குமரி மாவட்டத்தில் சமூக இடைவெளியுடன் தேவாலயங்களில் பிரார்த்தனை: 5 மாதங்களுக்கு பின் மகிழ்ச்சி
2020-09-07@ 13:51:23

நாகர்கோவில்: குமரி மாவட்ட தேவாலயங்களில் 5 மாதங்களுக்கு பின் ஞாயிற்றுக்கிழமை பிரார்த்தனை நேற்று நடைபெற்றது.தமிழகத்தில் 5 மாதங்களுக்கு பின், கடந்த 1ம் தேதி வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டன. மேலும் 2 மாதங்களுக்கு பின், ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கும் ரத்து செய்யப்பட்டது. இதையொட்டி தேவாலயங்களில் ஞாயிற்றுக்கிழமையான நேற்று ஏராளமானவர்கள் பிரார்த்தனைக்கு வந்தனர். குமரி மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் அரசின் விதிமுறைப்படி சமூக இடைவெளியை கடைபிடித்து பிரார்த்தனை செய்ய ஏற்பாடு செய்திருந்தனர். ஆலயங்களுக்கு வந்தவர்கள் முக கவசம் அணிந்து, சானிடைசர் கொடுத்து, உடல் வெப்ப பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர். இடைவெளிகளுடன் இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன.
நாகர்கோவில் சி.எஸ்.ஐ. தேவாலயத்தில், 100 பேருக்கு மட்டுமே அனுமதி கொடுத்தனர். ஆலயத்துக்கு வந்தவர்களின் பெயர், முகவரி, செல்போன் எண் ஆகியவை பதிவு செய்யப்பட்டன. முக கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருந்தது. அதன்படி அனைவருமே முக கவசம் அணிந்து இருந்தனர். 5 மாதங்களுக்கு பின், ஞாயிற்றுக்கிழமை அன்று தேவாலயம் வந்து பிரார்த்தனை செய்தது மிகவும் நிம்மதியாக இருப்பதாக தெரிவித்தனர். குழந்தைகள், வயதானவர்கள் அனுமதிக்கப்பட வில்லை. ஏற்கனவே இது தொடர்பாக அரசின் வழிகாட்டு முறைகள் என்னென்ன? என்பது பற்றி பிஷப்புகள் உரிய அறிவிப்புகள் வெளியிட்டு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
மதுரை பூசாரிப்பட்டியில் 10 ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு
போடிமெட்டு அருகே தேயிலை தோட்டத்தில் புலி நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்
தென்காசி கடத்தல் விவகாரத்தில் மீண்டும் பரபரப்பு; வழக்கை வாபஸ் வாங்கக் கோரி காதல் கணவனிடம் இளம்பெண் கதறல்: `இருவரும் மனப்பூர்வமாக பிரிந்து விடுவோம்’ என்று வேண்டுகோள்
நாளை தைப்பூசத் திருவிழா: திருச்செந்தூரில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்
அதிகரிக்கும் குற்றச்செயல்கள்: சிம்கார்டுகளை கூவிகூவி விற்பதை தடுக்க கோரிக்கை
வளர்ப்பு யானைகளை பராமரிக்கும் பயிற்சி பெற தெப்பக்காடு முகாம் பாகன்கள் 8 பேர் தாய்லாந்து பயணம்
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!