கர்நாடகாவில் வெள்ள பாதிப்பை பார்வையிட சென்ற எடியூரப்பாவுக்கு எதிர்ப்பு : உரிய நிவாரணம் வழங்கக்கோரி விவசாயிகள் போராட்டம்
2020-08-25@ 16:43:55

கர்நாடகா: கர்நாடக மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை பார்வையிட சென்ற முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு எதிராக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால், பரபரப்பு நிலவியது. ஆகஸ்ட் 2வது வாரத்தில் பெய்த கனமழையால் வட கர்நாடக மாநிலத்தில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் வட நகரம் முழுவதும் வெள்ளத்தில் மிதந்தது. இதேபோல் பலத்த கனமழையின் காரணமாக ஆகஸ்ட் மாதத்தின் முதல் வாரத்தில் பெலகாவில் சுமார் 74 கிரமங்களுக்கு 'ஹை அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
மேலும் விவசாய நிலங்கள் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கி நாசமடைந்தன. தொடர்ந்து குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதளவு பாதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் விமானம் மூலம் வெள்ள பாதிப்புகளை பார்வையிட சென்ற எடியூரப்பாவுக்கு எதிராக விவசாயிகள் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது உரிய நிவாரணம் வழங்கக்கோரி அவர்கள் தொடர் முழக்கங்களை எழுப்பினர். மேலும் கர்நாடகாவில் புதிதாக கொண்டுவரப்பட்ட நிலசீர்திருத்த சட்டத்தை திரும்பப்பெற வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கர்நாடக மாநிலம் பெலகாவியில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
மேலும் செய்திகள்
கோட்டயத்தில் பரபரப்பு; அறையில் அடைத்து பெற்றோருக்கு உணவு கொடுக்காமல் சித்ரவதை: தந்தை மரணம்; தாய்க்கு சிகிச்சை- கொடூர மகன் மீது வழக்குப்பதிவு
புனேவில் தடுப்பூசி தயாரிக்கும் சீரம் நிறுவனத்தில் தீ விபத்து...! 5 பேர் உயிரிழப்பு: சீரம் நிறுவனத்தின் சிஇஓ இரங்கல்
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமான பணிகளுக்கு கவுதம் கம்பீர் ரூ.1 கோடி நிதி...! மேற்கு வங்க ஆளுநர் ரூ.5 லட்சம் நன்கொடை
புனேவில் உள்ள கொரோனா தடுப்பூசி நிறுவனத்தில் தீ விபத்து: மீட்பு பணிகள் தீவிரம்..!
எந்த தடுப்பூசியாக இருந்தாலும் பக்க விளைவுகள் இருப்பது பொதுவானது: மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் பேட்டி
அடுத்த அதிரடி!: ஆந்திராவில் வீடுவீடாக சென்று ரேஷன் பொருள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி..!!
ஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்!: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..!!
அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன், சாதனை படைத்த துணை அதிபர் கமலா ஹாரிஸ் பதவியேற்பு!: புகைப்படங்கள்
21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!