தண்ணி காட்டும் தங்க விலை : சவரனுக்கு ரூ.152 உயர்ந்து ரூ.39,272-க்கு விற்பனை; தவிக்கும் மக்கள்!!
2020-09-09@ 11:03:20

சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.152 உயர்ந்து ரூ.39,272-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாக பங்குச்சந்தைகளில் ஏற்றம் இறக்கம் காணப்படுவதைப் போலவே தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலையற்ற ஏற்ற இறக்கம் நிலவுகிறது. தொழில்துறை தேக்கத்தைத் தொடர்ந்து உலகம் முழுவதுமே முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடு பக்கம் திரும்பினர். பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றி தங்கத்தில் முதலீடு செய்தனர்.பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்வதால் தங்கத்தின் தேவை அதிகரித்து அதன் விலை உயர்ந்து வருகிறது.
கொரோனா வைரஸ் பாதிப்பால் தொழில்துறை தேக்கம் குறித்த பீதி நிலவி வரும் நிலையில், தங்கம் விலையில் தற்போது ஏற்ற இறக்கங்கள் நிலவி வருகின்றன.தங்கம் விலை மார்ச் மாதம் முதல் தொடர்ந்து அதிகரித்து வந்தது. கடந்த 28ம் தேதி ஒரு பவுன் ரூ.39,176க்கும், 29ம் தேதி ரூ.39,416க்கும் விற்கப்பட்டது. கடந்த ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இல்லை. தொடர்ந்து செப்டம்பர் 1ம் தேதி ஒரு பவுன் ரூ.39,776க்கும் விற்கப்பட்டது. 2ம் தேதி தங்கம் விலை பவுனுக்கு ரூ.424 குறைந்து ஒரு பவுன் ரூ.39,288க்கு விற்கப்பட்டது. செப்டம்பர் 3ம் தேதி ரூ.39,288-க்கும் 4ம் தேதி ரூ.39,032-க்கும் விற்கப்பட்டது. நேற்று சவரனுக்கு ரூ.16 உயர்ந்து ரூ.39.120-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இன்றைய நிலவரப்படி, ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.152 உயர்ந்து ரூ.39,272-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.19 உயர்ந்து ரூ.4,909-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோன்று, ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கடந்த சில நாட்களாக அதிகரித்து வருவதும், பின்னர் சிறிது விலை குறைவதுமாக இருப்பதால் நகை வாங்குவோரை யோசிக்க செய்துள்ளது. ஆனாலும், தற்போது திருமண சீசன் என்பதால், பலரும் நகைக்கடைகளுக்கு சென்று தங்கம் வாங்க ஆர்வம் காட்டுகிறார்கள்.
மேலும் செய்திகள்
தங்கம் சவரன் 37,000க்கும் கீழ் குறைந்தது
27,000 முதல் 44,000 வரை மாருதி கார் விலை சலுகை பெற இன்றே கடைசி நாள்
இனி தங்க வேட்டை தான்... ஆபரணத் தங்கத்தின் விலை செம குறைவு... சவரனுக்கு ரூ.384 குறைந்து ரூ.36,864க்கு விற்பனை!!
செம தள்ளுபடியில் தங்கம் விலை.. நகை வாங்குவோருக்கு ஜாக்பாட் தான்.. 6வது நாளாக விலை சரிவு... சவரன் ரூ.37.416க்கு விற்பனை!!
செம சரிவில் தங்கம் விலை... தொடர்ச்சியாக 5 நாட்களில் சவரன் ரூ.1,664 அளவுக்கு குறைந்து ரூ.37,440க்கு விற்பனை!!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விலையில் சதம் அடித்த முருங்கைக்காய்: உச்சமடையும் கத்தரிக்காய் விலை
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்