காஞ்சிபுரம் நகரில் 2 இடங்களில் நவீன பயணிகள் நிழற்குடை: திமுக எம்எல்ஏ திறந்து வைத்தார்
2020-09-08@ 00:59:17

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் நகரில் ஏகாம்பரநாதர் கோயில் சன்னதி தெரு மற்றும் விளக்கொளி பெருமாள் கோயில் தெரு ஆகிய பகுதிகளில் நவீன பஸ் பயணிகள் நிழற்குடைகளை காஞ்சி திமுக எம்எல்ஏ வக்கீல் எழிலரசன் தொடங்கி வைத்தார். காஞ்சிபுரம் பெரு நகராட்சி ஏகாம்பர நாதர் சன்னதி தெரு, விளக்கொளிப் பெருமாள் கோயில் தெரு ஆகிய பகுதிகளில் காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ₹19 லட்சம் மதிப்பில் பஸ்களில் செல்லும் பயணிகளுக்கு, நிழற்கூடைகள் கட்டி முடிக்கப்பட்டன.கடந்த 5 மாதங்களுக்கு பின், ஊரடங்கு உத்தரவு தளர்வுகளை தொடர்ந்து அனைத்து பஸ்களும் இயக்கப்படுகின்றன.
இதையொட்டி, பொதுமக்கள் நிழற்கூடங்களை பயன்படுத்தும் வகையில், திமுக எம்எல்ஏ வக்கீல் எழிலரசன் பயணிகள் நிழற்குடையை திறந்து வைத்தார். காஞ்சிபுரம் நகராட்சி பொறியாளர் ஆனந்த ஜோதி, நகர திமுக செயலாளர் சன்பிராண்ட ஆறுமுகம், மாவட்ட அவைத்தலைவர் சேகரன், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் எஸ்.கே.பி.சீனிவாசன், செங்குட்டுவன், நகர திமுக நிர்வாகிகள் சந்துரு, ஜெகன்நாதன், கருணாநிதி, அபுசாலி, யுவராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
மீண்டும் அதிகரிக்கும் கொரோனா...! தமிழகத்தில் மேலும் 479 பேருக்கு பாதிப்பு: 490 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்: சுகாதாரத்துறை அறிக்கை
சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து வெற்றிகரமாக ஏவப்பட்ட பிஎஸ்எல்வி சி-51 ராக்கெட்: துணை முதலமைச்சர் ஒபிஎஸ் பாராட்டு
வேலை இல்லை.. திருமண ஏக்கம்.. ஆசிட் குடித்து இன்ஜினியர் சாவு
அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி தேமுதிகவுக்கு 10 தொகுதி தான்... அதிமுக முடிவால் விஜயகாந்த் விரக்தி
சிறப்பு டிஜிபியாக இருந்த ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் புகார்: சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி திரிபாதி உத்தரவு..!
சட்டப்பேரவையில் தாக்கல் செய்த வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல்..!!
28-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்
27-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்
26-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்
புதுச்சேரியில் பிரதமர் மோடி : கருப்பு பலூன்கள் பறக்கவிட்டு மக்கள் எதிர்ப்பு.. #மோடியே திரும்பி போ ஹேஷ்டேக்கால் அலறிய ட்விட்டர்!!
பெட்ரோல், டீசல் விலையேற்றம்; எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறிய மம்தா பானர்ஜி!