தி.மலை செய்யாறில் முதல்வர் வருகைக்கு கடும் எதிர்ப்பு! - 8 வழிச்சாலை திட்டத்தை ரத்து செய்யக்கோரி விளைநிலங்களில் இறங்கி மக்கள் போராட்டம்!!!
2020-09-09@ 12:48:06

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் ஆய்வு கூட்டத்திற்கு முதலமைச்சர் சென்றிருந்த நிலையில், செய்யாறு அருகே முதலமைச்சரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டவும், முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தல், அரசு நலதிட்ட உதவிகள் வழங்குதல், திருவண்ணாமலை மாவட்ட வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் கொரோனா நோய் தடுப்புபணிகள் குறித்து ஆய்வு கூட்டம், சிறு, குறு, மற்றும் நடுத்தர தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் மகளிர் சுயஉதவிக் குழுவினருடன் கலந்தாய்வுக் கூட்டம் ஆகிய கூட்டங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையேற்று நடத்துவதற்காக இன்றைய தினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை புரிந்துள்ளார்.
இந்நிலையில் சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, முதல்வர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து செய்யாறில் பொதுமக்கள் விளைநிலங்களில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைவரும் கறுப்புக்கொடி ஏந்தி, மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இருப்பினும், விவசாய நிலத்தை அழிக்கும் 8 வழிச்சாலை திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும், மத்திய, மாநில அரசுகள் உடனடியாக இதனை பரிசீலனை செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை முன் வைத்து விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் செய்திகள்
சமூக வலைத்தளங்களில் தணிக்கை செய்யப்பட்ட வீடியோவை வெளியிட உத்தரவிடக் கோரி வழக்கு: பேஸ்புக், யூடியூப், கூகுள் நிறுவனம் பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு
சசிகலா அரசியலுக்கு வரவேண்டும்.. ஒரு பெண்ணாக சசிகலாவுக்கு எனது ஆதரவு உண்டு : பிரேமலதா விஜயகாந்த் கருத்து
சீர்காழியில் தீரன் பட பாணி கொலை, கொள்ளை.. கொள்ளையர்களை பிடித்து போலீசிடம் ஒப்படைத்த மக்கள்.. என்கவுண்டரில் ஒருவன் சுட்டுக் கொலை
சீர்காழி நகை கொள்ளை சம்பவம்..! தப்ப முயன்ற 3 கொள்ளையர்களில் ஒருவரை என்கவுண்டர் செய்தது காவல்துறை
நகை வியாபாரி வீட்டில் 2 பேரை கொலை செய்து 16 கிலோ தங்க நகைகள் கொள்ளை: சீர்காழியில் பரபரப்பு
துரோகிகளுக்கு மன்னிப்பு இல்லை முதல்வர் நாராயணசாமி ஆவேசம்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்
27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!
அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, சாகசங்கள், பாரம்பரிய நடனங்களோடு குடியரசு தின விழா கோலாகலம் : விழாக்கோலம் பூண்டது மெரினா!!