ராஜஸ்தான் மாநிலத்தில் செப்டம்பர் 7ம் தேதி முதல் அனைத்து மத வழிபாட்டுத் தலங்களும் திறக்கப்படும் : முதல்வர் அசோக் கெக்லாட் அறிவிப்பு!!
2020-08-27@ 10:00:36

ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலத்தில் செப்டம்பர் 7ம் தேதி முதல் அனைத்து மத வழிபாட்டுத் தலங்களும் திறக்கப்படும் என மாநில முதல்வர் அசோக் கெக்லாட் அறிவித்துள்ளார்.இந்தியாவில் கொரோனா பாதிப்பு 32 லட்சத்தை தாண்டியுள்ளது. உலக நாடுகளில் கொரோனா பாதிப்பில் இந்தியா தொடர்ந்து மூன்றாவது இடத்தில் உள்ளது. கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் லாக்டவுன் அமலில் உள்ளது. அதன்படி, பள்ளிகள், கல்லூரிகள், மத வழிபாட்டுத் தலங்கள், தொழில் நிறுவனங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன.இருப்பினும் கொரோனாவின் தாக்கம் குறைந்தபாடில்லை.
இதையடுத்து பொதுமக்கள் நலனை கருத்தில் கொன்று அந்தந்த மாநிலத்தில் தொற்றின் வீரியத்தின் அடிப்படையில், தளர்வுகள் படிப்படியாக அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ராஜஸ்தானில் வரும் செப்டம்பர் 7ம் தேதி முதல் அனைத்து மதவழிபாட்டுத் தலங்கள் பொதுமக்களின் வழிபாட்டிற்குத் திறந்துவிடப்படும் என அம்மாநில முதல்வர் அசோக் கெக்லாட் அறிவித்துள்ளார். முதல்வர் அசோக் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் சுகாதார அமைச்சர் ரகு சர்மா, தலைமை செயலாளர் ராஜீவா ஸ்வரூப் மற்றும் பிற அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
அதேவேளையில் சமூக இடைவெளி, முகக்கவசம் அணிதல் போன்ற கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பின்பற்றுவது கட்டாயம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வழிபாட்டு தலங்கள் அனைத்தையும் அடிக்கடி கிருமி நாசினி மூலம் சுத்தப்படுத்த வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்கள் வழிப்பாட்டு தலங்களில் சோதனைகளை மேற்கொண்டு அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் உறுதி செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அத்துடன், சுகாதார நெறிமுறைகள் முறையாக பின்பற்றப்படுவதையும், வழிப்பாட்டு தளங்களில் மக்கள் கூட்டம் சேராமல் இருப்பதையும் உறுதி செய்யுமாறு முதல்வர் கெஹ்லாட் உயர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். தனியார் மருத்துவமனைகளில்கொரோனா நோயாளிகளுக்கு அனுமதி மறுப்பதை கண்காணித்து நடவடிக்கை எடுக்குமாறு சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டார்.
ராஜஸ்தானில் இதுவரை 14099 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று நிலையில், 59579 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். மேலும் 992 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் செய்திகள்
சாலைக்கு இந்தி நடிகர் பெயர்
டெல்லி மக்கள் தொகையில் 50 சதவீதம் கொரோனா பரிசோதனை 1 கோடியை தாண்டியது: வரலாற்று சாதனை என கெஜ்ரிவால் டிவிட்
எம்சிடி ஊழியர்கள் சம்பள நிலுவை விவகாரம் மத்திய, மாநில அரசுகளின் பொறுப்பற்ற செயல்: உயர் நீதிமன்றம் காட்டமான விமர்சனம்
அரசு மற்றும் மாநகராட்சிகளை சேர்ந்த 550 பள்ளி வளாகங்களில் நாப்கின் எரியூட்டிகளை பொருத்த வேண்டும்: முதல்வர்களுக்கு அரசு அறிவுறுத்தல்
கொரோனா ஊரடங்கால் மூடப்பட்ட பல்கலை வளாகங்களை திறக்கக்கோரி ஆர்ப்பாட்டம்
செப்டிக் டேங்குகளை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி பலியானவர்களின் குடும்பத்துக்கு வழங்கிய இழப்பீடு எவ்வளவு?: டெல்லி அரசுக்கு என்சிஎஸ்சி ஆணையம் கடிதம்
ஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்!: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..!!
அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன், சாதனை படைத்த துணை அதிபர் கமலா ஹாரிஸ் பதவியேற்பு!: புகைப்படங்கள்
21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!