து தொடங்கிடவும் அரசு முன்வர வேண்டும். அமைச்சர் தங்கமணி: நேர்மை நகரில் அமைக்கப்பட்டு வரும் துணை மின் நிலைய பணிகள் 90 சதவீதம் முடிந்துவிட்டது. தற்போது கொரோனா காலத்தில் 5 மாதங்கள் பணிகள் நடக்கவில்லை. டிசம்பர் மாதத்திற்குள் இந்த பணிகள் முடிவடையும். கணேஷ்நகரில் மீண்டும் டெண்டர் விடப்பட்டுள்ளது. அங்கு இன்னும் ஒரு மாதத்தில் பணிகள் தொடங்கும். இவ்வாறு அவர் கூறினார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • elephant30

    போட்ஸ்வானாவைத் தொடர்ந்து ஜிம்பாப்வேயில் தொடரும் சோகம்!: பாக்டீரியா நோயால் 2 மாதங்களில் 34 யானைகள் உயிரிழப்பு..!!

  • newyark30

    கொரோனாவின் தாக்கம் குறைந்தது!: நியூயார்க் நகரில் பள்ளிகள் மீண்டும் திறப்பு..புகைப்படங்கள்..!!

  • road30

    ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகள் நடத்திய கண்ணிவெடி தாக்குதல்!: பொதுமக்கள் 15 பேர் உயிரிழப்பு..!!

  • 30-09-2020

    30-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • formars29

    வேளாண் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் வெடித்தது போராட்டம்!: இந்தியா கேட் அருகே டிராக்டரை தீயிட்டு எதிர்ப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்