காணொலி மூலம் இன்று நடக்கிறது புதிய கல்விக்கொள்கை குறித்து விவாதிக்க ஆளுநர்கள் மாநாடு: ஜனாதிபதி, பிரதமர் சிறப்புரை
2020-09-07@ 01:40:55

புதுடெல்லி: ‘புதிய தேசிய கல்விக் கொள்கை - 2020’ பற்றி விவாதிக்க, மாநில ஆளுநர்களின் மாநாடு இன்று நடைபெறுகிறது. மத்திய கல்வித்துறை நடத்தும் இந்நிகழ்ச்சியில் ஜனாதிபதி, பிரதமர் உரையாற்றுகின்றனர். தற்போது அமலில் இருக்கும் தேசியக் கல்விக் கொள்கைக்கு மாற்றாக, ‘புதிய தேசிய கல்விக் கொள்கை - 2020’-ஐ மத்திய அரசு கொண்டு வருகிறது. இதற்கு எதிர்க்கட்சிகளும், கல்வியாளர்களும் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். எனினும், கடந்த ஜூலை 29ம் தேதி, இந்த கல்விக் கொள்கை மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.
இந்நிலையில், புதிய கல்விக்கொள்கை பற்றி விவாதிக்க அனைத்து மாநில ஆளுநர்களின் மாநாடு இன்று நடைபெறுகிறது. காணொலி வாயிலாக நடைபெறும் இந்நிகழ்வில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்ற உள்ளனர். ‘உயர்கல்வியில் புதிய கல்விக்கொள்கை 2020ன் பங்கு’ என்ற தலைப்பில் இந்த கூட்டம் நடைபெறுகிறது. மாநில கல்வி அமைச்சர்கள், பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்கள், கல்வித் துறை மூத்த அதிகாரிகளும் இதில் கலந்து கொள்கின்றனர். அதே நேரம், இந்த கல்விக்கொள்கை பற்றி நாடாளுமன்றத்தைக் கூட்டி விவாதம் நடத்தும் முன்பாக, ஆளுநர்களுடன் ஆலோசனை நடத்த எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
Tags:
காணொலி இன்று நடக்கிறது புதிய கல்விக்கொள்கை விவாதிக்க ஆளுநர்கள் மாநாடு ஜனாதிபதி பிரதமர் சிறப்புரைமேலும் செய்திகள்
இந்தியா - பங்களாதேஷ் இடையே ஃபெனி ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட மைத்ரி சேது பாலத்தை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி..!!
புதிய வேளாண் சட்டத்தை ரத்து செய்யாவிட்டால் லட்சக்கணக்கான டிராக்டர்களுடன் நாடாளுமன்றத்தை முற்றுகையிடுவோம்!: டெல்லி விவசாயிகள் எச்சரிக்கை..!!
கேரள தங்க கடத்தல் வழக்கில் புதிய திருப்பம்!: பினராயி பெயரை தொடர்புபடுத்தும்படி அமலாக்கத்துறை அதிகாரிகள் ஸ்வப்னாவை வற்புறுத்தியது அம்பலம்..!!
தமிழகம் உள்ளிட்ட 5 மாநில தேர்தலுக்கு தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்
தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் தொல்பொருள் அருங்காட்சியகம் அமைக்க நிலம் தேர்வு!: மத்திய அரசு..!!
டெல்லியில் 7 ஆண்டுகளுக்கு பின் குறைந்தது காற்றுமாசு!: , 2020 - 21 பொருளாதார ஆய்வறிக்கையில் தகவல்..!!
சுற்றுச்சூழலை வலியுறுத்தி ரஷ்யாவில் உறைந்த ஏரியில் ஹாக்கி போட்டி!: முன்னணி வீரர்கள் பங்கேற்று குதூகலம்..!!
09-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆஸ்திரேலியாவில் உழைப்பாளர் தின கொண்டாட்டம்!: வானில் பறக்கவிடப்பட்ட பிரம்மாண்ட ராட்சத பலூன்கள்..!!
நாட்டிலேயே முதல் முறையாக தெலுங்கானாவின் காவல் நிலையத்தில் "திருநங்கைகள் சமூக மேடை"! புகைப்படங்கள்
செவ்வாய் கிரகத்தில் உள்ள மலைகள், பாறைகளுடன் கூடிய புதிய புகைப்படங்ளை பூமிக்கு அனுப்பியது பெர்சிவரன்ஸ் ஆய்வூர்தி!!