செய்யூர் அருகே தீயணைப்பு வீரர்களுக்கு பயிற்சி முகாம்: சைலேந்திரபாபு பங்கேற்பு
2020-08-31@ 04:49:48

செய்யூர்,: செய்யூர் அருகே நடந்த இயற்கை பேரிடர் கால மீட்பு பயிற்சி முகாமில் சிறப்பு விருந்தினராக தீயணைப்பு துறை இயக்குனர் சைலேந்திரபாபு பங்கேற்று வீரர்களை ஊக்குவித்தார். தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் வடமண்டலம் மற்றும் வடமேற்கு மண்டல தீயணைப்பு வீரர்கள் இணைந்து செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் அடுத்துள்ள முதலியார் குப்பத்தில் வட கிழக்கு பருவ மழையினால் ஏற்படும் புயல், மழை, எதிர்நோக்கும் பொருட்டு பல்வேறு மீட்பு பயிற்சி முகாம் நடந்தது.
தீயணைப்புத்துறை இயக்குனர் சைலேந்திர பாபு முன்னிலையில் நடைபெற்ற இந்த முகாமில், தண்ணீரில் மூழ்கியவர்களை ஸ்குபா டிரைவர்ஸ் மூலம் மீட்கும் பயிற்சி, டிரை லேண்டு மீட்பு பயிற்சி, லைஃப் சேவிங் ஸ்ரோக் பயிற்சி, ரெஸ்க்யூ டியூப் மூலம் மீட்கும் பயிற்சி, ரெஸ்கியூ போர்டு மூலம் மீட்கும் பயிற்சி, ஸ்டேண்ட் அப் பெடலிங் மூலம் மீட்கும் பயிற்சி, கயாகிங் பயிற்சி, இன்ஃப்லா டேபிள் ரப்பர் படகு மூலம் மீட்கும் பயிற்சி மற்றும் படகு தண்ணீரில் மூழ்கி விட்டால் அதை திரும்பவும் சரி செய்தல் உள்ளிட்ட பயிற்சிகளை பயிற்சி வீரர்கள் மிக தத்ரூபமாக செய்து காண்பித்தனர்.
இந்த பயிற்சியில் கலந்து கொண்டவர்களை உற்சாகப்படுத்திய இயக்குநர் சைலேந்திர பாபு எந்த வித மீட்பு பணியையும் தொழில் நுட்ப அறிவின் உதவிகொண்டு பாதிக்கப்பட்டவர்களை மீட்க வேண்டும் என எடுத்துரைத்தார். இந்த நிகழ்ச்சியில் வட மண்டல இணை இயக்குனர் பிரியா ரவிச்சந்திரன் மற்றும் வட மேற்கு மண்டல துணை இயக்குநர் சத்திய நாராயணன், மாவட்ட அலுவலர் க.குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
மதுரை பூசாரிப்பட்டியில் 10 ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு
போடிமெட்டு அருகே தேயிலை தோட்டத்தில் புலி நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்
தென்காசி கடத்தல் விவகாரத்தில் மீண்டும் பரபரப்பு; வழக்கை வாபஸ் வாங்கக் கோரி காதல் கணவனிடம் இளம்பெண் கதறல்: `இருவரும் மனப்பூர்வமாக பிரிந்து விடுவோம்’ என்று வேண்டுகோள்
நாளை தைப்பூசத் திருவிழா: திருச்செந்தூரில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்
அதிகரிக்கும் குற்றச்செயல்கள்: சிம்கார்டுகளை கூவிகூவி விற்பதை தடுக்க கோரிக்கை
வளர்ப்பு யானைகளை பராமரிக்கும் பயிற்சி பெற தெப்பக்காடு முகாம் பாகன்கள் 8 பேர் தாய்லாந்து பயணம்
அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!
ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!