கொரோனா பரவல் அச்சம்: வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வர டிசம்பர் 31 வரை தடையை நீட்டித்தது மலேசிய அரசு!
2020-08-29@ 14:57:51

கோலா லம்பூர்: கொரோனா பரவல் அச்சம் காரணமாக மலேசியாவுக்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வர டிசம்பர் 31 வரை தடையை நீட்டித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8.40 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 8,40,431 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 2,48,88,312 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 17,276,727 பேர் குணமடைந்துள்ளனர். அதிகபட்சமாக அமெரிக்காவில் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 60,94,544-ஆக அதிகரித்துள்ளது.
உலக நாடுகள் பலவற்றில் கொரோனா பரவல் குறைந்துவரும் நிலையில், பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்குகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதேவேளையில், அமெரிக்கா, ரஷ்யா, உக்ரைன், மெக்சிகோ, பிரேசில் போன்ற நாடுகளில் தொற்று குறையாமல் பாதிப்பும் தொடர்கிறது. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளில் கொரோனா பரவல் முற்றிலுமாக குறைந்துள்ளது. இந்நிலையில், மலேசியாவில் சுற்றுலா தொடர்பாக முக்கியமான அறிவிப்பை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. அதன்படி மலேசியாவில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வர தற்போது தடை உள்ளது. அந்தத் தடை 2020ம் ஆண்டின் இறுதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அயல்நாட்டு எல்லைகள் மூடப்பட்டிருப்பது தொடரும் என்றும் கூறப்பட்டுள்ளது. மலேசியாவில் 9306 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களில் 9030 பேர் குணம் அடைந்துவிட்டனர். 125 பேர் இறந்துவிட்டனர். தற்போது புதிய நோயாளிகள் அதிகரித்து வருவதால் மலேசிய அரசு கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகிறது. இதுகுறித்து தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த அந்நாட்டு பிரதமர் முஹையதின் யாசின், உலகம் முழுவதும் தொற்றுப் பரவல் அதிகரித்து வருவதாகவும், இங்கு நோய் கட்டுப்பாட்டில் இருந்தாலும் அவ்வப்போது பாதிப்பு ஏற்படுவதாகும் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்
பாரீஸ் ஒப்பந்தம், உலக சுகாதார அமைப்பில் மீண்டும் இணைவது உள்ளிட்ட 17 உத்தரவுகளில் பைடன் கையெழுத்து: டிரம்ப் எடுத்த நடவடிக்கைகள் தூள்தூள்
அருணாச்சலம் அருகே புதிய கிராமம்: எங்கள் எல்லைக்குள் வீடு கட்டினால் என்ன தவறு: சீனா திமிர் பேச்சு
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் பயங்கரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்பு தாக்குதலில் 28 பேர் பலி: 73 பேர் காயம்
பிலிப்பைன்ஸ் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..! ரிக்டர் அளவில் 7-ஆக பதிவு: புவியியல் ஆய்வு மையம் தகவல்
அமெரிக்காவில் ஜனநாயகம் மீண்டும் வெற்றி பெற்றுள்ளது; அரசியலமைப்புச் சட்டம், ஜனநாயகம் மற்றும் அமெரிக்காவை காக்க பாடுப்படப்போகிறேன்: ஜோ பைடன்
உலக கொரோனா நிலவரம்: 20 லட்சத்தை தாண்டியது உயிரிழந்தோர் எண்ணிக்கை
ஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்!: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..!!
அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன், சாதனை படைத்த துணை அதிபர் கமலா ஹாரிஸ் பதவியேற்பு!: புகைப்படங்கள்
21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!