ரவுடி சங்கர் என்கவுன்டர் வழக்கு தொடர்பாக அவரது குடும்பத்தினர் சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜர்
2020-09-12@ 16:24:04

சென்னை: ரவுடி சங்கர் என்கவுன்டர் வழக்கு தொடர்பாக அவரது குடும்பத்தினர் சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜராகியுள்ளனர். சங்கரின் தாயார் கோவிந்தம்மாள், சகோதரி ரேணுகா உட்பட 4 பேர் எழும்பூர் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகியுள்ளனர். சங்கரின் சகோதரி மகன் மோகனிடம் நடத்திய விசாரணையில் சிபிசிஐடி பல தகவலை பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆய்வாளர் நடராஜன், எஸ்.ஐ ராஜா உட்பட காவலர்கள் 11 பேரிடம் ஏற்கனவே சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி ரவுடி சங்கரை கஞ்சா வழக்கில் அயனாவரம் போலீசார் கைது செய்தனர். சென்னை நியூ ஆவடி சாலையில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த இடத்திலிருந்து, அதனை எடுத்து செல்லும்போது திடீரென ரவுடி சங்கர் தாக்கியதாகவும், அதனை எதிர்த்து காவல் ஆய்வாளர் நடராஜன் உள்ளிட்ட தனிப்படை போலீசார் நடத்திய தற்காப்பு தாக்குதலில் என்கவுண்டர் செய்யப்பட்டகாகவும் கூறப்பட்டது. மேலும் இந்த தாக்குதலில் 3 குண்டுகளால் சுடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இதற்கு உறவினர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். போலீஸ் திட்டமிட்டு தாக்கி சங்கரை கொலை செய்து விட்டதாக கூறி, உடலை வாங்க மறுத்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக தீவிர விசாரணையானது மேற்கொள்ளப்பட வேண்டும் என உறவினர் தரப்பில் கூறப்பட்டு வந்தது. இதுதொடர்பாக உயர்நீதிமன்றத்தில், சங்கரின் தாயார் மனு ஒன்றும் அளித்திருந்தார். அதில், தனது மகனை திட்டமிட்டு போலீசார் கொலை செய்துவிட்டு என்கவுண்டர் என்ற பெயரில் நாடகமாடி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்த வழக்கில் முழுமையான விசாரணை நடத்த சிபிஐ-க்கு உத்தரவிட வேண்டும் என கோரி, அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கினை சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மேலும் செய்திகள்
மருத்துவருக்கு ஓய்வூதிய பணப்பலன் வழங்க ரூ. 30,000 லஞ்சம் வாங்கிய மருத்துவமனை ஊழியர் கைது
ஆவடி அருகே பரபரப்பு ரத்த வாந்தி எடுத்து ஜிம் மாஸ்டர் திடீர் மரணம்: இரண்டு கிட்னி செயலிழப்புக்கு ஸ்டீராய்டு மருந்து காரணமா?
பத்திரப்பதிவுக்கு லஞ்சம் பெற்ற பல்லாவரம் சார்பதிவாளர் இடைத்தரகர் கைது: லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி
ரூ. 44 கோடி மதிப்பீட்டில் சென்னை குடிநீர் ஆதாரமாக மாதவரம் ரெட்டேரி மாற்றப்படும்: அமைச்சர் துரைமுருகன் அறிவிப்பு
160 ஏக்கர் அரசு நிலத்துக்கான வாடகை பாக்கி ரூ. 731 கோடியை ஒரு மாதத்தில் செலுத்த வேண்டும்: கிண்டி ரேஸ் கிளப்புக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
வேளச்சேரிக்கு பிரத்யேகமாக ஒரு மின்நிலையம் அமைக்க வேண்டும்: பேரவையில் அசன் மவுலானா வலியுறுத்தல்
ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி
அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!
இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!
அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!
ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!