முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில் முறைகேடு: காத்திருப்போர் பட்டியலில் இருந்தவர்கள் புறக்கணிப்பு: மருத்துவர்கள் சங்கம் கண்டனம்...!!
2020-09-03@ 17:03:58

சென்னை: முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில் இறுதிக் கட்ட கலந்தாய்வு நடத்தப்படாமல் , தனியார் மருத்துவக் கல்லூரிகளில் தகுதி அடிப்படையிலான மாணவர் சேர்க்கை மீறப்பட்டுள்ளது என்று சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து இச்சங்கத்தின் பொதுச் செயலாளர் மருத்துவர் ஜி.ஆர்.இரவீந்திரநாத் தெரிவித்ததாவது: முதுநிலை மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கையில் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவ இடங்களுக்கும், தனியார் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கும் தமிழக அரசு நடத்தும் கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு, மாணவர் சேர்க்கையில் அரசு கட்டுபாட்டு இடங்களுக்கு, இறுதிக் கட்ட கலந்தாய்வு நடைபெற்றது. ஆனால், தனியார் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு இறுதிக் கட்ட கலந்தாய்வு தமிழக அரசு நடத்தவில்லை. தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு சாதகமாக ,இது திட்டமிட்டே புறக்கணிக்கப்பட்டது. இதன் காரணமாக ,முதுநிலை மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக்கான இறுதி நாளான ஆகஸ்ட் 31ம் தேதி, கல்லூரி நிர்வாகங்களே 100-க்கும் மேற்பட்ட இடங்களை நேரடியாக நிரப்பிக் கொண்டன. இதனால் அதிக மதிப்பெண் பெற்று, காத்திருப்போர் பட்டியலில் இருந்தவர்கள் புறக்கணிக்கப்பட்டனர். இது தகுதி அடிப்படையிலான மாணவர் சேர்க்கைக்கு எதிரானது.
இதனையடுத்து, மருத்து மாணவர் சேர்க்கையில் நடைபெறும் இத்தகைய முறைகேட்டை தடுத்திட, தனியார் மற்றும் தனியார் நிகர்நிலை மருத்துவப் பல்கலைக் கழகங்களின் இடங்கள் அனைத்திற்கும் மாநில மற்றும் மத்திய அரசுகளே `மாப்அப்’ என்னும் இறுதிக் கட்ட கலந்தாய்வை நடத்தி மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும். அதுவே முறைகேடுகளுக்கும், கட்டாய நன்கொடை வசூலுக்கும் முடிவு கட்டும். தகுதி அடிப்படையிலான மாணவர் சேர்க்கையை உறுதிப்படுத்தும்.
மேலும், மாணவர் சேர்க்கையின் இறுதி நாளான ஆகஸ்ட் 31ம் தேதி அன்று, தனியார் மருத்துவக் கல்வி நிறுவனங்கள், மாணவர் சேர்க்கையை நேரடியாக நடத்திக் கொள்ள அனுமதிக்கக்கூடாது. அது முறைகேடுகளுக்கும், கட்டாய நன்கொடை வசூலுக்கும் வழிவகுக்கிறது.
எனவே, எந்தக் காரணம் கொண்டும் தனியார் மருத்துவக் கல்வி நிறுவனங்கள், மாணவர்களை நேரடியாக சேர்த்துக் கொள்ள அனுமதிக்கக்கூடாது.அதற்குத் தேவையான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுக்க சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
மேலும் செய்திகள்
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி கையிருப்பு குறைவு; அடுத்த 3 நாட்களில் தடுப்பூசி தீர்ந்துவிடும் நிலை: தடுப்பூசி செலுத்தும் பணி முடங்கும் ஆபத்து
சென்னை உள்ளிட்ட 22 மாவட்டங்களில் 20 ஆம் தேதி முதல் மீண்டும் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படாது; ஆனால் கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்படும்; அவதூறு பரப்பினால் கடும் நடவடிக்கை: மாநகராட்சி ஆணையர் பேட்டி
தமிழகத்துக்கு தடுப்பூசி பற்றாக்குறை...கூடுதல் கொரோனா தடுப்பூசி வழங்கக்கோரி பிரதமர் மோடிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் !
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல்: இரவு நேர ஊரடங்கு அமல்? சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி இன்று முக்கிய ஆலோசனை..!
சென்னையில் அனைத்து அரசு மருத்துவமனையிலும் பாதுகாப்பு நலன் கருதி உள்நோயாளிகள் சிகிச்சை நிறுத்தம்: அறுவை சிகிச்சைகள் தொடரும்; மருத்துவர்கள் தகவல்
18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!
தீவிரமடையும் கொரோனா பரவலால் மஹாராஷ்டிராவில் முழு ஊரடங்கு!: மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறிய புலம்பெயர் தொழிலாளர்களின் புகைப்படங்கள்..!!
22-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்
15-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்