SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆண் வாரிசு இல்லாததால் இறுதி சடங்கில் குழப்பம்: தந்தையின் சடலத்தை தோளில் சுமந்த 6 அன்பு மகள்கள்

2020-09-07@ 21:14:34

தியோரியா: உத்தரபிரதேசத்தில் தந்தைக்கு ஆண் வாரிசு இல்லாததால் அவரது இறுதி சடங்கில் குழப்பம் ஏற்பட்டது. ஆனால், அவரது 6 மகள்களும் தந்தையின் உடலை தோளில் சுமந்து சென்ற சம்பவம் சோகத்திலும் நெகிழ்ச்சியடைய செய்தது. பீகார் மாநிலம் பங்காட்டா அடுத்த ஜிர்வானியன் கிராமத்தைச் சேர்ந்த ஹரேந்திர சர்மா (70) என்பவருக்கு 6 மகள்கள் உள்ளனர். அவருக்கு மகன் இல்லை. இவரது மூன்று மகள்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. மற்ற மூன்று மகள்கள் திருமணமாகாதவர்கள். ஹரேந்திர சர்மா நேற்று முன்தினம் திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் டெல்லி மருத்துவமனையில் காலமானார்.

நேற்று அவரது சொந்த கிராமமான உத்தரபிரதேச மாநிலத்தின் தியோரியாவுக்கு உடல் கொண்டு வரப்பட்டது. இறுதிச் சடங்குக்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. கடைசி நேரத்தில், ஹரேந்திர சர்மாவுக்கு மகன் இல்லை என்பதால், சடங்குகளை மேற்கொள்வது யார்? என்ற குழப்பம் ஏற்பட்டது. மேலும் இறுதிச் சடங்கின் போது அவரது சடலத்தை முன்வரிசையில் தோள் கொடுத்து தூக்குவது யார்? என்று உறவினர்களுக்குள் சலசலப்பு பேச்சும் இருந்தது. நிறைய குழப்பங்களுக்கு மத்தியில் ஹரேந்திர சர்மாவின் மகள்கள் 6 பேரும், தாங்களாகவே முன் வந்து, ‘மகன் இல்லை என்றால் என்ன? எங்களை ேதாளில் சுமந்த தந்தையின் உடலை நாங்கள் தோளில் சுமந்துகொண்டு தகனம் செய்வோம். மகன் இருந்தால் என்னென்ன சடங்குகள் செய்ய வேண்டுமோ? அத்தனை சடங்குகளையும் நாங்களே செய்கிறோம்’ என்று கூறினர்.

6 மகள்களின் ஒரே மாதிரியான முடிவால், உறவினர்கள் ஏதும் பேச முடியாமல் மகள்கள் தந்தைக்கு இறுதிச் சடங்கு செய்வதற்கு சம்மதம் தெரிவித்தனர். அதையடுத்து இறந்த தந்தையின் சடலத்தை பாடையில் வைத்து, தங்களது தோளில் சுமந்து கொண்டு 6 மகள்கள் மற்றும் உறவினர்கள் அனைவரும் அழுதுகொண்டே வீதியில் சென்றனர். 6 பெண்கள் தங்கள் தந்தையின் உடலை சுமந்து சென்றதை பார்த்து அக்கிராம மக்களே சோகத்தில் மூழ்கினர். சிலர் ஹரேந்திர சர்மாவின் 6 அன்பு மகள்களையும் பாராட்டினர். அதன்பின், இடுகாட்டில் ஹரேந்திர சர்மாவின் மூத்த மகளின் மகனான ஆயுஷ் சர்மா நானா என்பவர்,  ஹரேந்திர சர்மாவின் உடலை எரியூட்டி தகனம் செய்து இறுதி சடங்குகளை செய்தார். இச்சம்பவம், உத்தரபிரதேசம், பீகார் மாநிலங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • jaipourelephant20

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கோட்டையில் மீண்டும் யானை சவாரிக்கு அனுமதி!..

  • delhiformer20

    வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா, பஞ்சாப்பில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி - கண்ணீர்புகை, தண்ணீர் பீய்ச்சி விரட்டியடிப்பு

  • nivarpondyvilupuram20

    நிவர் புயல் கரையை கடந்த நிலையில் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் சேதமடைந்த இடங்கள் ! புகைப்படங்கள்

  • nivarkadaloorcmvisit20

    நிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி!..

  • nivarthirvannamali20

    திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூரில் நிவர் புயலின் தாக்கம் !... புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்