சென்னை வானகரத்தில் பூ வியாபாரிகள் திடீர் போராட்டம் - வாகனங்களுக்கு அ.தி.மு.க.-வினர் கட்டணம் வசூலிப்பதாக புகார்!!!
2020-09-02@ 15:36:39

சென்னை: சென்னையில் வானகர பூ சந்தைக்கு வரும் வாகனங்களுக்கு ஆளும் அதிமுகவினர் கட்டணம் வசூலிப்பதாக கூறி சாலையில் பூக்ககளை கொட்டி, வியாபாரிகள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கொரோனா ஊரடங்கு காரணமாக காய்கறி சந்தையானது திருமழிசை பகுதிக்கும், மாதவரம் பேருந்து நிலையம் அருகே பழக்கடைகளும் தற்காலிகமாக அமைக்க அனுமதி வழக்கப்பட்டன. இந்நிலையில் பூ கடைகளும் நடத்த அனுமதி அளிக்குமாறு வியாபாரிகள் கோரிக்கை விடுத்ததன் அடிப்படையில், பூ சந்தையானது வானகர பகுதிக்கு தற்காலிகமாக மாற்றப்பட்டது. இதனையடுத்து பூ சந்தையானது தற்போது வானகரத்தில் இயங்கி வருகிறது. இந்நிலையில் பூ கடைகளுக்கு சி.எம்.டி.ஏ மூலம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
மேலும் இங்கு பூக்கள் வாங்க வரும் வாகனங்கள் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து பூக்கள் கொண்டுவரும் வாகனங்களுக்கு திடீரென 10 ரூபாய் முதல் 300 ரூபாய் வரை அதிமுகவினர் கட்டணம் வசூலிப்பதாக வியாபாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். தொடர்ந்து கடைகளுக்கும் கட்டணம் வசூலிப்பதாக கூறி, திடீரென வியாபாரிகள் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பூக்களை கொட்டி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து மதுரவாயல் போலீசார் வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு அனைவரும் கலைந்து சென்றனர். இந்நிலையில், வியாபாரிகள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் சென்னை-பெங்களூரு தேசியநெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதற்கிடையில் வியாபாரிகள் அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் செய்திகள்
நாளை பள்ளிகளுக்கு போலாமா, வேண்டாமா?.....மாறி மாறி இரு அறிவிப்பால் மாணவர்கள் குழப்பம்
பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம்!: விசாரணை குழு நியாயமாக, நேர்மையாக விசாரிக்க ஐ.பி.எஸ். அதிகாரிகள் சங்கம் கோரிக்கை..!!
தமிழக நிர்வாகத்தையும், நிதி நிர்வாகத்தையும் நிர்மூலமாக ஆக்கிய ஆட்சிதான் இந்த ஆட்சி..: மு.க.ஸ்டாலின் காணொலியில் பேச்சு
ஆல் பாஸ் எதிரொலி!: நாளை முதல் 9,10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வர தேவையில்லை.. பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்..!!
உயர் அழுத்த மின்சார கம்பி அருந்ததால் சென்னை கடற்கரை - தாம்பரம் ரயில் சேவை துண்டிப்பு!: பொதுமக்கள் அவதி..!!
வெளிநாடுகளில் இருந்து ரூ.1331 கோடி நிலக்கரி இறக்குமதி டெண்டர் அறிவிப்பு தொடர்பாக பதிலளிக்க மின்வாரியத்துக்கு ஐகோர்ட் நோட்டீஸ்..!!
புதுச்சேரியில் பிரதமர் மோடி : கருப்பு பலூன்கள் பறக்கவிட்டு மக்கள் எதிர்ப்பு.. #மோடியே திரும்பி போ ஹேஷ்டேக்கால் அலறிய ட்விட்டர்!!
பெட்ரோல், டீசல் விலையேற்றம்; எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறிய மம்தா பானர்ஜி!
3 சிறைகள்...38,000 கைதிகள்!: தொடர் சங்கலியாக வெடித்த கலவரத்தில் 80 கைதிகள் பலி..கதறும் குடும்பத்தினர்..!!
ரோமத்தின் எடை மட்டும் 35 கிலோ... 5 வருடங்களாக தவித்த செம்மறி ஆட்டுக்கு கிடைத்த மறுவாழ்வு..!!
25-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்