கரூர் வீரராக்கியம் பிரிவு சாலையில் வாகன விபத்து தடுக்க மேம்பாலம், குகை வழிப்பாதை அமைக்கப்படுமா?: மக்கள் எதிர்பார்ப்பு
2020-09-05@ 16:50:53

கரூர்: கரூர் மாவட்டம் வீரராக்கியம் பிரிவுச் சாலையில் வாகன விபத்துகளை தடுக்கும் வகையில் மேம்பாலம் அல்லது குகை வழிப்பாதை அமைத்து தரப்படுமா? என இந்த பகுதி மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.கரூர் திருச்சி பைபாஸ் சாலையில் வீரராக்கியம் பிரிவு உள்ளது. புலியூர், வீரராக்கியம், உள் வீரராக்கியம் போன்ற பகுதிகளை சேர்ந்த அனைத்து தரப்பு மக்களும் திருச்சி மற்றும் பிற மாவட்டங்களுக்கு செல்ல பைபாஸ் சாலையின் வழியாக செல்கின்றனர். திருச்சி பைபாஸ் சாலையிலும் பல்வேறு மாவட்ட பகுதிகளுக்கு அதிகளவு வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வாகன குறுக்கீடு காரணமாக வீரராக்கியம் பிரிவு அருகே அடிக்கடி வாகன விபத்துகள் நடைபெற்று வருகிறது. தற்போது லாக்டவுன் காரணமாக வாகன போக்குவரத்து குறைவு என்பதால் இந்த பகுதியில் விபத்துகள் நடைபெறவில்லை.
இருப்பினும், வீரராக்கியம் பிரிவுச் சாலைய எளிதில் கடந்து செல்லும் வகையில் உயர்மட்ட மேம்பாலம் அல்லது குகைவழிப்பாதை அமைத்து தர வேண்டும் என இந்த பகுதியினர் பல ஆண்டுகளாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.விரைவில் வாகன போக்குவரத்து துவங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே, இந்த பகுதியினர் நலன் கருதி வீரராக்கியம் சந்திப்பு பகுதியில் மேம்பாலம் அல்லது குகைவழிப்பாதை அமைப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
மேலும் செய்திகள்
வட மாநிலங்களில் ஊரடங்கு காரணமாக ஈரோட்டில் ரூ.100 கோடி ரேயான் துணிகள் தேக்கம்
கொரோனாவால் பள்ளி, கல்லூரிகள் திறக்காததால் நோட்டு, புத்தகங்கள் தயாரிக்கும் பணிகள் ஓராண்டாக முடக்கம்
சேலம், ஏற்காடு தொகுதியில் பதிவான வாக்கு இயந்திரம் உள்ள அறை முன்பு செல்போனில் பேசிய சிஆர்பிஎப் வீரர்: வேறு பணிக்கு மாற்றம் செய்து உத்தரவு
தென்காசி வாக்கு எண்ணும் மையம் அருகே நவீன வசதிகள் கொண்ட கன்டெய்னர்: திமுகவினர் புகாரால் அகற்றம்
அதிமுக மாஜி அமைச்சர் காலமானார்
மதுரையில் பெரும் பரபரப்பு வாக்கு எண்ணிக்கை மையத்தில் அத்துமீறி நுழைந்த மர்ம நபர்கள்: நடவடிக்கை கோரி திமுக வேட்பாளர்கள் போராட்டம்
19-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!
தீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு!: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..!!
22-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்