கஞ்சா, குட்கா, விற்பனையை தடுக்க ஹலோ போலீஸ் சேவை: எஸ்.பி. தொடங்கி வைத்தார்
2020-09-11@ 00:30:27

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெறும் குற்றங்களை தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பளர் அரவிந்தன் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன்படி தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா, குட்கா, சூதாட்டம், போலி மதுபானங்கள் விற்பனை, மணல் கொள்ளை மற்றும் செம்மரக்கட்டை கடத்தல் போன்ற குற்றங்களை முற்றிலும் ஒழிப்பதற்காக ஹலோ போலீஸ் சேவை என்ற திட்டத்தை எஸ்.பி. அரவிந்தன் தொடங்கி வைத்தார். இது போன்ற குற்றங்களைப் பற்றி பொதுமக்கள் யாரேனும் புகார் அளிக்க விரும்பினால் 90033 90050 என்ற எண்ணுக்கு தொலைபேசி மூலமாகவும்,
வாட்ஸ்அப் மூலமாகவும் தகவல் தெரிவிக்கலாம் என்றும், புகார் அளிப்பவரின் விவரங்கள் ரகசியம் காக்கப்படும் என்றும் தெரிவித்த எஸ்.பி. அரவிந்தன் அது சம்பந்தமான வீடியோ தயார் செய்து வெளியிட்டுள்ளார். இந்த ஹலோ போலீஸ் சேவை திட்டத்திற்காக எஸ்.பி. அலுவலகத்தில் பிரத்யேகமாக கன்ட்ரோல் ரூம் உருவாக்கப்பட்டு இந்த எண்ணில் வரும் புகார்கள் மீது சிறப்பு காவல் துறையினர் மூலமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்வது போன்ற குற்றங்களை குறைக்க பொதுமக்கள் ஒத்துழைக்குமாறு எஸ்.பி. அரவிந்தன் கேட்டுக் கொண்டார்.
மேலும் செய்திகள்
தற்போது கொரோனா இல்லை என்ற எண்ணம் யாருக்கும் இருக்க வேண்டாம்: சுகாதாரத்துறை செயலாளர் எச்சரிக்கை...!
கடசுருக்குமடி வலை மூலம் மீன்பிடிக்க அனுமதி கோரி வழக்கு
தேர்தல் அதிகாரிகள் தொடர்பான விவரங்கள் பொதுத்துறை இணைய தளத்தில் வெளியானது: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் தகவல்
தேர்தல் நடைமுறை அமலாக்கத்தில் வணிகர்களுக்கு பாதுகாப்பு தேவை: விக்கிரமராஜா கோரிக்கை
செம்மொழி தமிழாய்வு நிறுவனம் சார்பில் விருதுகளை மீண்டும் வழங்க கோரிய மனு தள்ளுபடி: உயர் நீதிமன்றம் உத்தரவு
நகைக் கடன்கள் தள்ளுபடி விவரங்களை கேட்டு அனைத்து மேலாண்மை இயக்குநர்களுக்கும் கடிதம்: சங்கங்களின் பதிவாளர் அனுப்பினார்
04-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
நைஜீரியாவில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட பள்ளி மாணவிகள் 279 பேர் விடுவிப்பு!: புகைப்படங்கள்
ஆராய்ச்சியாளர்களையே மிரள வைத்த டைனோசர் புதைப்படிவம்!: அர்ஜெண்டினாவில் கண்டெடுப்பு..!!
03-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ்!: இன்றும் மத்திய, மாநில அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் போட்டுக்கொண்டனர்..!!!